Sunday 26 June 2016

கட்டுரை.பெட்ரோல்

விலைவாசியின் ஆணிவேர்?

பெட்ரோலும், டீசலும்தான் விலைவாசியை நிர்ணயிக்கும் ஆணிவேர் என்றால் யாராலும் மறுக்க முடியுமா?கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பெட்ரோல்-டீசல்விலை ஆறுமுறை உயர்த்தப்பட்டுள்ளது.ஆனாலும் ஒருமுறைகூட கடந்த ஆறு ஆண்டுகளில் அம்மாவின் தமிழ் நாடரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதுண்டா?.எதற்கெல்லாமோ காட்டுக்கூச்சல் போடும் எதிர்க்கட்சிகள் அவ்வப்போது உயர்த்தப்படும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான அம்மாவின் சவாலை பாராட்டும் பக்குவம் உண்டா?

சில விவசாய விளை பொருட்களின் விலை அவ்வப்போது பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் விலை ஏற்றங்கள் என்பதும் தவிர்க்க முடியாதுதான்.அதுவும் தற்காலிகமானதுதான் என்பதும் எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதான்.தக்காளி ஒருகிலோ ஆறு ரூபாய்க்கு விற்றால் நுகர்வோர்க்கு சேமிப்பு மிஞ்சுகிறது.அதேவேளை அது விவாசாயிக்கு பொருளாதார இழப்பு என்பதையும் நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்?

பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்துகொள்ள அதை விநியோகம் செய்வோர்க்கு அதிகார உரிமை வழங்கியுள்ள நடுவண் அரசு உணவுப்பொருட்களை உற்பத்திசெய்யும் விவசாசியிக்கு தங்கள் விளை பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெற அனுமதிக்குமா?ஏனிந்த பாரபட்சம் என்று கேட்கும் தைரியம் அம்மாவைத் தவிர எவர்க்கிருக்கும் இந்த இந்திய நாட்டில்?

விலைவாசி உயர்வுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் உள்ளன.அவை
பணவீக்கம்,பற்றாக்குறை,மற்றும் போக்குவரத்து.சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படும் கனரக வாகனங்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஏற்படும் போதெல்லாம் அதன் பாதிப்புக்கு ஏற்றாற்போல் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளும் போதெல்லாம் விலைவாசி உயர்கிறது என்பதைக்கருத்தில் கொண்டுதான் மாண்புமிகு அம்மா தமிழக முதல்வர் அவர்கள் சிறு குறு விவசாயிகளின் விளைபொருட்களை குறைந்த கட்டணத்தில் பேருந்துகளில் சந்தைகளுக்கு எடுத்துச்செல்வதில் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற தாயுள்ளத்தோடு அரசுக்கு ஏற்படும் இழப்பைத்தாங்கிக் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் விலைவாசியும் ஓரளவு கட்டுக்குள்ளிருக்க வகை செய்துள்ளார் என்பதை வெற்றுக்கூச்சல் வேலைக்கு ஆகா எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொள்வார்களோ இல்லையோ!ஆனால் தமிழக மக்கள் புரிந்து கொண்டுதான் முப்பத்தி இரண்டுகால சரித்திர நிகழ்வாக மக்களுக்காக ஆண்ட அம்மாவின் அரசையே மீண்டும் ஆளுங்கட்சியாக்கி ஆறாவது முறையாக அரியணை ஏற்றி தர்மத்தை நிலைநிறுத்தியுள்ளார்கள்.அப்படித்தான் உலகமும் பேசிப்பாராட்டுகிறது.வாழ்க தமிழ் மக்கள்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment