Saturday 18 October 2014

தாயே தமிழே வாழ்க!





தாயே தமிழே வாழ்க!

அம்மா என்னும் சொல் உதிர்த்தால்
அன்பு என்னும்  நெல் சிதறும்.
அம்மா எண்ணி உள்  நினைத்தால்
எம்மா வஞ்சமும் பல் உதறும்.

தாயே என்னும் தமிழ் பகிர்ந்தும்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே உள்ளம் உனை நினைந்தும்
தைரியம் உள்ளே வினை முனைக்கும்.

அன்னை சொல்லு வாய் மலரும்.
தன்னை வெல்லும் தான் புலரும்.
விண்ணைத் தொடவும் எண்ணித் துணியும்
மண்ணில் பகையும் முன்னே பணியும்.

மாதா உந்தன் மகிமை முன்னால்.
சாதா எல்லாம் சகலமும் தன்னால்.
வேதா இல்லம் ஆலயம்
நின்றும்
சோதனை வெல்லும் போதனை சொல்லும்.

பெற்றாள் மடியினில் பிள்ளை முகம்போல்
பெற்றார் மகிழ்வதும் உன்னடி நிழல்கீழ்.
நற்றமிழ் சிறப்பதும் கற்றது போலே
மற்றென்ன அறிவதும் உற்றதும் மேலே!


தாயே வாழும் தமிழே வாழ்க!
நீயே ஆளும் நிலையே வாழ்க!
நேரே நிசமே சீரே வாழ்க!
பாரே வசமே தீரே வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment