Thursday, 16 October 2025

யதார்த்தமான பேச்சு.

யதார்த்தமான எழுச்ச.

யதார்த்தமான பேச்சு.
யதார்த்தமான எழுச்சி.
யதார்த்தமான மனிதம்.
யதார்த்தமான ஆளுமை.

எழுதிப் படிக்கும் பேச்சும் அல்ல.
தொழுது நடிக்கும் அரசியலும் அல்ல.
யதார்த்த மான மனிதர் யாரு 
ஊரவர் பேரு யாரெனக் கூறு.

அடுக்கு மொழி அலங்காரப் பேச்சும்
மிடுக்கு நடையில் மேடைப் பேச்சும்
மேடைப் பேச்சை ஆடைபோல் வீசார்
மானங் காக்கும் உடைபோல் காப்பார்.

விவசாயச் சகமனிதப் பழக்கம் ஐயா.
அவசியம் அன்றாட வழக்கம் மெய்யா.
கிராமிய வாழ்வியல் எளிமை ஐயா.
கிளைச் செயலாளர் வழமை மெய்யா.

புதுமை அரசியல் முழக்கம் செய்வார்.
பதுமை ஆட்சி விளக்கம்  மொழிவார்.
எதிரிக் கட்சிகள் கலக்கம் கொள்வார்.
சிதறிப் பட்சிகள் விலக்கம் வெல்வார்.

கட்சிப் பாரபட்சம் கூடாது என்பார்.
கட்சியில் தானதைக் கடைப் பிடிப்பார்.
இரக்கம் காட்டியும் கிருபையும் செய்வார்
உருக்கம் ஆகியும் உதவியும் செய்வார்.

கருணை அருளத்தான் பதவி என்பார்.
பொறுமை ஆளவேத் தலைமை என்பார்
உணரவும் உதவவும் கட்சி ஏன்பார்.
உண்மை மொழிவார் நன்மை வழியார்.

புரிந்ததா யாரவர் அறிந்ததே பேரவர்.
விரிந்த மனத்தார் தெளிந்த நீரவர்.
தெரிந்தவர் தானவர் எடப்பாடி ஊரவர்.
நிறைந்த பழனிச்சாமி செழுமை ஆட்சியாளர்

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






No comments:

Post a Comment