Friday, 24 January 2025

தாய்ப் பால் கள்ளிருக்க.....!

கள்ளக்குறிச்சி பாவம்.

தாய்ப் பாலப்  போலக் கள்ளு தந்த பனையும் கதறுது ஐயய்யோ!
மாய்ந்து சாயும்  சேய்களுக்கு தாய்ப் பாலுந் தடையோ 
ஐயய்யோ!

கள்ளும் தானே ஓர் உணவு,
சொல்லுந் தமிழும் ஊர் மரபு.
பனைத் தொழில் செய்யும் விவசாயம்,
தனைத் தடையென்ன ஐயோ அநியாயம்!

ஆகாரம் கள்ளுக்கு தடை போட்டு,
சாவுக்கு  சாராயக் கடை போட்டு;
அரசே விற்கும் அதிகாரம்
புருசனை விலக்கும் சுவிகாரம்.

அவணி எங்கும் அவலக்குரல்
அறுந்து விழுந்திடும் தாலிக் குவியல்.
வித்தக் காசும் போதுந் தானோ!-
செத்தது எத்தனைக் கொடுமை ஐய்யோ!

கள்ளக் குறிச்சி கண்ணீராறோ!
எல்லை மீறி ஓடுது ஐய்யயோ!
நாடெங்கும் ஊரும் பேராச்சோ!
கேடோங்கும் ஏழை சாவாச்சோ!

போதைக் காக வியாபாரமோ!
சாவுக்கான  ஆதாரமோ!
வெந்த மனசும் ஆறல்லயே---- ஐய்யோ-
 வியாபாரம் இன்னும் தீரல்லயே!

விசத்த விற்பதும் வியாபாரமோ!
நிசத்தச் சொன்னால் கேவலமோ!ஹஹ்
பொண்டாட்டி புள்ளைக பாவம.
திண்டாடும் கொடுமை சாபம்.

எத்தனை இலட்சங்கள் கொடுத்தால் என்ன!
அத்தனை உச்சம் எட்டுமோ!
தகப்பனைத் தேடும் பிள்ளைக்கு:
தாயென்ன சொல்வாள் பதிலுக்கு?

கொ. பெ. பிச்சையா.






Thursday, 23 January 2025

இரட்டை இலை

இரட்டை இலை.

இரட்டை இலையாம் என்றொரு
புரட்சி 
ஏழையின் சமூக தேவையாம் எழுச்சி.
வறுமை விரட்டி அகற்றிய சாட்சி‌
வாழ்ந்த புரட்சித் தலைவரின் காட்சி.

தோன்றிய நாளே ஊன்றிய ஆட்சி,
ஆண்டவர் எம்ஜியார் ஆண்டிட்ட மாட்சி,
ஏழ்மை வறுமை
 சொல்லிங்கு இல்லை.
ஆள்மை அவர் நிகர் யாரிங்கு சொல்ல!

மக்களுக்காக வாழ்ந்த வள்ளல்
தக்கவர் எம்ஜியார் ஆண்ட செம்மல்.
மக்களால் அம்மா மக்களுக்காக அம்மா.
எக்காலமும் யதார்த்தம் எடபபாடி தாமாம்.

காலம் வரைந்த கோலத்தின் தொடர்ச்சி,
ஆளுமை நிறைந்த அம்மாவின் வளர்ச்சி,
ஆளும் தலைமை காலத்தின் தேர்ச்சி,
நீளும் எளிமை எடப்பாடி ஆட்சி.

யாரும் முதன்மை நேரும் எழுச்சி,
தேரும் தன்மை வளரும் முயற்சி.
வாரிசு முறைமை பிறப்பின் தொடர்ச்சி,
பேரும் புகழும் திறமையின் வளர்ச்சி.

மன்னர்கள் காலம் முடிந்திட்ட கோலம்.
அண்ணா திமுக எழுந்திட்ட காலம்.
புரட்சியில் பூத்த எழுச்சியின் இயக்கம்.
நிரந்தரம் வாழும் தொண்டர்கள் இரத்தம்.
கழகத் தொண்டர்கள் இரத்தம்.

கொ.பெ.பி.அய்யா.










Friday, 17 January 2025

நாளைய வெற்றி.

நாளை நமதே!

நாளைய வெற்றி நம்விரல் மைய்யில் 

ஏழையர் நாம்தமிழ் கைய்யில்,

விவசாய முதல்வர் அவசியம் அதற்கு,

தவசியம்மா புதல்வற்கே ஓட்டு.


ஆளுக்கு ஆளு பணவங்கிக் கணக்கு,
நாளுக்கு நாளு உயர்விங்கு இருக்கு.
எடப்பாடியாரே முதல்வராம் நமக்கு,
கடமை இருக்கு போடுவோம் ஓட்டு.


குறையென்ன சொல்ல எடப்பாடி ஆட்சி,
திரைப் பின்னே மெல்வார் புறமாகப் பேசி.
வேறோடு மீட்போம் சுபவாழ்வு ஆட்சி,
சீரோடு காப்போம் நாம் போட்டு ஓட்டு.


கொ.பெ.பி.அய்யா.


வள்ளல் எடப்பாடியார்.

வள்ளல் எடப்பாடியார்.

அள்ளிக் கொடுக்கும் வள்ளலார்,
உள்ளம் தங்கம் எம்ஜியார்.

உள்ள படியே விவசாயிதார்.

சொல்லும் புகழ் எடப்பாடியார்

ஏழைகளின் சுமை தாங்கி
வாழவைத்தார் கடன் நீங்கி.
தோழராய் வாழுங் குசேலர்
சோழராய் ஆளும் எடப்பாடியார்.

மகளிற்கு சோதரராய்
உகந்தசீர் ஆதரராய்
தேவையென்ன கேட்டறிவார்
சேவகராய் எடப்பாடியார்.

மழைக்கு அவர் சொந்தக்காரர்
செழிக்கும் வளம் சிந்தைக்காரர்.

செயயும் விவசாயம் செழிக்கச் செய்யும்.

பெய் யென்றாலே பெய்யும் மழை.

கொ.பெ.பி.அய்யா.

எம்ஜிஆர் போட்டவிதை

எம்ஜியாரு போட்ட விதை

ரெட்ட ரெட்ட இலையாத்தான்,
மொத்தம் மொத்தம் கிளையாத்தான்,
துளுத் துருக்கு நாடு எங்கும்;
செழித் திருக்கு வீடு எங்கும்.

எம்ஜியாரு போட்ட விதை,
எங்கம்மா காத்த இதை,
மேய வந்த கறுப்பாடு;
மேல பாத்து ஏங்குதடா..

நாட்டு மக்கள் தோட்டமிது,
நட்டு வச்சார் எம்ஜியாராம்,
யாருக் கென்ன சொந்தமிது;
பேரு அண்ணா திமுகது.

குடும்பச் சொத்தாக் கொண்டாடி,
கொண்டு தின்னும் வாரிசல்ல;
எழுந் தலை இயக்கம் இது;
 புரட்சித் தலைவர் அதிமுக.

மக்கள் மனம் நின்றவராம்,
மக்கள் இயக்கம் கண்டவராம்,
மகாத்துமா எம்ஜியாராம்;
மறு பிறப்புப் புரட்சியாராம்.

மனித சேவை தொண்டுக்கே,
புனித அதிமுக கண்டவராம்,
மாமனிதம் ஜெயலலிதாவின்;
மகான் அவர் எம்ஜியாராம்.

கொ.பெ.பிச்சையா.





Wednesday, 27 November 2024

புரட்சித் தமிழரே நாளைய முதல்வரே!

புரட்சித் தமிழர்.

புரட்சித் தமிழர் நாளைய முதல்வர்.
இரும்பு மங்கை அம்மா 
வழியார்.
நிரந்தரக் கழகம் பொதுச் செயலர்.
புரட்சித் தலைமை எடப்
பாடியார்.

புதுமைப் பித்தன் புரட்சித் தமிழர்.
பதுமை அரசை முடிக்கும் வல்லார்.
கொங்கு மண்டலம் தந்த சிங்கம்.
எங்கள் தங்கம் இளைய புரட்சியார்.

சிங்கக் கர்ஜனை சீறுந் தலைவர்.
முன் எதிர் துணிவார் எவரவர்?
விஞ்சும் குரலால் அஞ்சும் எதிரி  -
ஒஞ்சும் பின்புறம் தஞ்சம் புகுவார்.

கழகம் என்றால் பழனிச் சாமியர்.
காவலர் அவரே எதிர்க் கட்சித் தலைவர்.
பழகும் நண்பர் பகைப்பார் யார்?
இளகும் பண்பார் எதிர்ப்பார் யார்?

வேளாண் தொழில் விவசாயி
மகனார்.
விவசாயம் போற்றும்  வேளாண்மைத் தமிழர்.
ஏழ்மை வறுமை அறிந்த ஏழை
வாழ வைக்கும் முதல்வர் நாளை.
 
காலம் நமக்கு கனிந்த நல் வேளை.
நாளை நமதே நல்வழிச் சாலை.
துணி வெடுப்போம் அணி வகுப்போம்.
இனியில்லை தூரம்  இன்றே நேரம்.

விவசாயம் அழிக்க வல்ல வீணர் எவரோ!
அவசரமாய் வாரார் ஆளுமை வல்லார்.
வாரார் வாரார் முதல்வர் வாரார் 
எடப்பாடியாரே ஆளுந் தமிழர்.

கொ. பெ. பி. அய்யா.











🤩








Wednesday, 31 March 2021

நல்லாத்தானே போகிறது.

நல்லாத்தானே போகிறது
நம்ம தமிழ் நாடு.
எடப்பாடி ஆட்சியிலே
என்ன குறை பாடு?

பேசாத பேச்சை எல்லாம்
கூசாமல் பேசுறாங்க.
நாசமா போகத்தானோ!
வீசுறாங்க வார்த்தைகளை.

விவசாயி வாழத்தானே
விவசாயி முதல்வரானார்.
அவசியம் அவர்தானே
தவசியம்மா புதல்வரே.

விளாத்திகுளம் தொகுதிக்கே
சிலாக்கியம் சின்னப்பரே.
வாக்களித்து ஆதரிப்போம்.
ஆக்கம்பெற தேர்ந்தெடுப்போம்.

கொ.பெ.பி.அய்யா.