Monday 15 September 2014

எம்ஜிஆர் சின்னம்.












எம்ஜி யாரு தந்த சின்னம்
----தெம்மாங்கு-----

பெண்:--
கட்சிக் கரை வேட்டி கட்டி
கண்டு ஒட்டு கேக்கும் மச்சான்.
கச்சிதமா எம் ஜி யார
கண்குளிரக் காண வச்சான்.
கண்ணு படும் சாமி-- காலடி
மண்ணு எடு பூமி.

ஆண்:-
ரெட்ட இலை குத்தி வச்சி
வட்டக் கொண்ட நிறுத்தி மச்சி
நம்ம கட்சி சேலை கட்டி
அம்மா போல வெரலக் காட்டி
அசத்துறைய குட்டி—நீ
ஒசத்தி வெல்லக் கட்டி.

பெண்:-
அம்மா போல யாரு உண்டு
ஆட்சி செய்வார் கூறு ஒன்று.
சும்மா கிடந்த காடு அன்று
சொர்க்கம் ஆச்சு நாடு இன்று.
ரெட்ட இலை சின்னம்--வீசி
பறக்கும் கொடி அன்னம்.

ஆண்:-
சந்தியாவின் மகளைப் போல
இந்தியாவில் யாரும் இல்ல.
சிந்து கங்கை காவேரியும்
சேர்ந்து வரும் செழிக்க
கை எடுத்தேன் வணங்க.—இது
பொய் இல்லையே அணங்கே!

பெண்:-
முதல் இடத்தில் முந்தி வந்து
முன்னே நின்ற தமிழகம்தான்
சதிகார கூட்டம் ஒன்றால்
விதிமாறி போன அன்றால்
அதிகாரம் மாறி --நாடு
அசந்த துதான் கேடு.

ஆண்:-
எம்ஜி யாரு தந்த சின்னம்.
இதயமெலாம் மின்னும் எண்ணம்.
ஏழை வாழ எழுந்த சின்னம்.
இரட்டை இலை என்னும் வண்ணம்.
அம்மா கையப் பாரு---தெய்வம்
அரவணைக்கும் சீரு

பெண்:-
கேடு இனி கூடாதுன்னா.
நாடு நலம் அம்மா தான்னா
பாடு படு துணிந்து ஒண்ணா
ஓடிவிடும் எதிரி தன்னால்.
கூடும் இடம் பூத்து.—ஒட்டு
போடு இலையைப் பாத்து.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment