Monday, 27 October 2025

தானா எழுந்த தலைமை.

தானா எழுந்த தலைமை.

தானா எழுந்த தலைமைப் பொறுப்பு 
தலைவரு க்குப்பின் தானே பிறப்பு
அதுவே பூப்போல் அதுவே மலர்வது
அதுதான் அண்ணா திமுக தொடர்வது.

வாரிசு என்ற வழக்க மில்லை 
வயது மூப்பும் பழக்க மில்லை 
எவரிடம் தலைமைப் பூத்திரு க்கிறதோ!
அவரிடம் பதவி காத் திருக்கிறது.

தொண்டர் தூண்கள்  தாங்குங் கழகம்
தலைமைப் பாங்கும் ஓங்குங் கழகம்
எல்லாம் தானே எழுவது ஆக்கம்
எவருந் தூண்டா தன்னகத் தாக்கம்.

காலங் காலமாய் அதுவே வாழும்.
வாழுங் காலங்கள் கோடிக ளாகும்.
ஆளும் நாடுகள் நாளுங் கூடும்
அம்மா எம்ஜிஆர் பேரே பாடும்.

அண்ணல் எம்ஜிஆர் அமைத்தக் கழகம் 
அவரது பேரில் தலைமைக் கழகம்.
அவரும் அம்மாவும் தமிழ் அடையாளம்
எவரும் இங்கு வேரெவர் ஆளும்?

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


No comments:

Post a Comment