Tuesday 3 May 2016

நமது இலக்கு கட்டுரை.

நமது இலக்கு 234/234.

என் அன்புக்குரிய கழக நண்பர்களே!சகோகர்களே!பிள்ளைகளே!பிரியமானவர்களே! தேர்தல் வெகுவிரைவுடன் நம்மை நெருங்கி வருகிறது.இத்தேர்தலில் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட நிசமான ஒன்றுதான் என்றாலும் கூட அந்த மமதையில் மயங்கிக் கிடந்துவிடக் கூடாது.ஏனெனில் அரவமில்லா அந்தச்சந்தடி சாக்கில் நம்மைச்சுற்றி நம்மையே கண்காணித்துக்கொண்டு வேளை பார்த்து திருடக்காத்திருக்கும் திருட்டுப்பூனைகளிடமும் நாம் எச்சரிக்கையுடன் கவனமாக உசாருடன் விழிப்போடு விழித்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.இவ்வாறு நான் தங்கள் உணர்வுகளை கிள்ளிவிடுவதும் எந்த அளவுக்கு அவசரமானது என்பதும் தற்போது நம்மைக் குழப்பிவிடும் தந்திர வேலைகளை விலை போகும் சில ஊடகங்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு சாதுர்யமாகச்செய்து கொண்டு எதிரிகளான அவர்கள் நம்மை முந்துவதுபோல் ஒரு பொய்யான மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு சித்துவேலை செய்துவருகிறார்கள்.அவ்வாறான படுபாதகச்செயல்களளுக்கு சில ஊடகங்களும் துணை போகின்றன என்பததுதான் வேதனையிலும் வேதனை. 
தினமலர் நியுஸ் 7 வெளியிட்டுள்ள கருத்து கணிப்பை பார்க்கும் போது கடந்த தேர்தலில் நக்கீரன் வெளியிட்ட கருத்து கணிப்பு தான் நினைவுக்கு வருகிறது... எக்சிட் போல் கருத்து கணிப்பு என்று திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வந்தது. இரண்டு நாட்களில் தேர்தல் முடிவு வந்து நக்கீரன் முகத்தில் காறி துப்பியது.
அதையடுத்து முகத்தை துடச்சிட்டு நக்கீரன் வெளியிட்ட விளக்கம் தான் வரலாற்று சிறப்புமிக்கது. அதாவது நாங்க திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் எங்களிடம் கருத்து தெரிவிப்பவர்கள் திமுக ஆதரவானவர்களாக இருந்ததால் திமுக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியிட வேண்டிய நிலை வந்தது...
***நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்பது எவ்வளவு தூரம் உண்மையாயிற்று என்பதை அறிந்தோமே..இந்த பத்திரிககளும் சரி தொலைக்காட்சி ஊடகங்களும் சரி..
த்தூ..நாளையே பாருங்கள் தேர்தல் வெற்றிக்கு பின்னர்..
அலச ஆரம்பிப்பார்கள்..எப்படி இப்படி ஓர் முடிவுகள் வந்தது என்று...நாலு கேனப்பயலுகள கொண்டுவந்து உட்காரவைத்து ..
அலசுவார்கள்..சுய கவுரவம் இல்லாத இந்த ஊடகங்கள்..
ஒருபோதும் அவைகள் நமக்கு ஆதரவாக ஒருபோதும் எழுதியதே கிடையாது..எம் ஜி ஆர் காலம்தொட்டு..இன்றுவரை..நமக்கு எதிரிகளே இந்த ஊடகங்கள்தான்..
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..எதிர்பாருங்கள்..கடந்த கால வெற்றிகளை காட்டிலும்..இந்த தேர்தல் சரித்திர வெற்றியை அடையத்தான் போகிறது..
இந்த தேர்தல் முடிந்தும் இதை தான் இப்போது கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்கள் விளக்கமளிக்கும்..என்பதில் ஐயமில்லை.
தேர்தல் நிலவரம் குறித்து வெளிப்படையாகவே சில தகவல்களை நானும் சொல்லியாகவேண்டும்.. களப்பணியாளர்கள் தயவு கூர்ந்து இப்பதிவுகளை படித்து தெரிந்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் 186 தொகுதிகளை அஇஅதிமுக வெல்லும் என்ற நிலை இருந்தது. அந்த நிலை இன்று குறைந்துக்கொண்டே வருகிறது. அதற்காக திமுகவுக்கு அந்த தொகுதிகள் செல்கிறது என்று நினைக்கவேண்டாம். அவை இழுபரி தொகுதிகளாக மாறி வருகின்றன. இன்றைய சூழலில் அம்மா வந்து பேசிவிட்டார், இனி அம்மாவே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்ற ஒரு எண்ணம் அதிமுக நண்பர்கள் மத்தியில் வந்துவிட்டது. அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மா வந்தார், பேசினார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தொகுதி மக்களிடம் நம்பிக்கை தரும்படியான வகையில் வேட்பாளர்கள் நடந்துக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் தமிழகத்தில் 40% தொகுதிகளில் அஇஅதிமுகவினர் களப்பணிகளை மேற்கொள்வதில் தோய்வு ஏற்பட்டிருக்கிறது. இதில் 14% களப்பணியாளர்கள் தங்களின் பணிகளை இன்னும் வேகமெடுத்து செய்யவேண்டும். அதைத் தவிர்த்து 26% களப்பணியாளர்கள் அம்மா வந்துவிட்டார், இனி அவரே பார்த்துக்கொள்வார் என்ற கருத்தை மாற்றிவிட்டு மீண்டும் களப்பணிகளை துவக்கவேண்டும். வெளிப்படையாக இப்போதைய சூழலில் அதிமுக களப்பணியாளர்கள் தங்களது பணிகளை நாளை முதல் சுறுசுறுப்புடன் மேற்கொள்ளாவிட்டால் மெஜாரிட்டி பெறுவதில் கூட கடினம் ஏற்படலாம். இது எச்சரிக்கை பதிவு. சுறுசுறுப்புடன் பணியாற்றினால் தாராளமாக 180 + என்ற நிலையை எட்டலாம். குறிப்பாக ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் களப்பணிகளை சுறுசுறுப்பாக செய்யவேண்டும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, விருதுநகர் பகுதிகளில் களப்பணிகளை தொண்டர்கள் மீண்டும் தொடங்கி ஆரம்பிக்கவேண்டும்.
-
புரியவேண்டிய கழக நண்பர்களுக்கு புரிந்தால் போதும். இன்றைய நிலையை நான் விளக்கிவிட்டேன். இனி எல்லாமே உங்கள் கைகளில் தான் உள்ளது.

தினமலர் 7 News செய்த கருத்து கணிப்பு உண்மையோ அல்லது பொய்யோ அது தேவை இல்லாத கதை.
ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பொறுப்பாளர் முதல் தொண்டன் வரை உங்கள் கடமையை ஒழங்காக செய்யுங்கள்.
நமது லட்சியம் 234 தொகுதி யிலும் வெற்றி பெறுவது என்பது. வரலாறு படிப்பதற்காக.
இது ரொம்ப Easy method.
ஒவ்வொரு தொண்டனும் உங்க வாக்கை அஇஅதிமுக வுக்கு போடுங்கள் முதல் வேலையாக.
அப்புறம் ஒவ்வொரு தொண்டனும் இரண்டு வாக்காளர்களை அஇஅதிமுக வுக்கு ஒட்டு போட செய்யுங்கள்.
கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் நிறைந்த கட்சி அஇஅதிமுக.
2*2= 4 அதாவது 4 கோடி.
ஆனால் இதை ஒவ்வொரு தொண்டனும் செய்ய வேண்டும் அப்போ தான் இது சாத்தியம்.
ஒவ்வொரு பொறுப்பாளர்களும் விருப்பு வெறுப்பின்றி புரட்சித் தலைவி அம்மா தான் வேட்பாளராக ஒவ்வொரு தொகுதியிலும் போட்டி இடுவதாக எண்ணிப் பணி புரிய வேண்டும்..

நேற்று நமது நண்பர் ஒருவர் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்து இறங்கும்போது அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டாராம்..இந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று..
அதற்கு அவர் தயங்காமல் சட்டென்று ,"தமிழகம் பொறுத்தவரை அம்மாதான் ஆளும் மீனாட்சி"என்று  சொன்னாராம்.
மீண்டும்நண்பர்".சார் உறுதியாக அம்மாதான் பதவிக்கு மீண்டும் வருவார் என்று .நம்பிக்கையோடு சொல்கிறீர்கள் 
‪#‎அம்மா‬ என்றால் யாருங்க என்றாராம்.அதற்கு  அந்த ஆட்டோ ஓட்டுனர் சென்னைமொழி பிள்ளைத்தமிழில்,
"இன்னா சார் உலகம் முழுக்க #அம்மா என்றாலே நம்ம தமிழக முதல்வர் அவர்களைத்தான் சொல்வார்கள்", என்றாராம்.-அசந்துபோய்விட்டாராம் நமது நண்பர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி #அம்மா அவர்கள் சொன்னதுபோல..தனது பெயரையே மறந்துபோகும் அளவுக்கு #அம்மா என்கிற சொல் மட்டுமே இனி தமிழகத்தில் நிலைத்து நிற்கும்.
வரும் 2016 தமாழக சட்டமன்ற பொது தேர்தலில் இமாலய வெற்றி பெற்று #அம்மா அவர்கள் பதவி ஏற்ப்பு பிரமாணத்தின் போது உறுதியாக கூறுகின்றேன்..
ஜெயலலிதா எனும் நான் என்கிற வார்த்தையை மறந்து...
#அம்மா என்கிற நான் என்றே பதவி பிரமாணம் ஏற்பார் என்றே உறுதியாக நம்புகின்றேன்..
மக்களின் மனதில் #அம்மா நீக்கமற நிறைந்துவிட்டார்.
எந்த அரசு ஆண்டாலும் அதிருப்தி இருக்கத்தான் செய்யும். ஒரு குடும்பத்துக்குள்ளேயே எல்லோரையும் திருப்தி செய்வது கடினம் எனும்போது, ஏழரை கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் எல்லோரையும் திருப்தி செய்வது கடினம். அதிலும் பதவி வெறி கொண்டவர்கள் எதிரில் இருக்கும் நேரத்தில், மக்கள் திருப்தி அடைந்தாலும், எதிரிகள் விட மாட்டார்கள்.
ஆனால் ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டால் அது கண்டிப்பாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
அம்மா ஆட்சியில் ஒரு சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால் பொதுவான மக்களுக்கு வெறுப்பு இல்லை. மாறாக நம்பிக்கை இருக்கிறது.
லஞ்சம் என்பது கடைகோடி ஊழியன் வரை புரையோடி இருக்கிறது. அதை ஒழிக்கவேண்டுமென்றால் மத்திய அரசு பல கடுமையான சட்டங்களை கொண்டுவரவேண்டும்.
ஆகையால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. அப்படியிருக்க லஞ்சத்தை காரணமாக கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
அதிமுகவைவிட திமுக சிறந்த ஆட்சியை தரும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு சுத்தமாக இல்லை.
அதிமுகவுக்கு முக்கிய பலம்
கட்சி ஓட்டு + ஏழை மக்களுக்கு சில அத்தியாவசிய திட்டத்திம் கொடுத்து கவர்ந்ததால் + திமுக போல் அராஜகம் செய்யாமல் அமைதியான ஆட்சி கொடுத்தது+ மின்சாரம் + தண்ணீர்
.
திமுக பலம்
கட்சி ஓட்டு + அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டு
.
மநகூ பலம்
எதிர்ப்பு ஓட்டு மட்டும் தான்... அந்த ஓட்டு திமுக கிட்ட இருந்து பிரிக்குற வேலைய பார்த்தா மட்டும் போதும் அதுக்குமேல யோச்சிக்கிற அளவுக்கு ஒர்த் இல்ல
அந்த தர்மபுத்திரனே ஆண்டாலும் அதிருப்தி என்பது இல்லாமல் போகாது...
அதுபோலவே அதிமுக ஆட்சியில் சில பின்னடைவு இல்லாமல் இல்லை.. அப்படி சொல்ல நான் ஒன்றும் நடுநிலையாளன் அல்ல..
ஆனால் அந்த அதிருப்தியையே மக்களின் வெறுப்பு அலையாக கற்பனை செய்து கொண்டு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அவை ஒன்றும் 1, 76000 கோடி ஊழல்கள் அல்ல.. எல்லா அரசுகளிலும் ஏற்படும் இயல்பான நிர்வாக சறுக்கல் மட்டுமே..
இந்த சாதாரண அதிருப்தியை மேலும் "தங்களுக்கு ஆதரவாக திரட்டுகிறேன் பேர்வழி " என போலி கருத்து திணிப்பு வெளியிட்டு அதன் மூலம் பெரிய ஆதரவு வளர்வதாக காட்டிக் கொண்டதில், அந்த திணிப்பில் பட்டவர்த்தனமாக தெரிந்த தவறுகளை கண்டு "மதில் மேல் பூனை" என நின்ற வாக்காளர்கள் "மீண்டும் இந்த குடும்பமா? "என்று அதிமுக பக்கம் தம் மனதை ஸ்திரப்படுத்தி விட்டனர்.பாவம்!
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதற்கு நன்றி.அம்மாவின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வந்தபின் நிலைமை தலைகீழ் மாற்றம் ஏற்படும் என்பதே உறுதி நன்றி!.
வெற்றி நிச்சயம்,
எம்ஜியார் நாமம் வாழ்க!
அம்மா சாதனை வெல்க!

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு.நன்றி.பால்மீரன்,venkat swami natan,அசோக்,மற்றும் pirabuM

No comments:

Post a Comment