Saturday, 1 November 2025

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி --இனி
எப்போதுமே நிம்மதி.
அலப்பறைங்க போனாங்க --அட
ஆண்டவனே நிம்மதி.

உடனிருந்தே தொல்லையாய்--கெட்டக்
கடங்காரங்க அலப்பறைபோல்.
விட்டதடா சனியன்கள்--விட்டுத்
தொலைஞ் சாங்கடா இம்சைகள்.

ஏழரைகள் இடைஞ்சல்கள்--ஐயோ
போலரைகள் புலம்பல்கள்.
கஷ்டகாலம் ஓஞ்சது--துஷ்ட
சகவாசம் தீஞ்சது.

தள்ளி விடத் தயங்கித்தான்--கொஞ்சம்
தள்ளி நின்னே யோசனை. 
கிள்ளி விட்டு அவங்களே--கொள்ளி
வச்சுக் கொண்டாங்க.

ஆரவாரம் தீர்ந்தது--அடங்கா
அலைகடலும் ஓய்ந்தது.
அமைதி யெங்கும் நிலவியே--அசல்
அதிமுக நிலைத்தது.

கவிஞர். KPPAYYA


No comments:

Post a Comment