Monday, 10 November 2025

பட்டிக்காட்டுப் பழனிச்சாமி.

பட்டிக்காட்டுப் பழனிச்சாமி 

பட்டிக் காட்டுப் பழனிச்சாமி 
பழகும் நல்ல உழவர்சாமி. 
வேட்டி போல வெள்ளைச் சாமி.
கர்வம் இல்லா கடமைச் சாமி.

குழந்தை போல சிரிக்குஞ் சாமி 
பழக நல்ல ஏழைச் சாமி.
ஏர் பிடிச்சு உழவு செய்த
ஊரறிஞ்ச மனிதர் சாமி

காரில் ஏறிப் போனாலும் 
கண்டால் பேசும்  ஆசாமி.
அரசியல் வாதி போலல்லா
சராசரி பழனிச் சாமி

உறவு சொல்லி அழைக் குஞ் சாமி
சரளமாகப் பழகுஞ் சாமி.
விவசாயம் தெரிஞ்ச சாமி
அவசியம் பழனி ச்சாமி.

அதிகாரம் காட்டா சாமி
முதல்வரான மனிதர் சாமி
தவசியம்மா பெற்ற மகன்
விவசாயி பழனிச்சாமி

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 9 November 2025

கழக வாழ்த்து

கழக வாழ்த்து

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்
கொடை வள்ளல் எம்ஜிஆராம் --அவர்
கொடுத்துச் சென்ற கழகம் இதுதான் 
கொடுக்கும் அதிமு கழகம் வாழி"

கருப்பு மனிதன் சிவப்பு இரத்தம்
வெள்ளை மனசுத் தமிழன்--நமது
அண்ணாவின் புகழ்  சொல்ல வாழும்
அண்ணா திமு கழகம் வாழி

தமிழன் புகழ் தரணியெங்கும் ஓங்க
அமிழ்தம் அண்ணா வழியே--தமிழர்
ஆதாரக் கொள்கை யெனக் கொண்ட
அசலாமிது அதிமு கழகம்.வாழி

அண்ணா எம்ஜிஆர் பின் அம்மா 
இன்று எடப்பாடி யாரும்--என்றுந்
தொடரும் இன்னும் வளரும் மக்கள்
உடைமை அதிமு கழகம்.வாழி

தமிழ் வாழ தமிழருக்கே உரிமை
கமழுந் தூயக் கழகம்--ஆயிரம்
கோடிகள் ஆணடுகள் நீண்டும் நீண்டு
வாடாமல் வாழ்க! வாழ்க! 
அதிமு கழகம் வாழ்கவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Friday, 7 November 2025

நாடே கடனில்............!

நாடே கடனில்.............!

நாடே கடனில் நாடாள்பவன் அம்பானி.
பாடே வாழ்வான பாமரனோ பட்டினி.
ஓட்டை விற்றவன் ஓட்டைக் குடிசையில்
ஓட்டைப் வாங்கியவன் கோபுர மாளிகையில்.

நமக் கெதற்கு வம்பென நாலாம் தூண்
அமுக்கி வாசிப்பதும் அடங்கியதும் ஏன்?
பணநாயகம் வென்றும் சனநாயகம் தோற்றும்.
அநியாயம் ஆனதோ ஆகாத சுதந்திரம்.

பாவங்கள் மேயாட்டம் பகற்கொள்ளை பேயாட்டம். 
சாபங்கள் கோபங்கள் தியாகமெங்கே போராட்டம்.
உரிமைக்கு விலைபேசும் வறுமைக்குச் சாவிலையோ!
பெருமைக்குப் பேர்சொல்லும் மகான்கள் பிறப்பிலையோ!

அடிபட்டு மிதிபட்டு ஆயிரங்கள் பலியிட்டு,
விடியலைப் பெற்றுத் தந்தார் தியாகிகள்
விடியாமல் விடியுமுன்னே வேட்டையர்
நுழைந்திட்டார்.
அடைந்தது ஆகாசம் முடிந்தது இதிகாசம்.

சுற்றிச்சுற்றித் திரிகிறாள் சுதந்திரத் தாய் அழுகிறாள்.
நோகாமல் நுங்குதின்போர் சாகாமல் வாழுகிறார்.
மீண்டும் ஒருபாரதம் வேண்டும் வேண்டுமே
விஷ்ணு மறுஅவதாரம் கல்கியே வருகவே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


இரட்டை இலைக்கே என் ஓட்டு.

இரட்டை இலைக்கே எம் ஓட்டு

எம்ஓட்டு என்றும் இரட்டை இலைக்கே
இந்நாட்டின் நலனார் எடப்பாடி அவர்கே.
எம்ஜிஆர் காட்டிய இரட்டை விரல்களே
என்றும் எமது வெற்றிக் குரல்கள்.

தமிழ் நாடாளும் இரட்டை இலைகள்.
தரணியே மிரலும் புரட்சி அலைகள்.
அன்பின் இணைப்பு ஆத்ம அணைப்பு.
ஆளுகைப் பண்பு ஆளுமை வனப்பு.

மக்கள் தலைமை மக்கள் ஆட்சி.
மக்கள் படைத்த மாண்பின் மாட்சி
மக்கள் அலையில் தோன்றிய காட்சி..
மக்கள் நலனே மக்களே சாட்சி.

மக்கள் இயக்கும் மக்களின் இயக்கம்.
மக்கள் சக்தி மக்களின் யுத்தம். 
மக்கள் உழைப்பு மக்களின் சொத்து.
மக்கள் காப்பு மக்களின் அதிமுக.

எதையோ நினைத்து எதற்கோ வந்தார்.
அதையே மறைத்து அதனால் சென்றார்.
மக்கள் உடைமை மக்களின் உரிமை.
மக்கள் நாயகன் எடப்பாடி நின்றார்.

பொதுநலன் என்பது கொள்கை எல்லை
சுயநலம் கொள்வார்கு இடமே இல்லை.
அதிமுக என்பது அறப்போர் படை
அற்பருக்கு இங்கே எப்போதும் தடை.

தோல்வி என்றொரு சொல்லே இல்லை 
வேள்வி அதுவே வெற்றியின் சொல்லே.
புரட்சித் தலைவர் போதனை ஞானம்.
புரட்சிப் படையிது சாதனை காணும்.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

சிவந்த கரங்கள்

கொடுக்கும் கழகம்

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்
கொடை வள்ளல் எம்ஜிஆராம் --அவர்
கொடுத்துச் சென்ற கழகம் இதுதான் 
கொடுக்கும் அதிமு கழகம்.

கருப்பு மனிதன் சிவப்பு இரத்தம்
வெள்ளை மனசுத் தமிழன்--நமது
அண்ணாவின் புகழ்  சொல்ல வாழும்
அண்ணா திமு கழகம்.

தமிழன் புகழ் தரணியெங்கும் ஓங்க
அமிழ்தம் அண்ணா வழியே--தமிழர்
ஆதாரக் கொள்கை யெனக் கொண்ட
அசலாமிது அதிமு கழகம்.

அண்ணா எம்ஜிஆர் பின்னே அம்மா இன்று எடப்பாடி யாரும்--என்றுந்
தொடரும் இன்னும் வளரும் மக்கள்
உடைமை அதிமு கழகம்.

தமிழ் வாழ தமிழருக்கே உரிமை
கமழுந் தூயக் கழகம்--ஆயிரம்
கோடிகள் ஆணடுகள் நீண்டும் நீண்டு
வாடாமல் வாழ்க! வாழ்க! 
அதிமு கழகம் வாழ்க! வாழ்கவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Saturday, 1 November 2025

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி --இனி
எப்போதுமே நிம்மதி.
அலப்பறைங்க போனாங்க --அட
ஆண்டவனே நிம்மதி.

உடனிருந்தே தொல்லையாய்--கெட்டக்
கடங்காரங்க அலப்பறைபோல்.
விட்டதடா சனியன்கள்--விட்டுத்
தொலைஞ் சாங்கடா இம்சைகள்.

ஏழரைகள் இடைஞ்சல்கள்--ஐயோ
போலரைகள் புலம்பல்கள்.
கஷ்டகாலம் ஓஞ்சது--துஷ்ட
சகவாசம் தீஞ்சது.

தள்ளி விடத் தயங்கித்தான்--கொஞ்சம்
தள்ளி நின்னே யோசனை. 
கிள்ளி விட்டு அவங்களே--கொள்ளி
வச்சுக் கொண்டாங்க.

ஆரவாரம் தீர்ந்தது--அடங்கா
அலைகடலும் ஓய்ந்தது.
அமைதி யெங்கும் நிலவியே--அசல்
அதிமுக நிலைத்தது.

கவிஞர். KPPAYYA


Friday, 31 October 2025

போனால் போகட்டும்.

போனால் போகட்டும் தம்பி 

போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி?
வந்தாலும் வரட்டும் தம்பி,--சென்று
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்தாலும் பாடம் படிக்கட்டும் தம்பி.

அரசியல் என்பது போராட்டம்--அதை
அறிவார் புரிவார் உணரட்டும்.
அனுபவம் அவரை திருத்தட்டும்--காலம் 
உணர்த்திய உண்மை விளங்கட்டும்.
போனால் போகட்டும் தம்பி -- முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும். தம்பி

உறவில் உதித்தது அதிமுக---அதைப்
பிரிவதில் பிரிந்தவர் பாவம்.
தவறைச் சொல்லி வருந்தாமல்--நல்ல
உறவை முறிப்பதா இலாபம்?
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

பிரிவும் முறிவும் வழிமுறையா--அதை
இரத்தத்தின் இரத்தங்கள் ஏற்குமா?
வரலாறைக் கேட்டால் சொல்லும்--அதை
திரும்பிப் பார்த்தால்  திருத்தும்.
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

தொண்டர்கள் அமைத்த  இயக்கம்--எவர்
துண்டாட நினைப்பார் தோற்பார்.
மக்கள் சக்தி இயக்கம்--எத்தனை
சிக்கலும் எதிர்க் கொண்டும் நிலைக்கும்
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தநத பாடம் படிக்கட்டும் தம்பி.

 மேலே எம்ஜிஆர் இருக்கிறார்--சர்வ
வல்லமை அம்மாவும் பார்க்கிறார்.
பூமி சழலும் வரைக்கும்-- சரித்திர
சாமி சோன்ன சத்தியம் நிலைக்கும்.
போனால் போகட்டும் தம்பி --முன்னர்
போனவர் விலாசம் தெரியுமா தம்பி.
வந்தாலும் வரட்டும் தம்பி--அரசியல்
தந்த பாடம் படிக்கட்டும்.தம்பி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.