Tuesday, 4 March 2025

நல்லவேளை.

நல்ல வேளை.

நல்ல வேளை நாம் கண்டு கொண்டோம்  
நல்லவர் எம்ஜியாரைக்
கொண்டு விட்டோம்
அவரில்லை யென்றால் நாடென்ன கதியோ
நெஞ்சம் அஞ்சுதே ஐயகோ!ஐயகோ!

விவசாய பூமி வில்லாக்கள் ஆச்சு.
பசுமைகள் மறைஞ்சி பாடழிஞ்சி போச்சு.
விடியாத இருளில் விளங்காத தூரம்,
அடையாத ஊருக்கு முடியாத பயணம்.

சரியான நேரம் சரியாக வந்தார்.
இருளை விரட்டி விடியலைத் தந்தார்.
வரைபடம் எழுதித் தமிழகம் கண்டார்.
வறுமை ஒழித்து வளநாடு வென்றார்.

விடிஞ்சதும் அடைஞ்சதும் விதியோ சதியோ!
ஒளிவிளக்கு அணைஞ்சதும் வழிமுடிஞ்சக் கதையோ!
கலங்கிய பொழுதில் கலங்கரை விளக்கம்,
நிலவின் ஒளிமுகம் அம்மாவின் உதயம்.

அம்மாவின் ஆட்சி அன்பின் சாட்சி.
பசிப்பிணி நீங்கிய பாமரன் மீட்சி.
அம்மா எம்ஜியார் அமரர்கள்,
அவர் வாழுந் தெய்வங்கள்.
சுபராசி எடப்பாடித் தவவாசியார்
அவர்வழித் தமிழாட்சி சமர்ப்பணம்.

கொ.பெ.பி.அய்யா.







Sunday, 2 March 2025

எம்ஜியார் அம்மா

ஏது வெற்றிடம்!

எம்ஜியார் அம்மா மொத்த வடிவம்,
அம்சமே அவராக நிறம்பிய முழுஇடம்.
இருவர் இடமும் நிறைவிடம் பழனிச்சாமியிடம்.
இடமொன்றிய ஒருமுகம் திருமுகம் எம்ஜியாரம்மா.

கற்றும் பெற்றும் முற்றிய
அனுபவம்,
பெற்றிட்ட எடப்பாடியார் பொதுச்செயலர்.
கொற்றிடம் இங்கே ஒன்றதுவே அதிமுக,
கொற்றவர் எடப்பாடியார் வெற்றியார் வாழ்கவே!

தேனியில் கண்டது திரண்டது தமிழகம்.
கணக்கியல் சொன்னதுக் காட்சி நிறைவிடம்.
அம்மாவின் கனவு ஆயிரம் ஆண்டுகள்,
சும்மானாச் சொல்லல்ல சூழுரைச் சான்றுகள்.

ஏது வெற்றிடம் இன்னுமாத் தமிழிடம்!
சூதது செய்வாரின் சூதகச் சொல்விடம்.
சூதுவாதில்லா அதிமுக தொண்டர் களம்,
தோதாகத் தானாகத் தன்தலைமைத் தான்தேரும்.

தனைஇயக்குந் தன்னியக்கம்
தனிவழித் தான் இயங்கும்.
வினையாற்றி முனைவோரை 
தனையாற்ற முன்னிறுத்தும்
இணைவோரைத் தன்னிறுத்தும்.
அணைவோரையும் தான்பொருத்தும்.
முடிவில்லா இயக்கமிது
தொடருங்கோடிக் காலமிது.
விடியலாய் விடியுந் தொடர்
கடைவில்லா இயக்கமிது.

கொ.பெ. பி. அய்யா.

Monday, 24 February 2025

மங்கையர் மகிமை.

மங்கையர் மகிமை.

மங்கையராய் பிறந்தவர் மாதவம் செய்தவர்.
கங்கை போலவர் களங்கம் அல்லாதவர்.
மூன்றாம் பருவம் ஈன்றார் கருவம்.
பூவின் வாசம் பூத்தே வீசும்.
காதல் மலரும் கட்டும் அலரும்
காவல் தாண்டவும் ஆவல் தூண்டும்.

கொ. பெ. பிச்சையா.

சேலை கட்டிய எம. ஜி. யார்.

சபதம் ஏற்போம்.

சேலை கட்டிய எம். ஜி. யா. ர்
மாலை அம்மாள் பிறந்த
நாளை இன்று கொண்டாடும்
தமிழ் நாடே நீடு வாழ்க நீ!

தமிழ் நாடு சட்ட மன்றம்---சஅந்தத்
தருணம் இன்றும் அதிர்வுறும்.
பெண்ணென்றும் பாராமல்
பிசாசுகள் திரியோதனர்கள்
கேவல அவலம் செய்தக் கரியநாள் சபதநாள் நினைக!

ஒற்றைப் பெண்ணாகக் 
கர்ஜித்தக் கண்ணகியாகிக்
குற்றமென்ன செய்தேனென
பற்றிய கொள்கைப் போற்றி
முதல்வராய் அல்லாமல்
முயலேன் சபை மீண்டும்.
என்றும் முடித்துச் சபைச்
சபதம் ஏற்றி வெளியேறினார்.

அந்த வீரித் தமிழச்சி
அம்மாவின் பிறந்த நாளில்
இந்த நாள் சபதம் வாழ்வில்
அந்த நாள் நினைவில் ஏற்றி
முதல்வராகி மீண்டும் அரியணை பற்றுவார்.
அம்மா வழி பழச்சாமி.
சபதம் நாளிதில் சபதம் ஏற்போம்.
சபை மீண்டும் ஆளுவோம்.

கொ. பெ. பி. அய்யா.

Thursday, 20 February 2025

அம்மாவுக்குப் பிறந்தநாள்.


அம்மாவுக்குப் பிறந்த நாள்--எங்கள் 
ஆன்மாவுக்கு விடிந்த நாள்.
தமிழத்தாய் அடையாளம் 
தமிழகத்தின் விடிகாலம்.
எழுபத்து ஏழாவதாய்--மானுடம் 
விழுமியத்தின் விளக்க நாள்.

புரட்சியின் திருக்காட்சி 
பூமியில் தோன்றலாட்சி.
ஆயிரத்துத் தொள்ளாயிரம் 
ஆண்டது நாற்பத் தெட்டில் 
பெப்ரவரி இருபத்து நான்கில் 
பெண்ணுரிமை உதயமாட்சி.
வீரமங்கை வீரனாச்சியாள் 
மாறி மண்ணில் அவதரித்தாள். 

ஸ்ரீ ரங்க நாயகியாம் தமிழரின் தேவகியாம் ,
எம்ஜிஆர் கண்டறிந்த எங்கள் குலத் தேவியாம்.
ஏழைகளின் விடிவெள்ளி எதிரிகளின் காளியாம்.
எதிர்காலம் எங்களின் வெளிச்சமே அம்மாவாம்.

இதுதான் அம்மா அவதாரப் பொன்னாள்.
இதுதான் அன்னாள் எழுச்சியின் நந்நாள்.
எதிரிகள் எதுவரையும் 
எமக்கிங்கு தோன்றவில்லை.
புதிதாகித் தோன்றினோம் 
புத்தாட்சி ஊன்றினோம் 

அம்மா தோன்றியத் திருநாள் 
அறம் ஊன்றியச் சுபநாள்.
சும்மா இல்லைப் பிறந்தநாள் 
சோதனைகள் மறந்த நாள்.
அம்மா நமக்குள் வாழ்கிறார்.
அவராம் பழனிச்சாமி ஆள்கிறார். 
அம்மா அமரர் ஆண்டவர் நிழலில்,
அமைதி ஓய்விலும் நமக்காகப் பிரார்த்திப்பார்.

அணைந் தொன்றாய் வாழ்கிறோம்.
இணைந்தொன்றாய் ஆள்கிறோம்.
அம்மா மேல் சத்தியம் 
அம்மா ஆட்சி நிச்சயம்.
அம்மா மாடல் ஆட்சியாம்.
எடப்பாடியார் சாட்சியாம்.

கொ. பெ. பி. அய்யா.

Monday, 17 February 2025

தாலாட்டு

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிடுச்சி
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாகப் பிறந்தோமென,
பிஞ்சுக்கொடி கலங்காதே!
கல்யாணச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் வாடாதே!
கல்விக் கற்றும் உயர்ந்து
விட்டால்
செல்வி உனையே சீரீவரிசை எனக் கொள்வார்!

பெண்ணான யோகம் உனது
கண்ணாலக் கணக்காக 
வங்கியில் உன்பேரில்
வளரும் சேமத் தொகை
அம்மாவின் கருணையாம்
ஆட்சியின் மகிமை அதுவாம்
சும்மா நீ சுபமாக

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்று
விட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடிகிறது கண்ணுறங்கு!

அம்மாவின் மாடல் இது.
எம்ஜியாரின் ஆட்சியிது.
உன்போலேபா பெண்ணாளும்
உண்மைப் பொற்காலமிது.
மண்ணாளப் பிறந்தவளே 
மாதரசி கண்ணுறங்கு.

பெண்ணாகப் பிறந்த உன்னை 
தானாக எண்ணிப் பெண்ணே!
என்ன நீ ஆக வேண்டும் 
உன்னையவள் ஆக்கிடுவாள்
எந்நாளும் இரட்டை இலை 
கண்ணே உன் காவலம்மா.

கொ.பெ.பி.அய்யா. 



Friday, 14 February 2025

எத்தனை நாள் ஆட்டம்!

இன்னும் எத்தனை நாள்?
(உள்ளத்தில் நல்ல உள்ளம்)

எண்ணத்தில் நல்ல எண்ணம்
என்றுமே தோற்காது.
முன்னவர் சொன்னதடா--பாவம்
பண்ணினர் மக்களடா!--நாசம்
ஆனதும் மக்களடா!

பஞ்சமாப் பாவம் இலஞ்ம்
பெற்றதன் அடிமையாக
கூடாத இடம் கூடி வஞ்த்தில்  வீழ்ந்தார டா!---பாவ
நெஞ்சத்தால் தாழ்ந்தாரடா--கூட்டு
அணி தொடரும் மோசமடா!

தமிழுக்குத் துரோகமாய் திராவிட வேடமாய்
பாவம் பழி ஏற்றாயடா---பாவி
உண்ட  சோறு ரெண்டகமா---உன்
அண்டப் பொய் போதுமடா!

வீட்டுக்கு வாழாமல் நாட்டுக்குச்
சேவகனாய்
ஆண்ட அண்ணா தர்மரடா---அவர்
வாழுங்கொடி ஆளுமடா-நீ
போடும் வேடம் கலையுமடா!

இன்னும் எத்தனை நாளடா!
இவராடும் வெட்கக் கேடடா!
நெருங்கி வரும் காலமடா--பொய்
நொருங்கி விழும் கோலமடா!

ஆடி ஆடும் அலங் கோலம்
ஓடிச் சேர யோகம் இல்லை.
கடை யாணிக் கழன்றதடா---ஐயோ
உடைஞ்சுப் போச்சுத் தேரடா---கதை
முடிஞ்சி போச்சு ஓடடா;

கொ.பெ.பி. அய்யா.