Friday 27 November 2015

நாட்டுக்கு நாமே. கட்டுரை.

நாட்டுக்கு நாமே!

நமக்கு நாமே என்பதல்ல அரசியல் நாகரிகம்,நமக்குக் கற்றுத்தந்த நம் தலைவர் நாட்டுக்கு நாமே என்றுதான் சொல்லி சொல்லி வளர்த்து வந்துள்ளார்.ஆகவே நமது சிந்தனை எல்லாம் தொலைநோக்குப் பார்வை கொண்டது.அப்படித்தான் நம் புரட்சித்தலைவி அவர்களும் சிந்திக்கிறார் என்பதையும் நாடறியும்.

இன்றும் பொய்க்கூச்சல் போட்டுத்திரிபவர்களின் சுயரூபம் என்ன என்பதையும் மக்கள் அறிவார்கள்.இன்று அவரவர் குடும்ப பாதுகாப்புக்காகவும்,சொந்தக் குடும்ப முன்னேற்றத்திற்காகவுமே இன்றைய அரசியல்வாதிகள் அத்தனைபேரும் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார்கள் என்பதையும் நாடு நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் காலத்தின் வளர்ச்சி.

தனக்குள் தானே நாடு பொய்யர் யாரென்பதை புரிந்துதான் நையாண்டிப் புன்னகைக்குள் புதைத்து வைத்துக் கொண்டுள்ளது.இந்தப் பொய்யான புரட்டுக்காரர்கள் விடிந்த பொழுதில்தான் விளக்கைப் பிடித்த்க்கொண்டு விடியலைத் தேடுவதாக விளங்காமல் வெட்டித்தனம் செய்வதை பொதுமக்கள் புரிந்துகொண்டுதான் போக்கற்றவர்கள் திரிகிறார்கள் என்று சிரிக்கும் சத்தம் அந்த வீணாய்ப்போனவர்களின் செவிகளுக்கும் எட்டாமல் இல்லை.

அந்த வயிற்ற்றெரிச்சலில்தான் கொஞ்சமும் கூச்சமில்லாமல் தெருக்களில் பொய்ப்பாடல்கள் பாடி ஆடி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள் பாவம்.கருத்து சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் அவர்களின் அதிகாரக் காலத்தில் கருத்துக்கு என்ன மரியாதை செய்தார்கள் என்பதை நாடும் நாமும் மறந்துவிட்டோமா என்ன!பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் படுகாயத்தோடு வேதனை சுமந்துகொண்டு இருக்கத்தானே செய்கிறார்கள்.வேதாளங்கள் ஓதும் வேதங்கள் எடுபடுமா என்ன!நினைவாற்றல் என்பது இவர்களுக்கு மட்டும்தான் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளதா என்ன!நாமெல்லாம் மரமண்டைகளா என்ன!இவர்களைப்பற்றிப்பேசப் பேச மன அழுத்தம்தான் மண்டைக்கு ஏறுகிறது.

நெஞ்சுக்கு நீதி என்று ஏமாற்றம் செய்யும் எவரையும் இனி மக்கள் எந்நாளும் மன்னித்து மறக்க மாட்டார்கள்.உலகில் இவர்கள் மட்டும்தான் வாழப் பிறந்தவர்களா என்ன!எந்த ஒரு சொல்லையும் வீசி எறியும் முன் தங்களை சுயபரிசோதனை செய்யமாட்டார்களா என்ன!ஒருசமயம் இவர்களைப் பற்றி யோசிக்கும்போது கொஞ்சம் பாவமாகவும் இருக்கிறது.என்ன செய்வது !அள்ளிச்சாப்பிட்டவர்களுக்கு கிள்ளிசசாப்பிடும்போது வருத்தம் இருக்கத்தான் செய்யும்.இப்போதாவது இவர்கள் தங்களை உணர்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்,எப்போதும் எல்லோரும் ஏமாளிகளாக இருப்பார்கள் என்று பொதுமக்களை ஏளனமாக எண்ணக்கூடாது.

விமர்சனம் என்பது பாவம் அல்ல.ஆனால் அந்த விமர்சனம் நாகரிகமாக செய்யப்படவேண்டும்.பொதுவாக தனிநபர் விமர்சனம் இழிவான செயல்தான். என்றாலும் கூட  அவ்விமர்சனம் சம்மந்தப்பட்டநபரை திருத்த உணர்த்துவதாக நளினம் கொண்டதாக இருக்கவேண்டும்.அப்படியல்லாமல் மனிதாபிமானம் அற்ற வகையில் தனிவாழ்வு உரிமை உணர்வுகளை குத்திக்குதறிக் காயப்படுத்தி வக்கரமாக வன்மை முறையில் நாகரிகம் தவறி விமர்சிக்கக் கூடாது.பொதுவாக அப்படிப்பட்ட விமர்சனங்களை வேடிக்கை பார்ப்பதும் ஆதரிப்பதும் கூட ஒருவகையில் பாவம்தான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment