Monday 14 September 2015

இதய தெய்வமே போற்றி போற்றி.

இதய தெய்வமே போற்றி!போற்றி!

இந்தியாவின் இதயம் தமிழகம்--எங்கள்
இதய தெய்வம் அம்மா!
சந்தியா அன்னை  வள்ளல்--தந்த
தங்கத் தாரகை அம்மா!
இதய தெய்வமே போற்றி!போற்றி!

அம்மாவின் தமிழ் நாடு வாழ்த்து.
--------------------------------------------------
தருவேயருளே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் அம்மா வாழ்க!

பல்லவம் கொங்கு பாண்டியம் நாஞ்சில்
வல்லவ சேது ஈழம் சோழம்
சேரம் செழித்த இலக்கியத் தமிழகம்
சீராம் சிறப்பாம் அம்மா வாழ்க!

காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை பெரியாறு
பூமூன்று விளைய பொங்கிடக்கருணை
நீ தந்தாளும் வளநாடு வாழ்க!

வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள்
சங்கம் பாடும் அம்மா வாழ்க!

மேற்கும் கிழக்கும் மலைத்தொடர் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
தீர்க்கம் பொழிலாம் அம்மா வாழ்க!

இனிக்கும் தன்மை இயலிசை நாடகம்.
கணக்கின் செம்மை தொகையும் பாட்டும்.
காவியம் காப்பியம் தொன்மை போற்றும
மேவிய செந்தமிழ் அம்மா வாழ்க!

அம்மா அம்மாதான்.
-----------------------------------
அம்மா என்றாலே திக்கெட்டும்--சும்மா
அதிருதுல்ல திக்கென்றும்.
அம்மா என்றாலே அம்மாதான்--நிலையாய்
இம்மாநில முதல்வர் அம்மாதான்.

அம்மா என்னும் அன்பின் சொல்--சிலரை
அச்சம் பற்றும் மாயமென்ன!
மம்மி என்றும் அயல் பழகியும்-தானே
தும்மலில் வெளிப்படும் அம்மாதான்.

அம்மா என்றால் சும்மாவா!-ஏழை
அன்பில் உதித்த சொல்லல்லவா!
வறுமை ஒழித்தவர் அம்மாதான்--தமிழ்
பெருமை உயர்த்தினார் அம்மாதான்.

கூலிக்கு உழைக்கும் ஏழை-- வயிறு
வேளைக்கு உணவு சாலை .
யாருக்கு விளங்கும் துயரு--இதை
பாருக்கும் சொன்னார் புரிவு.

அன்னபூரணி அம்மா திட்டம்--வேறு
எண்ண யாரினி உண்டோ சொல்.
அம்மா உணவகம் அட்சயபாத்திரம்-நன்மை
அருளிய அம்மா அம்மாதான்.

ஆலயம் தோறும் அன்னதானம்.--உண்டு
ஆற்றும்பசிக்கு அம்மா ஞானம்
பிள்ளைச் சோறும் கேட்பாரில்லை--இன்று
பிச்சை கோரும் பாவமுமில்லை.

வயது முதிர்ந்தும் சிறுமயில்லை--எவரும்
அருமை குறைந்தும் அநாதியில்லை.
ஏழை என்றொரு சொல்லிருந்தாலும்--வறுமை
ஏழ்மை என்றிங்கு துயரமில்லை.

விதிவெல்லும் உயர்நிலை மருத்துவம்--தாய்மை
கதிகூட்டும் கற்பினியர் சிகிச்சைகள்
பிறப்பும் முதலே காலந்தொட்டும்--அரசே
பொறுப்பெனும் அம்மா அம்மாதான்.

அம்மா உணவு அம்மா மருந்து
அம்மா குடிநீர் அம்மா அரங்கு
அம்மா கனவு ஆனது நினவு
அம்மா! அம்மா!அவரே அம்மா.

அம்மாவின் தொழிற் புரட்சி.
------------------------------------------
தொழில் வளற்சி மாநாடு 
பொழில் எழுச்சி தாய்நாடு.
எழில் மலற்சி வளநாடு--அம்மா
எழு புரட்சித் தமிழ்நாடு.

சிந்தனைகள் வேறில்லை 
நிந்தனைகள் பாடில்லை.
கண்டடையும் உச்சயெல்லை--அம்மா
கொண்டநடை தமிழ்நாடு.

அரசியல் வெறும்பேச்சு
விரசியல் விடும்மூச்சு
உரசாத நெருப்பாச்சு--அம்மா
புரட்சித் தொழில் தமிழ்நாடு.

பன்னாடும் கண்ணுயர்த்தும்.
பொன்னாடு என்றுயர்த்தும்.
இரண்டு லட்சம் கோடிமுதல்-அம்மா
திரட்டித் தந்த தமிழ்நாடு.

முன்னேறும் பாதையொன்றே
தன்னோட பார்வையென்றே
கொண்டாளும் நேர்மைகொண்ட--முதன்மை
அம்மாவின் தமிழ்நாடு.

மழை நீரை சேகரிப்போம்-
--------------------------------------
தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரவேண்டாம்—அதை
எண்ணிச் செய்தார் இன்றே அம்மா
இந்தியாவின் முன்னோடியாய்

கூரை நீரை பூமிக்குள் புதைத்தார்
பூமி நீரை கரைகட்டித் தடுத்தார்--மழைநீர்
ஒவ்வொரு துளியும் உயிரெனக் காத்தார். 
இவ்வையம் வாழ்த்த அம்மா உயர்ந்தார்.

இருள் விலகியது
--------------------------------
பகலிலும் சிலர்க்கு
இருட்டாய் தெரியும்.
இரவா பகலா புரியாது.-அதிசயம்
இரவும் பகலானது

உபரி மின்சாரம்
சுபமாச்சு தமிழகம்.
சபை முழங்கட்டும்
சபாஸ் அம்மாவுக்கு.


எதிரி எவருண்டு!
------------------------
எதிரிதான் எவருண்டோ!
எதிர்க்க ஒரு பொருளுண்டோ!
உதிரிகள் ஊளையிங்கோ!
விதிவழி சடங்கன்றோ!

விதியோ மரபோ! எதுவானாலும்
எதிர்க்கவும் ஓராள் இருக்கட்டும்
என்றே நாமே கொண்டுவந்தோம்
ஆனாலிங்கு ஆளில்லை காணோம்.

எங்கோ செய்யும் நகைச்சுவைகள்
இங்கும் செய்தால் சிரிக்கலாம்.
துருத்தாமல் நாவு திருத்தமாய்
உரைத்தால் ஆஹா ரசிக்கலாம்

ஊருக்கெல்லாம் பெய்யும் மழை
உமக்கும்தான் உண்டும் முறை
பாருக்கெல்லாம் அம்மாதான்
பாவம் நீவீர் சும்மாதான்.

பொச்சாப்புப் புலம்பல்கள்..
பொறுப்பில்லா ஓட்டங்கள்.
மிச்சமுள்ள தொடர்களேனும்
வருகை தந்தால் வாழ்த்தலாம்.

இந்தியாவின் முன்னோடி
எந்தநாளும் தமிழ்நாடே!
சந்தியாவின் மகளேதான்
இந்தியாவின் எதிர் காலம்.

இதய தெய்வமென்று சொன்னாலென்ன!
-------------------------------------------------------------
செய்யுந்துணை என்றுமே
மெய்கருணை கொண்டுமே-எம்மை
உய்விக்க நேர்ந்தாரை
உள்ளத்தால் அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!--பணிந்தும்
தொழுவதும் எம்பெருமை.

சொந்தங்கண்டு வாழாமல்
தன்னலமும் பேணாமல்—எம்மை
பந்தமென்று தாங்கிடும்
பாசங்கொண்ட அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!-பணிந்தும்
தொழுவதும் எம்பெருமை


கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment