Wednesday 13 April 2016

சித்திரை மீட்ட புரட்சித் தலைவி.

சித்திரை மீட்ட புரட்சித்தலைவி.

சித்திரை மீட்ட புரட்சித் தலைவி.
இத்தரை போற்றும் எங்கள் தலைவி.
முத்திரை நாட்டும் மொழியுயர்க் கலைவி.
பத்தரை தங்கம் தமிழினத் தலைவி.

முந்திப் பிறந்த முன்னைத் தமிழே!
பிந்திய மொழிகட் கும்நீ அன்னையே!
உந்தன் ஒலியிலா எந்த மொழியுமே!
இந்த உலகினில் கண்ட திலையே!

நாள்கள் வாரம் வருடம் தான்.
கோள்கள் நேரம் பொருத்தம் தான்.
காலம் கணித்த தமிழே தான்.
ஞாலம் வழுத்தும் அறிவே தான்.

கருவிகள் அறியாக் கால மதில்
அறிவியல் அறிந்த சீல மதில்
வானம் ஆய்ந்த வல்லமை யதில்
ஞானம் சித்திரை உள்ளமை பதில்.

சித்திரை என்பதும் அறிவென் போம்
அத்தினம் மன்னுயிர் நிரையென் போம்.
புத்தியில் கணிதம் பூத்த தினம்
நித்தியத் தமிழுன்னை போற்றுந் தினம்.

கூடி வாழச் சொல்லி சொல்லி
பாடி வந்த சித்திரையே!
கோடு இல்லா உறவு கொண்டும்
ஓடி வாயேன் இளந்தமிழே!

சித்திரை போற்றுதும் சித்திரை போற்றுதும்.
முத்திரை போன்றதும் சித்திரை போற்றுதும்.
தமிழெனத் தயவென தகையெனப் போற்றுதும்.
அமிழ்தென அறிவெனச் சித்திரை போற்றுதும்.

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh725KwUGFuD_LqnnQMqJDDg1T3Xq_2aNVU5dzn7yAGT9xFCcWEd5Kq5qwnLHITk7yIAoHHhD07MHG1I0TD1uusHk5GVqR37W2vV5JsrMSFSdtV7JMzX_TWgaBSxHkFSyFPrSb95CFdLEw/s1600/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+(1).jpg

No comments:

Post a Comment