Monday 22 February 2016

அகவை அறுபத்தொன்பது

அகவை அறுபத்தொன்பது,

அம்மாநீ நூறாண்டு வாழவே வேணும்.
இம்மாநிலம் யென்றும்நீ ஆளவே வேணும்.
அகவையும் ஆண்டுதோறும் நீளவே வேணும்.
புகழ்நின்றும் தமிழோடு சூழவே வேணும்.

சந்தியா பெற்ற மகள் சங்கத் தமிழே!
இந்தியா கற்ற புகழ் சிங்கத் துணிவே!
எம்ஜியார் கண்ட முத்து எங்கள் சொத்தே!
அம்சமே கொண்ட என்றும் முதலமைச்சரே!

அடிப்படைகள் வாழ்வதற்கு அம்மா திட்டங்கள்.
படிப்படியாய் மீள்வதற்கு பார்வைக் கட்டங்கள்.
பாரதியின் கனவெல்லாம் நினைவுகளாகும்
சாரதியாய் வந்த தாயின் பல்லாண்டு வாழ்வும்!

வேலையில்லா வெட்டிகளும் வீதியி லில்லை.
வேண்டாத பட்டினியும் விதியிலு மில்லை.
ஊளையிடும் ஊர்நரிகள் ஓய்ந்தது தொல்லை.
ஆண்டாளே அம்மாதமிழ் ஆளுகை எல்லை.

அம்மா உன்னகவை அறுபத் தொன்பது
அள்ளித்தரும் பரிசுகளோ அனைத்தும் தொகுதிகள்.
இருநூற்று முப்பத்து நான்கும் போதுமோ!
புறநாட்டும் பக்கத்து அறுவடை செய்வோம்.

கொ.பெ.பி அய்யா..


No comments:

Post a Comment