Monday 27 June 2016

கல்வி சிறந்த தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ் நாடு.

"இந்தியாவில் கல்வி சிறந்த நாடு
சந்தியாவின் புதல்வி அரசாளும் தமிழ்நாடு"
என்பதற்கு முன்னுதரணமாக இன்று அம்மாவின் தமிழாட்சி மாநிலம்
தமிழ்நாடு விளங்குகிறது.

எந்தவொரு நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறதோ அந்தவொரு நாடுதான் சகல துறைகளிலும் சிறந்துவிளங்கும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க தமிழ்நாடு கல்வி உயர்ந்த நாடு என்ற பெருமையை எட்டும் வகையில் அம்மாவின் அரசு கல்விக்கு முக்கியத்வம் கொடுத்து வருகிறது.

அனைவர்க்கும் கல்வி. கல்லாரே இல்லார் என்ற குறி நோக்கோடு நூறு சதவிகிதம் கல்வி பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான் எனும் பேரு பெற பலப்பல திட்டங்களை அம்மா தீட்டி செயல்படுத்தி வருகிறார்.அவற்றில் சில இங்கே காண்போம்:-

1)கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் இடையூறாக இருப்பது வறுமைப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெற முடியாமல் சமூகம் மற்றும் குடும்பச்சூழலின் காரணமாக இடைநிற்றல் என்பதாகும். அவ்வாறான இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் கல்விச்சாலைகளுக்கு சென்றுவரத் தேவையான விலையில்லாச்சைக்கிள்,பாடங்களைப் பதிவிறக்கம் செய்து கற்கத் தேவையான மடிக்கணினி,விலையில்லாப் பாடப் புத்தகங்கள்,காலணிகள்,சீருடைகள்,மற்றும் காலையில் உணவுக்காக காத்திராமல் சரியான வேளைக்குப் பள்ளிக்கு செல்ல ஏதுவாக ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கவும்,மதிய வேளை முட்டையுடன் சத்தான உணவு பள்ளிகளில் தொடர்ந்து வழங்கிடவும் அம்மா ஆணை பிறப்பித்துள்ளார்.

2)ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி என்ற நிலை நூறுசதவிகிதம் எட்டும் நிலையை அடைய மேலும்மேலும் உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு அம்மா உத்தரவிட்டுள்ளார்.

3) மாநிலத்தில் உள்ள 5265 பள்ளிகளிலும் கணினி வழியாக ஸ்மார்ட் வகுப்புக்களை இந்த கல்வி ஆண்டுக்குள் தொடங்கிடவும் கல்வித்துறை அம்மாவின் ஆணையால் முடுக்கி விடப்பட்டுள்ளது..

4)அரசுப்பள்ளிகளில் 5865 ஆசிரியர் காலிப்பணியிடங்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடித்து வைக்கப்பட்டவுடன் உடனடியாக நிரப்ப நூறு சதவிகிதம் அரசு தயார் நிலையில் உள்ளது.

5)9,மற்றும் 10 ம் வகுப்புக்களில் தொழிற் கல்வி பாடத்திட்டம் கொண்டு வர அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம் ஏட்டுச்சுரைக்காய் வீட்டுக்கு உதவாது என்ற நிலை மாறி இளைஞர்கள் சுயகாலில் நிற்பார்கள் என்பதும் உறுதியாகிறது.

6)அம்மாவின் ஆணைக்கிணங்க வெளியூர்களில் கல்விபயிலும் மாணவர்க்கான அரசு விடுதிகள் அனைத்தும் அனைத்துவசதிகளுடன் கூடிய
அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கும் வேகத்தில் கட்டிடப்பணிகள்
நடைபெற்று வருகின்றன.மேலும் 845 பள்ளிகளில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிடப்பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

ஒரு மாநிலம் தன் வளர்சிப்பாதையில் சென்றடையும் வேகம் சிதை படாமல் இருக்கவும், சென்றடையும் இலக்கும் எட்டப்பட வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் எனும் தடங்கல் இல்லாமல் தொடரும் பட்சத்தில்தான் வளர்ச்சி என்பதும் சாத்தியமாகும் என்பதை சரியாகப் புரிந்து கொண்ட தமிழக மக்கள் அம்மா மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க கடந்த தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியமைக்கு தமிழக மக்களுக்கு கோடானுகோடி நன்றி சொல்வோமாக!

அம்மாவின் தீர்க்க தரிசனம் 2023- 100%வெற்றியடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி தமிழ்ச்சொந்தங்களுக்கு.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment