Sunday 7 September 2014

எல்லாம் பொய்யோ?!


பேய்களுக்கென்ன புரியும்?.

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்தும்
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் துறந்தும்.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்தும்
அமைதி நிறைந்து வாழ்ந்ததும் பொய்யோ!.

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்தும்
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்தும்
நம்பிக்கை தன்னில் நாளும் வாழ்ந்தும்
நன்னிலை நின்று வாழ்ந்ததும் பொய்யோ!

அச்சம் அற்ற நம்பிக்கை கொண்டும்
உச்சம் காண எண்ணில் துணிந்தும்.
துச்சம் என்றே தூரம் மறந்தும்.
எச்சம் வாழ வாழ்ந்ததும் பொய்யோ!

தம்மைது தாழ்த்தும் தாழ்மை அகற்றி
செம்மை ஏற்றும் உள்ளறி வேற்றி
பின்னை பயத்தின் பேதமை விடுத்து
நன்மை முயன்று வாழ்ந்ததும் பொய்யோ!

பொய்யான சொந்தம் போனதோ அய்யோ!
மெயுயான சொந்தமே மேலெள மெய்யோ!
வந்ததெல்லாம் சொந்தமென ஆகுமோ!
தந்தவரை தானது பந்தம் போலுமோ!

இரத்தம் ஒட்டா ஒட்டு வெறும் ஒட்டுத்தானோ!
பற்றும் வரை பற்றிவிட்டு விட்டோடுமோ!
பணம் பாரத்து கூடுவதும் கூட்டமோ!
பிணமாக்கி ஓடுவதும் பாசமோ!

எடுப்பார் கைபிள்ளை சிறப்பார் இல்லை.
தொடுப்பார் உறவெல்லாம் பொறுப்பார் இல்லை.
இடையிலே வந்த சொந்தம் எடை சபோடத்தான்
கிடைப்பது கிடைத்துவிட்டால் நடைபோடத்தான்.

வண்ணத்துப் பூச்சியோ வளறும்வரை பொறுக்கும்.
தன்னைத் தூக்க வளர்ந்தவுடன் கூட்டை.
.அறுக்கும்.
பழகிவந்த சொந்தமெல்லாம் பயணம் போலத்தான்..
இடம் வந்தால் இறங்கி விடும் அது வரைக்குத்தான்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment