நாலாண்டு இரண்டு மாதம்,
கோலோட்சிய எடப்பாடி யார்,
என்ன குறை வைத்தாரோ!
இன்னை வரை நின்றாரே--தமிழ்
நெஞ்சங்களைக் கொண்டாரே!
கொரனாக் காலத்திலும்,
வருவாய் நின்ற போதிலும்,
அரசாங்கச் செலவினங்கள்,
அணுவளவும் குறையலாச்சா--ஊழியர்
ஊதியங்கள் நிலுவை யாச்சா?
வரியென்ன ஏற்றினார்?
சொத்துவரி மற்றவரி,
எந்தவரி ஏற்றினார்?
வந்தவரிப் போதாதென--திட்ட
வருடநிதி குறைத்தாரா?
நிலமதிப்பைக் குறைத்தாலும்
பதிவுக் கட்டணம் ஏற்றலாச்சா?
பேரூந்துக் கட்டணங்கள்
ஏறியேதும் பாரமாச்சா--எங்கும்
வேலை நிறுத்தப் போர்களாச்சா?
விலையேதும் ஏறலாச்சா?
மின்சாரம் தடை யாச்சா?
மின்கட்டணம் உயர்வாச்சா?
பால்விலைக் கூடலாச்சா?--என்றும்
பால்வரத்தும் குறையலாசாசா?
போதுத்துறைப் பணிகளேதும் நிதிகெட்டு ஓயலாச்சா?
கூலித்தொல்லை எத்துறையும்
நாளிலேதும் கூச்சலாச்சா--எடப்பாடி
ஆட்சி முறை ஏதாச்சும் பிசகலாச்சா?
கவிஞர். கொ.பெ.பி அய்யா.
No comments:
Post a Comment