Friday 3 October 2014

விஸ்வரூபம்.


விஸ்வ ரூபம்.

அம்மா என்றால் அதிருமடா!
அற்பர் நெஞ்சம் பதறுமடா!
தும்மல் தோன்றவும் அஞ்சுமடா!-எதிர்
துட்டன் யாரிங்கு மிஞ்சுமடா!

பெண்ணின் உருவில் பீஸ்மரடா!
தன்னில் தரும ஈஸ்வரடா!
கண்ணன் வடிவில் கடவுளடா!--அஞ்சா
விண்ணின் விஸ்வ சொருபமடா!

பெண்ணென்றுஞ் சின்ன எண்ணமாடா!
முன்னின்றும் வெல்லத் திண்ணமாடா!
பின்னம்பு விடுவதும் வீரமாடா!--நீ
பெண்ணம்பில் படுவதும் தூரமாடா!

எதிர்க்கவும் வல்லவனா அறிவாயடா!
உதிர்க்கவும் நல்லவனா புரிவாயடா!
தகுதியும் அற்றுப்பின் ஒளிந்தாயடா!--ஒரு
தொகுதியும் அற்றுநீ தொலைவாயடா!

ஆர்ப்பரிக்கும் கடலடக்க ஆசையோடா!
தூர்ப்பறிக்க இமயமலை சாயுமோடா!
தானடக்கித் தான்தோன்றும் தவம்தானடா!--புகழ்
வானடங்கா வல்லதேவி ஜெயம்கேளடா!

அன்னையவள் வடிவமே அம்பாளடா!
முன்னையவர் தருமமே எம்தாயடா!
சந்தியா கண்டதமிழ் மகள்தானடா!.--அம்மா
இந்தியா என்றதமிழ் புகழ்தானடா!


கொ.பெ.பி.அய்யா..



No comments:

Post a Comment