Thursday, 20 November 2025

எதைப்பிடித்து வந்தாய்?

எதைப்பிடித்து வந்தாய்?

காலைப் பிடித்து வந்தாரா
கையப் பிடித்து வந்தாரா
எதைப் பிடித்து வந்தாலென்ன
ஏறி வந்தார் என்பதே உண்மை.

எதைப் பிடித்து நீ வந்தாய் 
எல்லோ ருக்கும் தெரியுமே--அந்த
அடையாளம் இல்லை யென்றால் 
ஆரறிவார் உன்னை இன்று.

தலைவனுககுத் தகுதி என்ன? 
தொண்டனாக விலாசம் என்ன--நீ
தியாகம் என்ன செய்தா யென்று
தலைவனாக சும்மா இன்று?

தந்தை தாத்தா பெயரைச் சொல்லி
வந்தா யென்றால் உண்மையே!
எந்த வேறு உழைப்பைக் கூறி
முந்தி வந்தாய் தலைவனாகி?

நோகாமல் நுங்கு தின்றாய்
வேகாத பருப்பு ஒன்றாய்.
உழைத் துயர்ந்த எடப்பாடியாரை
பிழை பேசத் தகுதி யென்ன?

Kppayya 

No comments:

Post a Comment