Friday, 24 January 2025

தாய்ப் பால் கள்ளிருக்க.....!

கள்ளக்குறிச்சி பாவம்.

தாய்ப் பாலப்  போலக் கள்ளு தந்த பனையும் கதறுது ஐயய்யோ!
மாய்ந்து சாயும்  சேய்களுக்கு தாய்ப் பாலுந் தடையோ 
ஐயய்யோ!

கள்ளும் தானே ஓர் உணவு,
சொல்லுந் தமிழும் ஊர் மரபு.
பனைத் தொழில் செய்யும் விவசாயம்,
தனைத் தடையென்ன ஐயோ அநியாயம்!

ஆகாரம் கள்ளுக்கு தடை போட்டு,
சாவுக்கு  சாராயக் கடை போட்டு;
அரசே விற்கும் அதிகாரம்
புருசனை விலக்கும் சுவிகாரம்.

அவணி எங்கும் அவலக்குரல்
அறுந்து விழுந்திடும் தாலிக் குவியல்.
வித்தக் காசும் போதுந் தானோ!-
செத்தது எத்தனைக் கொடுமை ஐய்யோ!

கள்ளக் குறிச்சி கண்ணீராறோ!
எல்லை மீறி ஓடுது ஐய்யயோ!
நாடெங்கும் ஊரும் பேராச்சோ!
கேடோங்கும் ஏழை சாவாச்சோ!

போதைக் காக வியாபாரமோ!
சாவுக்கான  ஆதாரமோ!
வெந்த மனசும் ஆறல்லயே---- ஐய்யோ-
 வியாபாரம் இன்னும் தீரல்லயே!

விசத்த விற்பதும் வியாபாரமோ!
நிசத்தச் சொன்னால் கேவலமோ!ஹஹ்
பொண்டாட்டி புள்ளைக பாவம.
திண்டாடும் கொடுமை சாபம்.

எத்தனை இலட்சங்கள் கொடுத்தால் என்ன!
அத்தனை உச்சம் எட்டுமோ!
தகப்பனைத் தேடும் பிள்ளைக்கு:
தாயென்ன சொல்வாள் பதிலுக்கு?

கொ. பெ. பிச்சையா.






No comments:

Post a Comment