Friday 6 May 2016

அன்னை அறிவார்

அன்னைக்குத்தான் தெரியும்..

பிள்ளைக்கென்ன வேண்டும்-ஒரு
அன்னைக்குத்தான் தெரியும்.
சொல்லியதும் கொஞ்சம்-அம்மா
சொல்லாததும் செய்தார்.

அம்மா திட்டம் இன்றும்-மக்கள்
அலையும் போக்கை தவிர்த்தார்.
மக்களைத் தேடி அரசு -குறை
முறைகைகளைக் கேட்க  பணித்தார்.

படிப்படியாய் மதுவை-அம்மா
முடித்திடுவார் ஒழித்து.
திருந்துவதும் பொறுப்பு-திருத்தம்
பொருந்துவதும் நடப்பு.

அடிப்படையாம் கல்வி-அதை
அடைவதுதான் செல்வம்.
படிக்கமட்டும் படிக்க-அம்மா
கொடுக்குந்துணை தெய்வம்.

ஒடுக்கப்பட்ட பெண்ணும்-தன்னை
விடுக்கவழி முனைந்தார்.
பயணத் தானி தந்தும்-அம்மா (தானி--auto)
பயிற்றப் பெண்ணை அழைத்தார்..

தூணாய் தாங்கும் உழவன்-கடனில்
வீணாய் ஏங்கும் நிலைமை.
தானாய் நீங்கவும் கடன் நீக்கி-அம்மா
மாணாய் பாங்கும் அமைத்தார்..

காலை உண்டியும் பள்ளியில்-அதி
காலை வந்திடும் பிள்ளைகள்.
காலைப் பசியை போக்கினார்-அம்மா
ஊழை வென்ற தாயரவர்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment