கடவுள் போல் காத்தாரு
எடப்பாடி பழனிச்சாமி.
கொரானாவில் பாத்தாரு.
குலதெய்வம் வேறாரு.
எல்லாமே நின்னபோதும் --பசி
இல்லாமச் செஞ்சாரு.
இரத்த நாளங்கள் நின்னு போச்சு
சுத்தமா வருமானம் துடைச்சி ருச்சி
ஆனாலும் மூனுவேள அன்னந்தந்தாரு.
காணவந்த கஷடத்த காணாமச் செஞ்சாரு.
கடவுளான எடப்பாடி களம்வென்று காத்தாரு.
என்னக்கரும நோயினும் எவருக்குமே புரியல.
எமனாக நாடெங்கும் கொரனா வேட்டைப் போருல,
பாடசாலை திறக்கல பணியேதும் நடக்கல.
பேச்சு மூச்சு ஒடுங்கியே நாடடங்கித் தூங்கல.
துச்சமென அதுகடந்து களம்நின்றார் பழனிச்சாமி.
வீடு வீதி எல்லாமே வெறிச்சோடி முடங்கியாச்சு,
காடுபோல நாடாச்சு கடைத் தெருக்கள் மூடிப்போச்சு
ஆம்புலன்ஸ் சங்கொலி அதுமட்டும் அலறிருச்சு.
எமனான கொரனாவை எதிர்த்து த்தான்
நின்னாச்சு
கொள்ளை நோயானாலும் பழனிப் பாடு பட்டாரு.
ஆனாலும் அரிசிப் பருப்பு காய்கனி வீடு தேடி
கதவுகளைத் தட்டியது கஷ்டங்களை விரட்டியது.
பாடசாலை மூடியாச்சு பாடங்களும் ஓஞ்சது
தேர்வுகளை ரத்தாக்கி தேரச்சி யென்று அறிவிச்சாச்சாரு
மாணவர்கள் கல்விகற்க மறுவாழ்வும் தந்தாரு.
வாழ்வோமோ சாவோமோ வழிமூடியக் கொரனாவில்,
மூச்சுவிட முடியாத பேரழிவுக் காலமதில்
நானி ருக்கேன் பயமேனெனப் போர்க் கால அவசரமாய்,
ஆவது செய்து தந்து அரும்பணி சேவை ஆற்றி
மக்களைக் காப்பாற்றிய மாமனிதர் பழனிச்சாமி.
கவிஞர். கொ. பெ. பி. அய்யா.
No comments:
Post a Comment