Tuesday, 26 May 2015

பாவி சுப்ரமணி

எங்கிருந்தோவந்தான்.

எங்கிருந்து வந்தவனோ-நிலம்
தங்கியிங்கு வாழ்பவனோ!
சொங்குமொழி பேசுமவன்-ஐயோ
பங்கஞ்செயும் பாவியவன்.

சுப்ரமணி யென்பானவன்--சப்ரம்
சாவியையும் எடுப்பானவன்.
கூலிக்கவன் மாரடிப்பான்--நீதி
வேலியையும் சீரழிப்பான்.

எங்கிருந்தோ அலறுகிறான்--பொய்
ஏதேதோ உளறுகிறான்.
சங்கறுந்த கோழிபோலும்--தலை
தொங்கிஊளை கூவுகிறான்.

வேலையற்ற கோழையவன்--சுய
மூளையற்ற பாறையவன்.
நெஞ்சமற்ற வஞ்சனவன்.--நேர்
கொஞ்சமற்ற கஞ்சனவன்.

ஆடும்வரை ஆடிடுவான்.--தானே
அகமொடுங்கி வாடிடுவான்.
தேடுமவன் பாவங்களே--கூடும்
நரகமவன் சாபங்களே!

கொ.பெ.பி.அய்யா.



Thursday, 30 April 2015

தனக்குத்தானே தீ

தனக்குத்தானே

தனக்குத் தானே படிப்பவன்
தலையில் தீ வைப்பவன்.
எனக்குத் தெரியும் என்பவன்
எரிவது புரியாமல் அழிகிறான்.

மல்லாக்கப் படுத்துத் தன்
மார்மீதே உமிழ்கிறான்.
சொல்லாக்கம் விளங்காமல்
சீர்கெட்டு உளர்கிறான்.

தன்னைத் தானே பாறைமீது
முன்னை முட்டி படுகிறான்
கண்ணைக் கட்டி குழியிலே
மண்ணை மூடி விழுகிறான்.

ஆளாக்கி விட்டவரை
கீழாக்கிப் பழிக்கிறான்.
பாழாக்கும் பொல்லோரை
தோளாக்கி இழிகிறான்.

ஊரு கெட்டுப் போனாலும்
தூரம் போய் வாழலாம்.
பேரு கெட்டு நாறிபோனால்
யாரிடம் போய் சேரலாம்.

குடிகாரன் சொல்வதெல்லாம்
அதிகாரம் ஆகுமா?
அரிதார வேசமெல்லாம்
அழியாமல் போகுமா?

ஆடும்வரை ஆட்டமெல்லாம்
கூடும்சனம் கூட்டமெல்லாம்
வீழும்வரை இரசிக்கத்தானடா
வீழ்ந்தபின் சிரிக்கத்தானடா.

தூண்டிவிடும் கோழைத்தனம்,
தூண்டில்விழும் ஏழைத்தனம்.
ஆண்டிமடம் பேடித்தனம்,
ஆண்டதுண்டா அடிமைத்தனம்?

கொ.பெ.பி.அய்யா.

Monday, 20 April 2015

அம்மாவின் ஆட்சி.

அம்மாவின் ஆட்சி.

அம்மாவின் ஆட்சி ஆளுந்தமிழாட்சி.
அண்ணாவின் தம்பி எம்ஜியாராட்சி.
ஆயிரம் யுகங்கள் அது நிலையாட்சி.
ஆலய முகங்கள் அவர் புகழ்சாட்சி

ஏழைகள் வயிறு குளிர்ந்திட்ட ஆட்சி.
நாளைய கவலை தொலைந்திட்ட ஆட்சி.
அடிநிலைத் தமிழன் வளர்ந்திட்ட ஆட்சி.
விடியலில் உழவன் விழித்திட்ட ஆட்சி.

பாமரன் இல்லா பழந்தமிழ் ஆட்சி.
கோமள வள்ளி குலமகள் ஆட்சி.
தேவைகள் திகட்டிய திருமகள் ஆட்சி.
நோவுகள் அகற்றிய நலந்திகழ் ஆட்சி.

அறிவியல் புரட்சி நிறுவிய ஆட்சி.
அலுவல் வறட்சி அருகிய ஆட்சி.
மனதும் நிறைந்த ஏழையின் ஆட்சி.
மலர்ந்தது இராமன் தூய்மை ஆட்சி.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 16 February 2015

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.
சும்மா மற்று என்றது.
மக்கள் மன்றம் தீர்ப்பெழுதி
திக்கெல்லாம் சேர்த்தது.

பொய்வான வேடிக்கைகள்.
செய்மோச சோடனைகள்.
மெய்தாங்கக் கதியிழந்து
தொய்நைந்து அழிந்தது.

இரண்டாயிரத்துப் பதினாறாம்
மிரண்டோடும் எதிராரும்.
எப்பவுமே அம்மாதான்
செப்பும் தமிழ் நின்றாளும்.

முடியட்டும் நரியாட்டம்.
விடியட்டும் இனியாச்சும்.
மீட்சி பெற்ற தமிழகம்
ஆட்சி என்றும் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 3 February 2015

விதியோ சதியோ!

விதியோ!சதியோ!

விதியோ சதியோ எதுதான் தாயே!
மதியால் முடிப்பாய் அதுதான் நீயே!
விரித்தவன் வீழ்வான் வலையில் அவனே
நெறித்தமிழ் ஆள்வாய் நிலையில் புகழே!

விதியும் சதியும் வினையென்ன செய்யும்
மதியும் கதியும் துணைமுன்ன செல்லும்.
தமிழினம் உனது தனிப்படை எதிர்த்தும்
எமனிடம் படவும் துணிவதும்  எவராம்.

விதியா மதியா விளையாடு தாயே !
சதியா கதியா சதுராடு நீயே!
பத்துக் கோடிகள் பலம்கொண்ட உன்னை
வெத்துப் பேடிகள் விழிக்குமோ முன்னை!

விதியென்ன சதியென்ன எதுஉன்னை வெல்லும்?
கதியென்ன அதுதன்னை மதிபின்னே தள்ளும்.
தாயிடத்தில் சேயணைய நாயெதுதான் தடுக்கும்?
கோயிலிடம் கூவைகளும் கூவியென்ன கெடுக்கும்?

விதிகெட்டு சதிபட்ட வினைக்கூட்டு முறியும்.
மதியெட்டு கதிதொட்ட கணையாட்டம் புரியும்.
பொய்யதனை மெய்யாக்க புனைந்தவொரு நாடகம்.
மையழித்துக் கைநீக்கி அணைந்துதிரை மூடாகும்.

கொ.பெ.பி.அய்யா.
.

Tuesday, 9 December 2014

அவை வாழ்த்து

அ.இ.அ.தி.மு.க. அவை வாழ்த்து.

அண்ணா இயக்கம் அரசியல் திருவே!
பொன்மனச் செம்மல்  புரட்சியார் புகழே!
கண்ணாய்க் கழகம் காத்திட்ட இறைவியே!
விண்ணுயர் புரட்சித் தலைவி வாழ்கவே!

என்றும் தமிழகம் வென்றும் நிரந்தரம்
நன்றும் சிறப்பதும் ஒன்றும் முதல்வரே!
கொண்டும் தவமாய் மக்கள் தலைவராம்
நெஞ்சம் நிறைந்த அம்மா வாழ்க!

மக்களால் அம்மா மக்களுக் கம்மா..
சொற்களால் அல்ல செயலால் அம்மா.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
அம்மாவின் அருளால் ஆல்போல் வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 23 November 2014

ஒற்றைச்சிங்கம்.

ஆள் தேவையில்லை.

ஒத்தையான சிங்கமா நிக்கிறாங்க எங்கம்மா
சத்தியமா சொல்லுவேன் சுத்தமான தங்கம்மா.
வெத்துப்பேச்சு வீரமா கத்துனாலும் ஆகுமா?
நிச்சயமா வெல்லுவோம் சத்தியம் மாறுமா?

மீசையில்லா ஆம்பள பேசுறதும் யாருதான்.!
ஓசையில்லா காட்டுல ஊளைச்சத்தம் ஊதுறான்.
ஆளில்லா ரோட்டுல மேடை கட்டி தேடுறான்.
.வாலில்லா கூத்துல  ஆடை மாத்தி ஆடுறான்..

மக்களென்ன கொக்காயா தொக்காக எண்ணுறே!
நிக்கிமா வெண்ணவக்க சிக்குமா ஏங்குற!.
சக்கரைப் பொய்யெல்லாம் விக்கிற சரக்கில்லை.
அக்கரை எப்பய்யா! இப்பவந்து அவுக்குற.!

பதுங்கியுள்ள சிங்கத்தைநீ ஒளிஞ்சிநின்னு சீண்டுற
ஒதுங்கிநீ ஓடிவிட்டால் உனக்குத்தான் நல்லது.
எதுக்கு தம்பி வம்பெல்லாம் பாவம்நீ.
எதுக்கவும் என்னதான் இருக்குனக்கு தகுதியும்!

அம்மா தான்னு தெரிஞ்சு போச்சு.
அப்புறம் ஏம்பா வீணாப் பேச்சு.
ஆளும் ரொம்ப இளச்சித்தான் போயிட்ட.
ஆளெடுத்தா சொல்லுறோம் இப்பநீ போபோ!

கொ.பெ.பி.அய்யா.