Friday 30 October 2015

அஞ்சா நெஞ்சம் அம்மா.

போர்க்காலம்.

தேர்தல் காலம் என்றால்-ஒரு
போர்க் காலம் போலத்தான்.
நேரில்லா பொய்க் கணைகள்--மொழி
கூர் கொண்டு தீய்த்திடுவோம்.

நெஞ்சம் தனை நிமிர்த்திவிட்டால்-எதிர்
எஞ்சும் வினை ஏது முன்னால்.
விஞ்சும் எழுச்சி துணி வொன்றால்--பகை
அஞ்சும் அதிர்ச்சி  அணி நின்றால்.

இட்டுக் கதைகள் ஏய்ப்ப தெல்லாம்-சும்மா
விட்டுக் கணைகள் வேடம் செய்யும்.
எட்டி உதைத்து முன் நகர்ந்தால்--கை
கட்டிப் பதைத்து பின்தயங்கும்.

ஊளை நரிக் கூட்டம்தான்--பயம்
வாலைக் குறி ஆட்டும்தான்
பார்வைப் பொறியில் பட்டும்தான்--நடுங்கி
நாவை ஒடுக்கி ஒடும்தான்.

அம்மா நமது ஆன்ம சக்தி--உயிரில்
நின்று நிறைந்த ஆழ்ம பக்தி.
எம்மாம் படைதான் எமக்கு நேர்!---நாம்
தும்மல் விடுத்தால் துதிக்கும் பார்!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment