Friday 17 October 2014

தர்மம் மீணாடது.


மீண்டது தர்மம்!

கொதித்துத் துடித்த தமிழகம்
குளிர்ந்தது இன்று காண்!
மிதித்துக் கிடந்த தருமம்
முகிழ்த்து மீண்டது காண்!

கண்ணைக் கட்டிக் கொண்டவள்
காந்தாரிப் பேதையோ அவள் ?
விண்ணைமுட்டியும் வெளிப்படுவாள்
விளங்கும் நீதியரசி அவள்.

எண்ணும் நீதி என்றும்
எழுதப்படும் இதயங்களில்.
பின்னும் வலைகள் எல்லாம்.
என்ன செய்யும் மூச்சுக்காற்றில்?

மக்கள் சக்தி ஒன்றுகூடி
மனம் விளங்கி தீர்ப்பெழுதி
எக்காலும் எம் தலைவி
எனப்பதித்தோம் வாழ்வுறுதி,

இன்றுதான் எமக்குத் தீபாவளி.
வென்று வந்தாள் மாகாளி.
கொண்டாடும் தமிழ் நாடே!
நன்றி பாடும் நீதிக்கே!

 யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "

எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அதை அழிக்க நான் பிறந்து வருவேன் என்ற கிருஸ்ண பரமாத்மாவின் கீதை வரிகளுக்கிணங்க அன்னை அதர்மத்தை அழிக்க இன்று மீண்டு(ம்) வருகிறார்....

கொ.பெ.பி.அய்யா.
http://aiadmkpaadalkal.blogspot.in/search?updated-max=2014-10-17T14:48:00-07:00&max-results=7&start=7&by-date=false

No comments:

Post a Comment