Saturday 21 May 2016

சாதனைப் பெண்மணி கட்டுரை.

சாதனைப் பெண்மணி சரித்திர நாயகி அம்மா.

சாதிக்கப் பிறந்த அம்மா பல சாதனைகளில் சரித்திரம் படைத்தது சாதாரண விடயம் அல்ல.அம்மாவின் சாதனைகள் சிலமட்டும்தான் இங்கே காண்போம்.

#நமது புரட்சித் தலைவர் 1987ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நமது கழகம் தலைமை ஏற்று நடத்த பொறுப்பான தலைமையின்றி தடுமாறிய அந்த இக்கட்டான காலக்கட்டத்தில் புரட்சித் தலைவி அம்மாதான் துணிந்து முன்னின்று பட்டி தொட்டி கிராமங்கள் தோறும் சென்று கண்துஞ்சாது அரும்பாடுபட்டு பரப்புரை செய்து வெற்றிக்கனியை வென்றெடுத்து சிகிச்சை முடித்து வந்த நம் பொன்மனச்செம்மலிடம் காணிக்கையாகப் பரிசளித்தார் என்பதை யாரும் சாமான்ய விடயமாகக் கருதி மறந்திடவும் முடியுமா?.

#புரட்சித்தலைவர் மறைவுக்குப்பின் எதிரிகளின் சூழ்ச்சிச் சதியால் நமது இயக்கம் இரண்டாக உடைக்கப்பட்டு நமது வெற்றிச்சின்னம் இரட்டை இலையும் அண்ணாவின் முத்திரை பதிக்கப்பட்ட நமது இயக்கத்தின் வெற்றிக்கொடியும் முடக்கப்பட்டன.ஆனால் அம்மா தனது ஓயா உழைப்பாலும் திறமையாலும் அயரா முயற்சியாலும் உடைபட்ட இயக்கத்தை ஒன்றிணைத்துக் காத்து இழந்த கொடியையும் சின்னத்தையும் மீட்டெடுத்த பெருமையும் புகழும் அம்மாவின் சாதனைதான் என்பதையும் எவராலும் மறுக்க முடியுமா?இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தான் இழந்த சின்னத்தையும் கொடியையும் மீட்டெடுத்த வரலாறு உண்டா?நூறாண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் பேரியக்கத்தால் கூட தான் இழந்த இராட்டை முத்திரை பதித்த மூவண்ணக்கொடியையும் இரட்டை மாட்டு சின்னத்தையும் மீட்டெடுக்க வக்கின்றி எத்தனையோ சின்னங்கள் மாறி மாறி இன்று கை சின்னத்தில் வந்து நிற்கின்றது.சிதறுண்ட அக்கட்சி இன்னமும் சிதறிக்கொண்டுதான் சிதைகின்றது என்பதும்தானே உண்மை?.

#புரட்சித்தலைவர் காலத்தில் கூட கால்பதிக்க முடியாதிருந்த சென்னையைத் தனது கோட்டைக் கொத்தளமாக்கி மாநகரத்தையும் கைப்பற்றி இன்று பெருநகரமாக்கிய சாதனை அம்மாவின் அற்புதம் என்பதையும் யாரால் மறுக்க முடியும்?

#தமிழமெங்கும் விரிந்து பரந்திருந்த ரௌடிகளின் சாம்ராஜ்யத்தை வேரறுத்து கட்டப்பஞ்சாயத்து,நில அபகரிப்பு,கந்துவட்டிக் கட்டாய வசூல் ஆகிய கொடுமைகளை ஒழித்து தமிழகம் ஒரு அமைதி பூங்காவாக அழகு பெற்றதும் அம்மாவின் அருஞ்சாதனை அல்லாது யாருடைய சாதனை?

#அன்று வயிற்றுக்குச்சோறில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்றும் மகாகவி கோவக்கனல் தெறிக்கப் பாடினான்.அவன் ஏக்கத்தை உணர்ந்தஅம்மாதான்இன்றுதமிழகத்தில்பிச்சைக்காரகள்இல்லை.பட்டினிச்சாவில்லைஎன்ற நிலையை உருவாக்க.ஆலயங்களில்  அன்னதானம்.அம்மா உணவகம் ஆகிய அன்னதான மையங்களை அமைத்து அன்னபூரணித் தாயாக அம்மா விளங்குகிறார்.இதைவிட ஏழைகளின் வயிறு குளிர வேறென்ன சாதனை இவ்வுலகில்?

#இது வரை அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தனது வாக்கு சதவிகிதத்தை நிலை நிறுத்திகொண்டதில்லை.ஆனால் அம்மாவின் தலைமையில் உள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இயக்கம் மட்டும்தான் தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு சதவிகிதத்தை உயர்த்திக்கொண்டே உள்ளது.இதைவிட அம்மாவின் சாதனைக்கு வேறென்ன
சாட்சி வேண்டும்?

#அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மாவின் மீது சுமத்தப்படும் அத்தனை பொய் வழக்குகளையும் சட்டபூர்வமாகவே சந்தித்து அவற்றை பொடிப்பொடியாக்கி வெற்றி காண்போதோடு மட்டும் அல்லாமல்.தனது மாநிலத்தின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்ப்படும்போதெல்லாம் அவற்றையும்வழக்குமன்றங்களில்போர்வழக்காடிவென்றெடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாற்று நீர்மட்டத்தை உயர்த்தியதும் மற்றும் காவேரி நீர்மேலாண்மை வழக்கு மற்றும் கச்சத்தீவு மீட்டெடுக்கும் வழக்கு போன்ற சட்டரீதியான போராட்டங்களையும் அஞ்சா நெஞ்சுறுதியோடு முன்னெடுக்கும் சாதனையாளர் அம்மாவைத் தவிர தமிழக அரசியலில் வேறொருவர் எவருளார்?

#தமிழக அரசியல் வரலாற்றில் கர்மவீரர் காமராசர்,புரட்சித்தலைவர் எம்ஜியார் போன்ற அமரத் தலைவர்களுக்குப்பின் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அரிய சாதனை நிகழ்த்த அம்மாவைத் தவிர எவரினி பிறப்பார்?

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment