Friday 15 January 2016

சங்கே முழங்கு!

சங்கே முழங்கு!

தங்கத் தலைவி சிங்கக் குரலி
எங்கள் தாயென்று சங்கே முழங்கு!
தங்குந் தமிழே திங்கள் முகமே
பொங்கும் புகழென்று சங்கே முழங்கு!

தனிப்பலம் துணிந்தார்  தன்பயம் மறந்தார்
தமிழினத் தாயென சங்கே முழங்கு!
எதிர்ப்பார் எவரோ! இமயம் இவரோ!
புரட்சித் தாயென சங்கே முழங்கு!

இடியெனப் படைகள் மழையெனக் கணைகள்
பொடியெனப் பறக்க சங்கே முழங்கு!
கடலெனக் கருணை அலையென அருளை
பொழிவதும் அம்மா சங்கே முழங்கு!

அஞ்சிக் கெஞ்சி அணியெனத் தொங்கி
ஒஞ்சோ மில்லை சங்கே முழங்கு!
விஞ்சி நெஞ்சம் விரிந்த உறவாய்
துஞ்சா தமிழினம் சங்கே முழங்கு!

முடிக்கும் உரமும் தெறிக்கும் மரமும்
விடியல் ஒளியென சங்கே முழங்கு!
படிக்கும் பாடம் பழகும் உலகம்.
வழிதான் அம்மா சங்கே முழங்கு!

விடிந்தது எமக்கு முடிந்தது வழக்கு
படிந்தது பகையென சங்கே முழங்கு!
வென்றும் சத்தியம் என்றும் முதல்வர்
எங்கள் அம்மா சங்கே முழங்கு!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment