Monday 18 April 2016

சில மாறுதல்கள்.

தேர்தலுக்குப்பின் சில மாறுதல்கள்.!

தேர்தலுக்குப்பின் சிலமாறுதல்கள் செய்யும் திட்டம் அம்மாவின் சிந்தையில் உதயமாகிக் கொண்டிருப்பதை உளவியல் ஓரளவு அறிந்த என்னால் உணர முடிகிறது.குறிப்பாக உள்ளாட்சியின் மீது அம்மா உன்னிப்பான கவனம் கொண்டுள்ளார் என்பதும் எனது ஆழ்ந்த அறிவுக்கு எட்டுகிறது.உள்ளாட்சிகள் எல்லாம் நல்லாட்சிகளாக மலர அம்மா அதற்கான ஆய்வுப்பணிகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள ஆயத்தமாகிவிட்டார் என்பது எனது சிற்றறிவுக்கும் எட்டுகிறது.ஆளும் கட்சியின் ஆக்கப்பூர்வமான அடிப்படைத் திட்டங்களும் அதன் தேவைகளும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தைக் கவனத்தில்கொண்டுதான் தீட்டப்படுகின்றன.அவ்வாறு செயலுருப்பெறும் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டுமானால் அதற்கான முழுப்பொறுப்பும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் கடமையாகத்தான் உள்ளது என்பதையும் அம்மா புரிந்துகொண்டுதான்  தனது கவனத்தை அப்பக்கமாக திருப்பியுள்ளார் என்பதையும் அறிவு சார்ந்த பெருமக்கள் அரசல்புரசலாக பேசிக்கொள்வதும் எனது செவிப்பறையை மெல்லவே தட்டுகிறது.

ஆளுங்கட்சி சாராத மற்றும் ஆளுங்கட்சியிலும் சில சுயநலப் பேர்வழிகள்
ஆளுங்கட்சியின் நற்பேர் கெடும் வகையில் செயல்படும் விதங்கள் நடுநிலையாளர்களை முகம் சுளிக்கவைத்துள்ளது என்பதையும் அம்மா உளவுத்துறை மூலம் அறிந்துகொண்டுதான் அதற்கான தருணம் பார்த்துக்கொன்டுள்ளார்.அதுதான் தேர்தலுக்குப்பின் சில மாறுதல்கள் என்ற
அதிரடி திட்டங்களில் முதன்மையான ஒன்றாக இருக்கும் என்றும் நாம் நம்பலாம்.

ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளை ஒருமுறை எச்சரிக்கைக்கை செய்து தங்களை திருத்தம் செய்துகொள்ள வாய்ப்பளித்தார் என்பதையும் நாம்
அறிவோம்.எனவே ஏழை மக்களின் இதயங்களில் என்றென்றும் தாயாக விளங்கும்  அம்மாவின் நல்லாட்சிபோல் உள்ளாட்சிகளும் நல்லாட்சிகளாக மலரும் என்பதில் ஐயமில்லை.மாறுபடும் உள்ளாட்சி எதுவானாலும் செல்லாட்சி அதுவாகும் என்பதிலும் பொய்யுமில்லை.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment