Friday, 31 October 2025

போனால் போகட்டும்.

போனால் போகட்டும் தம்பி 

போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி?
வந்தாலும் வரட்டும் தம்பி,--சென்று
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்தாலும் பாடம் படிக்கட்டும் தம்பி.

அரசியல் என்பது போராட்டம்--அதை
அறிவார் புரிவார் உணரட்டும்.
அனுபவம் அவரை திருத்தட்டும்--காலம் 
உணர்த்திய உண்மை விளங்கட்டும்.
போனால் போகட்டும் தம்பி -- முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும். தம்பி

உறவில் உதித்தது அதிமுக---அதைப்
பிரிவதில் பிரிந்தவர் பாவம்.
தவறைச் சொல்லி வருந்தாமல்--நல்ல
உறவை முறிப்பதா இலாபம்?
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

பிரிவும் முறிவும் வழிமுறையா--அதை
இரத்தத்தின் இரத்தங்கள் ஏற்குமா?
வரலாறைக் கேட்டால் சொல்லும்--அதை
திரும்பிப் பார்த்தால்  திருத்தும்.
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

தொண்டர்கள் அமைத்த  இயக்கம்--எவர்
துண்டாட நினைப்பார் தோற்பார்.
மக்கள் சக்தி இயக்கம்--எத்தனை
சிக்கலும் எதிர்க் கொண்டும் நிலைக்கும்
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தநத பாடம் படிக்கட்டும் தம்பி.

 மேலே எம்ஜிஆர் இருக்கிறார்--சர்வ
வல்லமை அம்மாவும் பார்க்கிறார்.
பூமி சழலும் வரைக்கும்-- சரித்திர
சாமி சோன்ன சத்தியம் நிலைக்கும்.
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Monday, 27 October 2025

தானா எழுந்த தலைமை.

தானா எழுந்த தலைமை.

தானா எழுந்த தலைமைப் பொறுப்பு 
தலைவரு க்குப்பின் தானே பிறப்பு
அதுவே பூப்போல் அதுவே மலர்வது
அதுதான் அண்ணா திமுக தொடர்வது.

வாரிசு என்ற வழக்க மில்லை 
வயது மூப்பும் பழக்க மில்லை 
எவரிடம் தலைமைப் பூத்திரு க்கிறதோ!
அவரிடம் பதவி காத் திருக்கிறது.

தொண்டர் தூண்கள்  தாங்குங் கழகம்
தலைமைப் பாங்கும் ஓங்குங் கழகம்
எல்லாம் தானே எழுவது ஆக்கம்
எவருந் தூண்டா தன்னகத் தாக்கம்.

காலங் காலமாய் அதுவே வாழும்.
வாழுங் காலங்கள் கோடிக ளாகும்.
ஆளும் நாடுகள் நாளுங் கூடும்
அம்மா எம்ஜிஆர் பேரே பாடும்.

அண்ணல் எம்ஜிஆர் அமைத்தக் கழகம் 
அவரது பேரில் தலைமைக் கழகம்.
அவரும் அம்மாவும் தமிழ் அடையாளம்
எவரும் இங்கு வேரெவர் ஆளும்?

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


கிளையிலிருந்து கோட்டை வரை.

கிளையிலிருந்து கோட்டை வரை.

கிளையிலிருந்து கோட்டை வரை.
விளைந்து வந்த பழனிச்சாமி 
அப்பன் பேரைச் சொல்லி வந்த
சுப்பனல்ல பழனிச் சாமி.
சிரித்தமுகம் மக்கள் பணி சீராளன் பழனிச்சாமி.
பிரித்தாளும் போக்கில்லா பண்பாளர் பழனிச்சாமி

அனுபவத்தில் தேறிவந்த தொண்டனவர் பழனனிச்சாமி.
படிப் படியாக மேலே வந்த பணியாளர் பழனிசாசாமி
படிக்காத பாமரன் விவசாயி மகன் பழனிச்சாமி
எடப்பாடி தந்த முத்து எங்கள் சொத்து பழனிச்சாமி.

எம்ஜிஆர் காலந்தொட் டே இரசிகனவர் பழனிச்சாமி.
கல்லூரிக் காலம் முதல் கட்சிப்பணி பழனிச்சாமி.
அம்மாவின் ஆசிபெற்ற ஆட்சிப்பணி பழனிச்சாமி.  
குடும்பம் கொண்டு நுழைக்காத கொள்கை வீரர் பழனிச்சாமி.

கட்சியின் ஜனநாயகம் காத்துவரும் பழனிச்சாமி 
கட்சியின் கட்டுபாபாடும் காவல் ஐயன் பழனிச்சாமி.
தன்மானச் சிங்கமவர்  தனிவழி பழனிச்சாமி.
பொன்மனம் போலவே தன்வழியில் பழனிச்சாமி.

மண்பெருமைக் காக்கவே மக்கள் நலம் மீட்கவே பழனிச்சாமி 
தன்பெருமை தவிர்க்கவே தலைவர்புகழ் பழனிச்சாமி
அம்மாவின் பிள்ளையாக அவர் வழி பழனிச்சாமி
செம்மாந்த அதிமுக வைச் சீரீநடத்தும் பழனிச்சாமி.

கவஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 25 October 2025

தன்மானச் சிங்கம்.

தன்மானச் சிங்கம்.

மானம் ஒன்றே பெரிதென வாழும்
மனிதன் தானே எடப்பாடி யாரும்
வான் குவிந்தாலும் தான் பணியாத
தன்மானச் சிங்கம் பழனித் தங்கம்.

கைநீட்டி நாளும் பொய்கூட்டிப் பேசும்
சைத்தான்கள்  வாழும்  சண்டாள தேசம்.
மெய்யறிப் புனிதம் பொய்யா மனிதம்
வைய்யம் காண்பது அரிதும் அரிதாம்.

மானங் காத்து ஈனம் தவிர்த்து
வானங் கீழே தான்தலை குனிந்து
வாழுங் கேவலம் போலல் லாமல்
நாளுந் தன்மானம் வாழும் பழனிசாமி.

அரசியல் என்றால் அவமானம் என்பார்
விரசியல் என்றும் வேறாய்ச் சொல்வார்.
ஆனாலும் எடப்பாடி தன்மானச் சிங்கம்
வானுயரம் போலூம் தானுயர்த் தங்கம்.

தொலைந்தன தேடி அலைய வேண்டாம்
தூர்ந்தது துடைத்து தேடவும் வேண்டாம்.
தன்மானம் காத்து பொன்மான் மிளிரும்
தன்வழி எடப்பாடி தனிவழி ஓளிரும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Friday, 24 October 2025

நம்மில் நமது தலைவன்.

நம்மில் நமது தலைவன்.

நம்மில் எழுந்து நம்மில் தோன்றி
நமக்காகப் பிறந்த நமது தலைவன்.
நம்மைப் போலவே வாழ்ந்து வருகிறார்
நம்போலவே வாழும் எடப்பாடியார்.

எளிய நடையும் ஏழ்மை உடையும்
பழகிய மனமும் அழகிய குணமும்
தெளிந்த பார்வை குளிர்ந்த சேவை
விளங்கும் மொழியில் பழங்கும் எளிமை

கிராமியப் பேச்சு கிராம மூச்சு
கிரம்மம் சகசம் பொறுமைச் சகிதம்
அருமை மனிதம் சராசரி இனிதம்.
தருணம் பழகும் யதார்த்த நளினம்.

கர்வம் இல்லா சர்வம் சாதாரணம் 
பர்வம் அறிந்தப் பக்குவம் உதாரணம்.
சகோதரப் பரிவும் மகோன்னத உறவும்
மகத்துவ மாண்பும் தலைமைத் தகவு.

ஆளுமைப் பண்பு அகத்தினில் அன்பு
வாழ்வுரிமை ஆண்மை வழக்கிற் தெம்பு
மனமுடன் பழகும் மானுடசாமி--தமிழ்
இனமான உணர்வாம் பழனிச்சாமி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 23 October 2025

எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதம்.

எம்மதமும் சம்மதம் ஏற்போமே
அம்மதமும் நம்மதம் தீர்ப்போமே
மனம் கோணாமல் மதம் பேணுவோம்
இனம் பாராமல் இணைந்து வாழுவோம்.

ஆன்மாக்கள் போலவே ஆறுகள்
அதனதன் வழியே தீர்வுகள்.
சேரும் இடங்கள் சங்கமம்.
நேரும் விதமோ சம்மதம்.

கடல்களில் வேற்றுமை காட்டுமோ!
கண்டங்கள் தோற்றமும் மாற்றமோ
பெயர்கள் தானே பலப்பல
பிரிவினை ஏது உலகிலே.

ஆறுகள் என்னும் வழிகளை
பேருகள் சொல்லி அழைக்கிறோம்.
சேரும் ஓரிடம் கடலது போல்
மார்க்கங்கள் சங்கமம் இறையொருவன்.

அதனதன் வழியில் ஆறுகளே
மதங்கள் நம்பிக்கை இருக்கையிலே
மோதல் ஆகுமோ உலகினிலே
யாதும் நம்மதம் சம்மதமே

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 22 October 2025

வேட்டிய மடிச்சிக் கட்டி......

வேட்டிய மடிச்சிக் கட்டி.....

வேட்டியை மடிச்சிக் கட்டி
விவசாயி தலப்பாக் கட்டி
கோட்டையில் கோலோச்சி
நாடாளும் யோகன் சாமி.

விவசாயம் தெரிஞ்ச சாமி
அவசியங்கள் புரிஞ்ச சாமி
விவசாயி நாடாள விவசாயம்
அவசரம் அவசியம் ஆனசாமி.

காடு வெட்டி கழனி பார்த்து,
மேடு பள்ளம் சமம் பார்த்து,
நீரு பாய்ச்சி நிலம் நனைச்சி,
ஊரு நலம் காக்கும் சாமி.

பச்சை நிறத் துண்டு போட்டு
பசுமையைத் தோளில் காட்டி 
வேளாண்மை வம்சம் வீட்டு 
தாளாண்மை ஆளும் சாமி.

எடப்பாடி ஊராளர்
எலுமிச்சை நிறமாளர்
கடப்பாடு கொள்கையாளர்
எம்ஜிஆர் அம்மா பற்றாளர்

சிரித்த முகம் சீராளர்
சிறுத்த மீசை நேராளர்
சிங்கம் நடை வீராளர்
தங்க மகன் பழனி சாமி

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

























Tuesday, 21 October 2025

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலை

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலை

எம்ஜிஆர் கண்ட இரட்டை இலைகள்  என்றும் வென்ற இரட்டை இலைகள்.
தனித்து வென்று களங்கண்டஇலைகள்
துணித்த எங்கள் இரட்டை இலைகள்.

திண்டுக் கல்லை வென்றக் கல்லாய்
கொண்டுத் தூக்கிய வெற்றி இலைகள்.
முதன்முதல் வென்ற இரட்டை இலைகள்
புதாட்சி கண்ட இரட்டை இலைகள்.

எழுபத் தொன்றில் முளைத்த இலைகள்
எங்கும் துளிர்த்த இரட்டை இலை.கள்.
காலை வாசல்க் கோலமாம் இலைகள்.
காரிகை கொண்டை இரட்டை இலைகள்.
 
வெற்றிச் சின்னம் இரட்டை விரல்கள்
சுட்டிக் காட்டும்  இரட்டை இலைகள்.
பச்சைப் பசப்பென பரவித் துளிர்த்தன
இச்சை வண்ண இலைகள்.தழைத்தன.

எதிரிகள் கண்களில் விரல்கள் ஆட்டி,,
பதறிச் சிதறப் பயமுற மிரட்டி,
அதிரும் சும்மா அலற விரட்டி,
சதுராடிக் களத்தில் சம்பம் செய்யும்.

விரும்பித் தொட்டால் அரும்பி மலரும்.
நிறம்பிப் பச்சை கண்களில் குளிரும்.
எதிர்க்க நினைத்தால் இல்லா மலாக்கும்
உதிர்க்க முனைந்தால் ஓயா தழைக்கும்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.




Saturday, 18 October 2025

ஏழையும் டாக்டராகலாம்.

ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

படிக்கும் செலவும் பொறுப்பாக
முடிக்கும் வரையும் ஏற்பாக
பார்த்துக் கொள்ளச் செய்தாரே.
அரசாங்கம் அதையும் ஏற்கவே
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

ஏழையாகப் பிறந்தவன் 
இலவசமாகப் படித்தவன்.
அரரசுப் பள்ளி மாணவன்
திறனறித் தேர்வு எழுதாமல்
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே.

ஏழை யொருவன் வாழ்வினை
ஏழ்மை அறிந்தவர் எடப்பாடியார்.
வாழை யடி வாழையாக
ஏழைகளின் இயக்கம் அதிமுகவே
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே.

எம்ஜிஆர் அம்மா போலவே
எடப்பாடியாரும் அதுபோலவே
ஏழை களுக்கான ஒதுக்கீடாகவே
ஏழு புள்ளி ஐந்தளித்தாரே.
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

இரண்டா யிரம்மேல் கிளினிக்குகள்
அறு நூறுக்குமேல் உணவகங்கள்
மருத்துவம் பயில பதினொன்று
நிறுவிய கல்லூரி மேற்கொண்டு
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

பசியைப் போக்கிய தாயாரை
பாமரர் மருந்தக அம்மையாரை
நிரா கரிக்கின்ற சதிச்செயலை
முறிப்போம் மீண்டும் திறப்போம்.
உறுதி செய்வோம் இருபத்தாறை.
பறிதுத்துத் துறத்தி ஓட்டு வோம்
ஏழையும் டாக்டராகலாம்.
எடப்பாடியார் ஆட்சி யிலே

கவிஞர். கொ. பெ. பி அய்யா.



இளைஞனே விழித்தெழு!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலமுன்னை அழைக்கிறது.
நாளைய சமூகம் உனதானது
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பாரது தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்னைச் சுற்றி சதிவலைகள்
கண்ணை மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
எல்லாமே கெடுவினை அதற்காக.
எஃகு வலிமை உள்னுடலை
சிதைக்கும் செயலே சூழ்ச்சிவலை.

அடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை பெரும்பாவம்
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயல்வன்மம்.

உடம்பை இரும்பாக் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரிருக்கு.
காத்துக் கிடக்குது கனவதுக்கு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்குங் காலம் விதையாதது,
விளையுங் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்ப்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறுங் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

உன்னை நம்பி முயன்றிடனும்
உன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா

Friday, 17 October 2025

மாற்றம் வேண்டும் மாற்றுவோம்.

மாற்றம் வேண்டும்.

மாற்றம் வேண்டும் மாற்றுவோம்.
ஏற்றமாக இளஞரணி ஆற்றுவோம்.
போற்றினோம் புரட்சிவழிக் கூடினோம்.
நாட்டினோம் தமிழாட்சி சூடினோம்.

கோட்டையேறி கொடிமரம் நாட்டுவோம்
நாட்டைமீட்டிப் பதறுகளை ஓட்டுவோம்.
வேட்டையாடி விளையாடிக் காட்டுவோம்.
பாட்டுப்பாடி ஆட்டமாடிப் போற்றுவோம்.

பொங்குமணி சீறுமொலிச் சிங்கங்கள்.
தங்கமகன் எம்ஜிஆர் சொந்தங்கள்.
சங்கமொலிக்க ஓங்காரம் தொணிக்க,
வங்கலைகள் இளைஞரணி திழைக்க

மீட்டுவோம் தமிழகம் மீட்டுவோம் 
மீட்டித்தமிழக மக்களைக் காப்போம்.
காட்டுவோம் அம்மாப்படை  காட்டுவோம்.
காட்டிப்புரட்சி இளைஞரணி ஆற்றுவோம்.

இந்தப்படைப் போதுமா இன்னுந்தான் வேணுமா?
சொந்தப்படை யாகுமா கூலிப்படைத் தாங்குமா?
எம்ஜிஆர் அம்மான்னா இளக்காரம் ஆனதா?
தும்சம்பன்னித் தோற்கடித்த வரலாறும் போனதா?

ஆகாதசொல்லுண்டா அர்ஜுனாப் போல் வில்லுண்டா?
போகாத ஊருக்குக் காட்டுவழிக் கல்லுண்டா?
நேராத போருண்டா பாராத வெற்றி யுண்டா?
நேருக்கு நேராக போரிட ஆளுண்டா?

ஆகாத வாக்குறுதி அள்ளியள்ளி வீசியே
தேறாத ஆட்சியதை மாறாகப் படுத்தியே.
வேகாத பருப்புக்கு வீணாக நெருப்பிட்டு
தாகமான மக்களுக்குத் தந்தததும் என்னவோ?

பொறுத்தவரைப் பொறுத் திருந்தோம்
வெறுத்தாலும் பார்த் திருந்தோம். விடியலுக்குக்குக் காத்திருந்தோம்
விடியாமல் விழித்திருந்நோம்.
காலங்கடந்தும் கதைமுடிய வில்லை
கோலமே கிடந்தது பொழுதாகவில்லை.
ஓலந்தான் மிஞ்சியது மாற்றமில்லை
மாற்றம்தான் வேணாடும் மாற்றுவோம்.

எடப்பாடியார் ஆட்சிபோல்  ஏதுமில்லை.
கடப்பாடு அவருக்குத்தான் வேறில்லை
மாற்றத்தின் மாற்றம்வேறு மனித ரில்லை.
காலந்தான் அவருக்காகக் காத்திருக்கு..
நாளுந்தான் நாளையெண்ணிப் பார்த்திருக்கு.
வேளைவர விடியலும் விழித்திருக்கு.
காலை மாலைக் கணக்குப் போட்டு
கணித்த மாற்றம் உடனிருக்கு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.








Thursday, 16 October 2025

கடவுள் போல் காத்தாரு.

கடவுள் போல் காத்தாரு.

கடவுள் போல் காத்தாரு
எடப்பாடி பழனிச்சாமி.
கொரானாவில் பாத்தாரு.
குலதெய்வம் வேறாரு.
எல்லாமே நின்னபோதும் --பசி
இல்லாமச் செஞ்சாரு.

இரத்த நாளங்கள் நின்னு போச்சு
சுத்தமா வருமானம் துடைச்சி ருச்சி
ஆனாலும் மூனுவேள அன்னந்தந்தாரு.
காணவந்த கஷடத்த காணாமச் செஞ்சாரு.
கடவுளான எடப்பாடி களம்வென்று காத்தாரு.

என்னக்கரும நோயினும் எவருக்குமே புரியல.
எமனாக நாடெங்கும் கொரனா வேட்டைப் போருல,
பாடசாலை திறக்கல பணியேதும் நடக்கல.
பேச்சு மூச்சு ஒடுங்கியே நாடடங்கித் தூங்கல.
துச்சமென அதுகடந்து களம்நின்றார் பழனிச்சாமி.

வீடு வீதி எல்லாமே வெறிச்சோடி முடங்கியாச்சு,
காடுபோல நாடாச்சு கடைத் தெருக்கள் மூடிப்போச்சு
ஆம்புலன்ஸ் சங்கொலி அதுமட்டும் அலறிருச்சு.
எமனான கொரனாவை எதிர்த்து த்தான்
நின்னாச்சு
கொள்ளை நோயானாலும் பழனிப் பாடு பட்டாரு.

ஆனாலும் அரிசிப் பருப்பு காய்கனி வீடு தேடி
கதவுகளைத் தட்டியது கஷ்டங்களை விரட்டியது.
பாடசாலை மூடியாச்சு பாடங்களும் ஓஞ்சது
தேர்வுகளை ரத்தாக்கி தேரச்சி யென்று அறிவிச்சாச்சாரு
மாணவர்கள் கல்விகற்க மறுவாழ்வும் தந்தாரு.

வாழ்வோமோ சாவோமோ வழிமூடியக் கொரனாவில்,
மூச்சுவிட முடியாத பேரழிவுக் காலமதில்
நானி ருக்கேன் பயமேனெனப் போர்க் கால அவசரமாய்,
ஆவது செய்து தந்து அரும்பணி சேவை ஆற்றி
மக்களைக் காப்பாற்றிய மாமனிதர் பழனிச்சாமி.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.




ஆட்சியில் என்ன குறை!

எடப்பாடி ஆட்சியில் என்ன குறை!

நாலாண்டு இரண்டு மாதம்,
கோலோட்சிய எடப்பாடி யார்,
என்ன குறை வைத்தாரோ!
இன்னை வரை நின்றாரே--தமிழ்
நெஞ்சங்களைக் கொண்டாரே!

கொரனாக் காலத்திலும்,
வருவாய் நின்ற போதிலும்,
அரசாங்கச் செலவினங்கள்,
அணுவளவும் குறையலாச்சா--ஊழியர்
ஊதியங்கள் நிலுவை யாச்சா?

வரியென்ன ஏற்றினார்?
சொத்துவரி மற்றவரி,
எந்தவரி ஏற்றினார்?
வந்தவரிப் போதாதென--திட்ட
வருடநிதி குறைத்தாரா?

நிலமதிப்பைக் குறைத்தாலும்
பதிவுக் கட்டணம் ஏற்றலாச்சா?
பேரூந்துக் கட்டணங்கள்
ஏறியேதும் பாரமாச்சா--எங்கும்
வேலை நிறுத்தப் போர்களாச்சா?

விலையேதும் ஏறலாச்சா?
மின்சாரம் தடை யாச்சா?
மின்கட்டணம் உயர்வாச்சா?
பால்விலைக் கூடலாச்சா?--என்றும்
பால்வரத்தும் குறையலாசாசா?

போதுத்துறைப் பணிகளேதும் நிதிகெட்டு ஓயலாச்சா?
கூலித்தொல்லை எத்துறையும்
நாளிலேதும் கூச்சலாச்சா--எடப்பாடி
ஆட்சி முறை ஏதாச்சும் பிசகலாச்சா?

கவிஞர். கொ.பெ.பி அய்யா.



யதார்த்தமான பேச்சு.

யதார்த்தமான எழுச்ச.

யதார்த்தமான பேச்சு.
யதார்த்தமான எழுச்சி.
யதார்த்தமான மனிதம்.
யதார்த்தமான ஆளுமை.

எழுதிப் படிக்கும் பேச்சும் அல்ல.
தொழுது நடிக்கும் அரசியலும் அல்ல.
யதார்த்த மான மனிதர் யாரு 
ஊரவர் பேரு யாரெனக் கூறு.

அடுக்கு மொழி அலங்காரப் பேச்சும்
மிடுக்கு நடையில் மேடைப் பேச்சும்
மேடைப் பேச்சை ஆடைபோல் வீசார்
மானங் காக்கும் உடைபோல் காப்பார்.

விவசாயச் சகமனிதப் பழக்கம் ஐயா.
அவசியம் அன்றாட வழக்கம் மெய்யா.
கிராமிய வாழ்வியல் எளிமை ஐயா.
கிளைச் செயலாளர் வழமை மெய்யா.

புதுமை அரசியல் முழக்கம் செய்வார்.
பதுமை ஆட்சி விளக்கம்  மொழிவார்.
எதிரிக் கட்சிகள் கலக்கம் கொள்வார்.
சிதறிப் பட்சிகள் விலக்கம் வெல்வார்.

கட்சிப் பாரபட்சம் கூடாது என்பார்.
கட்சியில் தானதைக் கடைப் பிடிப்பார்.
இரக்கம் காட்டியும் கிருபையும் செய்வார்
உருக்கம் ஆகியும் உதவியும் செய்வார்.

கருணை அருளத்தான் பதவி என்பார்.
பொறுமை ஆளவேத் தலைமை என்பார்
உணரவும் உதவவும் கட்சி ஏன்பார்.
உண்மை மொழிவார் நன்மை வழியார்.

புரிந்ததா யாரவர் அறிந்ததே பேரவர்.
விரிந்த மனத்தார் தெளிந்த நீரவர்.
தெரிந்தவர் தானவர் எடப்பாடி ஊரவர்.
நிறைந்த பழனிச்சாமி செழுமை ஆட்சியாளர்

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






நீண்ட நீளப் பாலம்.

நீண்ட நீள மேம்பாலம்.

அவினாசி கோவைப் பாலம்.--புரட்சி
அம்மா ஆட்சி அடையாளம்.
ஜீட்டி நாய்டு பேராள வாழும்
நீட்டி நீண்ட மேம்பாலம் காலம்.

ஆறும் நாலும் பத்து வழிகள்--எடப்பாடி
பேரும் வாழும் கெத்து மொழிகள்.
பதினெட்டு நூறு கோடியாக்கம்
நிதியிட்டத் திட்டப் பாலமாக்கம்.

அம்மா ஆட்சிப் பிள்ளையாம்--ஆமாம்
அதுபோலச் சொல்ல எதுவாம்?
சும்மாப் பத்துக்கிலோ மீட்டராம்
பாரெங்கும் வியப்பிடும் பாலம்.

இனியும் போக்கும் வரத்தும்--கால்
மணிநேரம் தூரம்.பொருத்தும்.
அவசரப் பயணம் ஏகுங்காலம்
அவசியம் இதுவாகும் மேலும்.

காலம் அவசிய அவசரம்--இன்று
ஞாலம் அவசர அவசியம்.
தூரநேரம் நெருங்கி சுருங்கி
காலமாளும்  வேகம் உலகம்.

விஞ்ஞான அறிவு மெஞ்ஞானம்--காலச்
செய்ஞானப் புரிதல் எடப்பாடியார்,
கோவை நகரின் தேவையை
மேவிய பெருமைக் காலம்வாழி!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



தொண்டனை நம்பும் அதிமுக.

தொண்டனை நம்பும் அதிமுக.

தொண்டனை நம்பும் அதிமுக சொல்லு.
கூட்டணி நம்பும் ச.வா க*அல்ல
தொண்டர் நாங்கள் அதிமுக--எமக்குள்
அந்நிய மில்லை அன்பில் நாங்கள்.

கேட்டது கிடைக்கும் கூட்டணியோ! கொடுப்பது கொடுக்கும் கூட்டணியோ!
காசுக்கு வாங்கும் கூட்டணியே--அடிமை
வாசிகள் கூடியக் கூட்டணியோ!

இரத்தத்தின் இரத்தம் பிறவிகள்,
இணனைந்த சோதர உறவுகள்,
என்றும் எமஜிஆர் வழிவழிகள்--தமிழ்
இதயம் பதித்த இனவழியில்.

ஊழல் ஒழிக்க உருவானது.
ஒன்றே குலமென நிறமானது.
இறைவன் இயற்கை பொதுவானது.
இனத்தில் அனைவரும் சமமானது.

குலமும் மதமும் ஒரு சமூகம்.
நலமும் வளமும் சமத் துவம்.
பணமென அலையும் கூட்டமல்ல-தமிழ்
இனமென விளைந்த மாற்றமிது.

அண்ணல் எம்ஜிஆர் ஆக்கமிது.
எண்ணம் அவர் போல் இயக்கமிது. 
ஏழைகள் வாழத் தோன்றியது-இயக்கம்
வாழை அடியாய்  தொடருமிது.

பழித்து  இழிப்பது மார்க்கமல்ல.
அழித்து ஒழிப்பது இயக்கமல்ல.
ஆயுதம் செய்வது தொழிலுக்கு--நேர்
அன்பின் வழியது ஆட்சிக்கு.

ஆயிரம் ஆண்டுகள்  தொடரும்
அகிலம் ஆண்டும் படரும்.
வீட்டுக்கான கட்சிகள் வீழும்--தமிழ்
நாட்டுக்கான  இயக்கமே வாழும்.

கவிஞர்.கொ.பெ. பிச்சையா.

குறிப்பு:-*
(சு வா க=சண்டாளர் வாழ்வுக் கட்சி)










( ச

விவசாயி முதல்வர்.

விவசாயி முதல்வர் 

வாராரய்யா நம்மாளு,
ஊராண்ட வேளாளு,
பாராள வந்தாளு,
பழனிச்சாமி நல்லாளு.

கருப்பண்ணர் தவசியம்மாள்,
திருமகனார் உழைப்பாளி,
பொறுப்பான விவாசயி,
பொதுவாழ்வு எட்பாடியார்.

சிலுவாபுரிச் சின்னவரு
சீராளர் பாட்டாளி.
அம்மாவோட நம்பிக்கை
ஆயுள் கால வெற்றியாளர்.

சின்னச் சின்னப் பொறுப்பு,
சிரமமின்றிச் சுமப்பு,
கண்ணாகச் செயலாற்றி,
முன்னேறினார் படிப்படி.

குடும்பத்தை நுழைக்கா,மல்,
தடுமாறித் தவறாமல்,
பொதுவாழ்வுப் பொதுப்பணி,
யதார்த்த அரசியலார்.

கிராமத்தார் பேச்சு உடை
தரம் பாராத் தமிழர் நடை
நாள் முழுக்க நம்முடமை
தோள் தழுவும் தோழமை.

எதிரியென எவருமில்லை
உதிரியென ஒதுக்க வில்லை.
சமமாகப் பழகுவார்
அமைதி வழி ஆட்சி யாளர்.

சிரிப்புக்கு உரியவர்
சிந்தனைத் தெளிவவர்.
உரியதை உரிய நேரம்
சரியாளும் பொறுமையாளர்.

பொதுவான செயலரவர்.
அதிமுக ஆளுநரவர்.
புரட்சியார் தொண்டரவர்,
நிரந்தரப் பொதுச்செயலர்.

விசாயப் பூமியிதில்
விவசாயி முதல்வரவர்
அவசியம் தானாகி
ஆண்டவனின் தேர்வவர்.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Saturday, 4 October 2025

நாடாளப் பிறந்தவர்.

நாடாளப் பிறந்தவர்.

விவசாயக் குடும்பத்தில்,
வேளாளர் வம்சத்தில்,
நாடாளப் பிறந்தவர்,
பாட்டாளி எடப்பாடியார்.

தவசியம்மாள் கருப்பக்கவுண்டர்,
தவப்பிள்ளை பழனிச்சாமி, 
ஐம்பத்து நான்கில் பிறந்தவர்
எழுபத்து நான்கில் இயக்கம் வந்தார்.

அம்மாவின் ஆட்சியில்,
அமைச்சரவைப் பொறுப்புகளில்,
சிம்மாசனம் அலங்கரித்து,
சீராக ஆட்சி செய்தார்.
குடும்பத்தை நுழைக்காமல்,
கொள்கையின் உழைப்பில்,
தடம்பிறழா நம்பிக்கையில்,--ஆண்டார்
தனிச்சிறப்பு அரசாட்சி.

அம்மாவின் அன்புக்கு 
அடிபணிந்த எழுச்சியார்
வெற்றியே தொடர்ந்தவர்,
வென்றவர் தமிழ் நெஞ்சர்.
அம்மாவின் அருளாசி
அவர்பின்னே முதல்வராகி
பொதுச் செயலர் பொருப்பாகி--இயக்கம்
செதுக்கினார் சிறப்பாக்கி.

கழனியைப் பண்படுத்தும்
களையெடுக்கும் அவசியம்,
உழவர் மகன் பழனிசாசாமி
கழகம் உழுதார் சீர்செய்தார்.
அண்ணலவர் எம்ஜியார்
அம்மா புரட்சித் தலைவியார்,
ஆக்கிநடத்திய இயக்கத்தின்,
ஆலமரக் காவல் ஆனார்.

எழுச்சிப் பயணம் மேற்கொண்டார்.
எழச்செய்து சீர் வென்றார்.
அலைகடல் ஆர்ப்பரிக்கும்
கழகத்தொண்டர் களம் கண்டார்.
தமிழகம் தலை நமிர
தமிழாள  அரசமர
அமிழ்தமெனப் பரப்புரைகள்
அவரூட்டி வலம் வந்தார்.

நாளையது நமதென்போம்.
வேளையிது உழைப் பென்போம்.
ஏழைபாழை இயக்கமிது.
எம்ஜிஆர் ஆக்கி யது.
ஊளையிடும் நரிக்கூட்டம்
ஊழல்செய் பேயாட்டம்
ஒழிப்பதே நமதாட்டம்
ஓயாது நம்சீற்றம்.

வெற்றிவழி வீரர் நாம்.
வீறுகொண்ட சூரர் நாம்.
ஆற்றுப்படைத் தலைமைகள்,
ஆற்றித் தடை வென்றவர்கள்,
ஏற்று வழி ஏகுவோம்
மாற்றம் அதை ஆக்குவோம்.
நேற்று இன்று நாளையவர்
ஏற்ற முதல்வர் எடப்பாடியார்.
ஏற்றுவோம் சிம்மாசனம்.
போற்றுவோம் அம்மா தினம்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.