Thursday, 16 October 2025

விவசாயி முதல்வர்.

விவசாயி முதல்வர் 

வாராரய்யா நம்மாளு,
ஊராண்ட வேளாளு,
பாராள வந்தாளு,
பழனிச்சாமி நல்லாளு.

கருப்பண்ணர் தவசியம்மாள்,
திருமகனார் உழைப்பாளி,
பொறுப்பான விவாசயி,
பொதுவாழ்வு எட்பாடியார்.

சிலுவாபுரிச் சின்னவரு
சீராளர் பாட்டாளி.
அம்மாவோட நம்பிக்கை
ஆயுள் கால வெற்றியாளர்.

சின்னச் சின்னப் பொறுப்பு,
சிரமமின்றிச் சுமப்பு,
கண்ணாகச் செயலாற்றி,
முன்னேறினார் படிப்படி.

குடும்பத்தை நுழைக்கா,மல்,
தடுமாறித் தவறாமல்,
பொதுவாழ்வுப் பொதுப்பணி,
யதார்த்த அரசியலார்.

கிராமத்தார் பேச்சு உடை
தரம் பாராத் தமிழர் நடை
நாள் முழுக்க நம்முடமை
தோள் தழுவும் தோழமை.

எதிரியென எவருமில்லை
உதிரியென ஒதுக்க வில்லை.
சமமாகப் பழகுவார்
அமைதி வழி ஆட்சி யாளர்.

சிரிப்புக்கு உரியவர்
சிந்தனைத் தெளிவவர்.
உரியதை உரிய நேரம்
சரியாளும் பொறுமையாளர்.

பொதுவான செயலரவர்.
அதிமுக ஆளுநரவர்.
புரட்சியார் தொண்டரவர்,
நிரந்தரப் பொதுச்செயலர்.

விசாயப் பூமியிதில்
விவசாயி முதல்வரவர்
அவசியம் தானாகி
ஆண்டவனின் தேர்வவர்.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

No comments:

Post a Comment