நம்மில் நமது தலைவன்.
நம்மில் எழுந்து நம்மில் தோன்றி
நமக்காகப் பிறந்த நமது தலைவன்.
நம்மைப் போலவே வாழ்ந்து வருகிறார்
நம்போலவே வாழும் எடப்பாடியார்.
எளிய நடையும் ஏழ்மை உடையும்
பழகிய மனமும் அழகிய குணமும்
தெளிந்த பார்வை குளிர்ந்த சேவை
விளங்கும் மொழியில் பழங்கும் எளிமை
கிராமியப் பேச்சு கிராம மூச்சு
கிரம்மம் சகசம் பொறுமைச் சகிதம்
அருமை மனிதம் சராசரி இனிதம்.
தருணம் பழகும் யதார்த்த நளினம்.
கர்வம் இல்லா சர்வம் சாதாரணம்
பர்வம் அறிந்தப் பக்குவம் உதாரணம்.
சகோதரப் பரிவும் மகோன்னத உறவும்
மகத்துவ மாண்பும் தலைமைத் தகவு.
ஆளுமைப் பண்பு அகத்தினில் அன்பு
வாழ்வுரிமை ஆண்மை வழக்கிற் தெம்பு
மனமுடன் பழகும் மானுடசாமி--தமிழ்
இனமான உணர்வாம் பழனிச்சாமி.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment