Saturday 3 September 2016

மக்கள் திலகம் நூறாம் ஆண்டு.

மக்கள் திலகம் நூறாம் ஆண்டு.

எங்கள் தங்கம் இதயக்கனி
அன்பே வாவா-இன்றும்
கொண்டாடும் நூறாம் ஆண்டும்
நம்நாடு பார்பார்!

மண்ணாண்ட மக்கள் திலகம்
மன்னாதி மன்னவா-இன்றும்
விண்ணாளும் வள்ளல் உலகம்
எந்நாளும் எம்நெஞ்சமே!.

சத்தியத்தாய் ராஜராஜ பாசமகனே
ஸ்ரீமுருகா தமிழழகா-இன்றும்
முத்தமிழின் குடும்பத் தலைவா
மூத்த தனையனே!

நேற்று இன்று நாளையென்றும்
வாழும் யோகியே-இன்றும்
மாற்றில்லை உன்னை வென்றும்
ஆள எம்மையே!

நாமென்றும் நாடென்றும் வாழ்ந்தவா
தாமொன்றும் நாடாமலே-இன்றும்
நானென்றும் யாரென்றும் நீயாகவே
தானென்றாய் அம்மாவே!

புரட்சியாம் புதுமையாம் பித்தனே
பிறவியாய்த் தமிழனே-இன்றும்
வரந்தந்தாய் வாரிசாய் அம்மாவை
நிரந்தரம் முதல்வரே!

வாழ்கிறாய் தமிழோடு வாழ்கவே!
ஆள்கிறாய் அம்மாவாய்-இன்றும்
நீள்கிறதும் என்றும் உனதரசே
வாழ்கநீ புகழாக!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment