Saturday, 25 January 2025

அம்மா இரங்கற்பா.

அம்மாவிற்கு இரங்கற்பா

அம்மா அம்மா வா! வா!
அகிலம் இன்று அழுகிறதே!
தாயே தாயே எழுந்து வா!
தமிழே கதறி அழுகிறதே!.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ!
புரட்சித் தலைவி புகழே நீ!
உழைத்துக் களைத்து அவர்நிழலே!
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவியும் நீயென்றோம்.நிறைந்தும் தமிழகம் நீயாக பரந்தும் துணைசெய் தாயாக.

மறைந்தாய் என்பது பொய்யாக,

எழுந்தாய் என்பதே மெய்யாக

எழுந்து வா எம்தாயே!

கொ.பெ.பி.அய்யா.

தாயே தமிழே வாழ்க!





தாயே தமிழே வாழ்க!

அம்மா என்னும் சொல் உதிர்த்தால்
அன்பு என்னும்  நெல் சிதறும்.
அம்மா எண்ணி உள்  நினைத்தால்
எம்மா வஞ்சமும் தான்
பதறும்.

தாயே என்னும் தமிழ் பகிர்ந்தும்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே உள்ளம் உனை நினைந்தும்
தைரியம் உள்ளே வினை முனைக்கும்.

அன்னை சொல்லோ வாய் மலரும்.
முன்னை வெல்ல தான் புலரும்.
விண்ணைத் தொடவும் எண்ணித் துணியும்
மண்ணில் பகையும் முன்னே பணியும்.

மாதா உந்தன் மகிமை முன்னால்.
சாதா எல்லாம் சகலமும் தன்னால்.
வேதா இல்லம் ஆலயம்
நின்றும்
சோதனை வெல்லும் போதனை சொல்லும்.

பெற்றாள் மடியினில் பிள்ளை முகம்போல்
பெற்றார் மகிழ்வதும் உன்னடி நிழல்கீழ்.
நற்றமிழ் சிறப்பதும் கற்றது போலே
மற்றென்ன அறிவதும் உற்றதும் மேலே!


தாயே வாழும் தமிழே வாழ்க!
நீயே ஆளும் நிலையே வாழ்க!
நேரே நிசமே சீரே வாழ்க!
பாரே வசமே தீரே வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.

வெற்றிச்சங்கம்.

வெற்றிச்சங்கம்.

நாடு எங்கும் பச்சை இலைகள் 
வீடு எங்கும் இரட்டை இலைகள்
ஈடு உண்டோ எமக்கிங் கலைகள்
ஓடும் கூட்டம் தேடுது வளைகள்

நாற்பதும் நமக்கே நல்லுறவாகுது
தோற்பது மற்றவர்க்கு 
முள்ளுறவாகுது
சேமம் வாழுது அண்ணா திமுக 
நாமம் போடுது புண்ணாக்குகள்

வெற்றிச்சங்கம் சுற்றி முழங்குது.
கொட்டும் முரசுகள் கொட்டிக்கிழியுது.
பற்றிச்சூரியன் எட்டி ஓடுது.
இரட்டை இலை மட்டும் எங்கும் தோணுது


வெற்றிச்சங்கம் அம்மாவுக்கு 
விழாக்கோலம் அம்மாவுக்கு.
கெட்டித் தனித்த துணிச்சலுக்கு 
முத்திய பரிசிது தமிழளிப்பு

கொ.பெ.பி.அய்யா.

பாரதமே சொர்கம்.

பாரதமே சொர்க்கம்!!

முந்திய நாகரிகம் உயர்
மூத்த குடிமக்கள்.
விந்திய மலை முட்ட
வேண்டிய செல்வங்கள்.
இந்தியத் திரு நாட்டின்
இருப்பென்றெண்ணியே
வந்த பறவையெல்லாம்
வாரிச் சென்றதோ!

பொறுமைப் பூமி இது
பொக்கிசக் களஞ்சியமோ!
வறுமைப்பட்டுப் பின்
வாடி நின்றதோ!
பெருமை குலைந்து தன்
பிள்ளைப்பசி போக்க
திருமை நாடுகளை முன்
தேடியும் நின்றதோ!

அடிமை செய்தவன் தளை
அறுத்து ஏகினாலும்.
விடிவு வருமென இமை
விழிக்கும் வேளையில்
தடித்த மனத்தினர் தலை
தூக்கிச்சிரித்தனர்..
பிடித்து வளைத்து அடிமை
பிணையமாக்கினர்.

குடும்பம் குடும்பமாய்
கொத்தடிமைக் கோலம்.
கொஞ்சங் கொஞ்சமாய்
குறைந்திட்ட போதும்
பிஞ்சு இளசுகள் கஞ்சிக்காக
நஞ்சுக் கொடியோரின்
வஞ்சக ஏவலில் நைந்து
வாடுவதோ பாவம்.!.

ஒட்ட ஒரு இடமில்லாமல்
  ஓரம் தேடி உறங்குது.
கட்டில் தேடும் இளசுகளோ
 காடுகளிலில் மறையுது.
தொட்டில் ஆடுங் குழந்தைகளோ
 தொட்டி களில் கதறுது.
மொட்டில் வாடும் பிஞ்சுகளோ
 தட்டில் பிச்சை கேட்குது.

வயிற் றிற்கு சோறில்லாமல்
வழிப் பறிகள் செய்யுது.
பத்து மாதம் சுமந்துபெற்ற
பால கரை விற்குது
வேலை யேதும் இல்லாமல்
வீதிகளில் நிற்குது.
வறுமை செய்யும் கொடுமையில்
வழிதவறிச் செல்லுது.

இந்த நிலைமாற அரசு
ஏற்றும் திட்டமெல்லாம்
வந்திடும் வழிகளிலேயே
சந்துகளில் ஒளிகிறது..
எந்த நிலையிலும் இங்கே
எவருமே சரியில்லை.
சொந்தமாகுமோ அந்த
சுடு காடு எவருக்கும்?

என்னதான் செய்யலாம்
ஏதாவது சொல்லுங்கள்.
பாவம் இந்த ஏழைகள்
பசி தணிக்க உதவுங்கள்.
ஊழல் செய்யும் கோழைகளை
உணர வழி செய்யுங்கள்.
பாழ் படுத்தும் பாவியரை
நாள் கொடுத்து தூக்குங்கள்.

ஆள் எண்ணித் தேடுவீர்!
அடிமைத்தனம் நீக்குவீர்!
தனி நிலைப் பொருளாதாரம்
நனி நிலை தேக்குவீர்!
இல்லாரே இல்லாது
எல்லோரும் ஆக்குவீர்!
வல்லாண்மை கொண்டுமே
வளர்ந்த நிலை தூக்குவீர்!

புதிய விடியலை நோக்கி
புதுமைகள் தேடுவோம்.
நதிகள் கடல் மறக்க
நல்லணைகள் கட்டுவோம்,
பசுமை வண்ணமெங்கும்
பாரெங்கும் பரப்புவோம்.
பசியை மறந்தோமென
பாரதமே சொர்க்கமென்போம்.

அம்மா அய்யா வரங்களில் 
அனைத்திந்திய அதிகாரம் 
செம்மா நிலைப் பலமுடன்
செயல் முறைத் தன்திறம்
எல்லாம் கொண்டு தான்
ஏற்றிடும் போதுதான் 
வல்லரசாகிடும் 
வளம் கண்டு உயர்ந்திடும்.

கொ.பெ.பி.அய்யா.







Friday, 24 January 2025

அம்மா வாக்கு.

அம்மாவின் வாக்கு.

நூறாண்டுக் காலம் கழகம் ஆளும்
அம்மாவின் வாக்கு வேரூன்றி வாழும்.
புரட்சியில் உதித்த பொன்மனக் கழகம்,
நிரந்தரம் அண்ணா தி.மு கழகம்.(நூறா)

சத்தியத் தாயின் உத்தமப் புதல்வன்,
சத்தியப் பாதையின் புரட்சித் தலைவன்;
இரத்தத்தின் இரத்தம் தமிழர் இயக்கம்-அம்மா
புரட்சித் தலைவி புதுயுகம் விளக்கம்.(நூறா)

தொண்டன் இங்கு தலைவ னாகிறான்.
எந்தன் என்பான் இடறி வீழ்கிறான்.
வாரிசு முறையாம் சர்வாதி காரம்--என்றும்
நேராத கழகமாம்  சனநாயகம்.(நூறா)

எவரும் உழைத்தால் முதல்வர் ஆகலாம்.
எடப்பாடி உரைத்த சத்திய வாக்காம்.
வாணிவக் கழகம் போலிது அல்ல-தமிழ்
மானுடக் கழகம் நூறாண்டு வெல்லும்.(நூறா)

கொ.பெ.பி.அய்யா.

இராமஜெயராஜ்யம்.

ஜெய இராஜ்யம்

அய்யா எடப்பாடியார்
ஆள வேண்டும் தமிழகம்-இராமஜெய இராஜ்யம் சாத்யம்
ஆவதும்மால் சத்தியம்.

இராமச்சந்திரன் ஆண்ட நாடு—எம்ஜி
இராமச்சந்திரன் ஆண்ட நாடு
வேறு இராஜ்யம் இல்லை ஈடு
இரட்டை இலை சின்னமாம்.
பறக்கும் கொடி அன்னமாம்.

இராமன் கண்ட எம் தாயே—எம்ஜி
இராமன் கண்ட எம் தாயே!
சேமம் செய்வார்  நம்மையே!
மக்களால் மக்களுக்காக
 இராஜ மாதா மந்திரம்.

ஆறே போன்ற உம் கருணை-எம்ஜி
ஆரே போன்ற உம் கருணை
பாரே போற்றும் நம் பெருமை.
நூறாண்டுக்கு மேலும் ஆளும்-
இராம ஜெய இராஜ்யம் நீளும்.

கொ.பெ.பி.அய்யா.




மாதவரம் மூர்த்தி.

மா---தவ--வரம்

மா--தவ--வரம் மாதவரம்,
மூர்த்தி பேராங் கீர்த்தியாம்;
நேர்த்தியே அம்மாச் செல்லம்--வள்ளுவ
மாவட்டச் செயலர் வாழ்க!

முன்னாள் மாண்பு மூர்த்தியார்,

சென்னாப் புகழ் பூர்த்தியார்;

எடப்பாடியார் பற்றாளர் 

வாழ்த்துவோம்.

திருவள்ளூர் மாவட்டம்,
திருசொல்லு பேர்வட்டம்;
அண்ணா திமுக கோட்டம்--அம்மா ஒன்றே எங்கள் உயிரோட்டம்.
நன்றி  கொள்வோம் கடனாட்டம்.

கொ.பெ.பி .அய்யா.