Thursday 6 November 2014

பாவம் விடாது.





பாவம் விடாது!

பாவிகளே! பாவிகளே! பலிகொண்ட பாவிகளே!
பாவம் சும்மா விடுமோடா சண்டாளப் பேய்களே!
சாபம் என்றும் பொய்க்காது சாவும் வீணாகாது.
தீபம் அதும் தீயும்முன் தீவிழுங்காத் தீராது..

உயிரோடு விளையாடி வயிரிங்கு எரியுதடா!
உயிரென்ன மயிராடா!உருப்படாப் பாவிகளா!
தின்னஉயிர் எத்தனை தீர்ந்ததோ வெறியுனக்கு?
எண்ணும்உயிர் அத்தனையும் என்னபாவம் செய்தது?

அம்மான்னா சும்மாவா அகிலாண்ட ஈஸ்வரி.
கம்மனாட்டிக் கள்ளனே கணக்குண்டு காத்திரு!
பதிலென்ன கூறுவாய் பலிகொண்ட உயிர்களுக்கு.
விதியென்ன ஆறுமா வினையறுக்கப் பொறுத்திரு!

கோடிகோடி உயிர்களை கொண்டமகா சக்தியை
கூடிக்கூடி ஒன்றென குவிந்தமாக் காளியை.
தேடித்தேடி அழித்தாலும் கூடிக்கூடி தழைக்குமே!
ஓடிஓடி ஒளியவும் உனக்குஇடம் ஏதடா?

சூலம்தேடி வருகுதோ காலம்கூலி தருதற்கே!
நாளும்கூடி தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி தீர்க்குமே சாபம்பலி ஏற்குமே!
தீபஒளி அதுவரை தவமேற்று முடிக்குமே!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment