Friday, 28 September 2018
Wednesday, 30 May 2018
பாரதச்செல்வி.
தமிழினத் தலைவி!
தனிநிகர் இறைவி!
ஊரது தமிழாம்!
நேரது செயலாம்!
பாரதச் செல்வி!
பேரது அம்மா!
அம்மா என்றே
தம்புகழ் கொண்டே
இம்மா நிலமே
செம்மாந்த தரமே.
தாய்வழி ஆட்சி
தமிழகம் தொடரும்.
மக்களின் நம்பிக்கை
மண்ணாண்ட அம்பிகை
தக்கோலம் தமிழிடம்
எக்காலும் சத்தியம்.
அம்மாவே கூறும்
ந்ம்மாளே ஆளும்.
கொ.பெ.பி. அய்யா
Sunday, 13 May 2018
அம்மா படை!
கிடுகிடுங்குது நடுநடுங்குது-பூமி
மொடுமொடுங்குது அதிர்ந்து.
மடை திறந்தது அலை தொடர்ந்தது-அம்மா
படை நெருங்குது நிறைந்து.
படபடங்குது தட தடங்குது-எதிரி
தொடை நடுங்குது பயந்து .
மனம் மகிழ்ந்தது பலம் உயர்ந்தது-அம்மா
களம் விரிந்தது நிமிர்ந்து.
கலகலக்குது விலுவிலுக்குது-துரோகம்
நிலைகுலையுது தலை தாழுது.
இரதமேறுது வலம்ஊறுது- அம்மா
விதமாகுது இயக்கம் நிலைத்து .
இடிஇடிக்குது மினுமினுக்குது-வானம்
புகழ் முழக்குது வியந்து.
கொடி ஏறுது தமிழ் வாழ்த்துது-அம்மா
விடி வெள்ளி பார்த்து.
Friday, 27 April 2018
உன்னை நம்பித்தான்.
அம்மாவின் ஆருயிரே!
தமிழ் தன்னை தேற்றுகிறது.
அம்மாவின் செல்வமே!
கைகளை உயர்த்தி நீ
நம்பிக்கை ஊட்டுகிறாய்.
காலமும் உன் தோளில்
கனவுடன் தொடருதே!.
திசையெல்லாம் உன் பேச்சு
திரை பாடும் உன் வாழ்த்து.
தாய் வளர்த்த பிள்ளை நீ!
தமிழ் நிலத்தின் காவல் நீ!
செல்லமகன் உன்னை நம்பி
வல்ல தாய் கண்ணயர்ந்தாள்.
சதி செய்த கூட்டங்களை
விதி முடிக்க நீ இருக்க
கதியாக உந்தன் பக்கம்
கடலாக மக்கள் கூட்டம்.
வேராக அம்மா நிழல்
வினை முடிக்கத் துணை இருக்கும்.
கொ.பெ.பி.அய்யா.
Wednesday, 25 April 2018
இலை துளிர்த்தது.
இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.
உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.
இருளும் அகன்று பகலும் நின்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் கொண்டாகட்டும்..
வறுமை தகர்ந்து அருமை உண்டாகட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை சென்றாகட்டும்
காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும் நினைவில் கண்டாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.
ஆட்சி எம்ஜிஆர் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை சீருமை பெற்றது வரமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் திறமாகட்டும்..
கொ.பெ.பி.அய்யா.
Wednesday, 28 March 2018
நாடு போற போக்கு.
நாடு போற போக்கு ரொம்ப நல்லாவே இருக்கு-சில
கேடு கெட்ட மனுசங்களுக்குத்தான்
கிறுக்கு பிடிச்சிருக்கு.
பாடு படும் பாட்டாளிக்கு கைகள் நிறைஞ்சிருக்கு-ஆனா
சூடு பட்ட பூனைங்கதான் ஏங்கித் திரியிது.
ஆடும் மாடும் அள்ளிக் கொடுக்கிறது செல்வம்.
வீடும் வசதியும் சொல்லிக் களிக்கிறது
இன்பம்.
ஏடும் கணிணி சீறுடை சைகிள் எல்லாம்
தேடும் கல்வி பள்ளிக் கூடம் சொர்கம்.
தேசியத் தரமாய் சாலைகள் அழகு.
கூசிய வெளிச்சம் விளக்குகள் தெருவு.
வாசிக்க படிப்பகம் வளர்த்திட அறிவு.
பூசிக்க உணவகம் பசியாற பரிவு.
தடையிலா மின்சாரம் கிடைத்திடும் அருமை
அடையாளம் அம்மாவின் ஆட்சிக்கு
பெருமை.
கிடையாது ஏழை. உடையதார் வறுமை?
அடையாத தொழிலும் அம்மாவின் திறமை.
காவிரிக்கும் விடுதலை கட்டாயம் கிடைக்கும்.
பூவிரிக்கும் ஆணையம் பூட்டெல்லாம் உடைக்கும்.
விவசாய இடுபொருட்கள் விலையின்றி படைக்கும்.
விவசாயி ஆட்சியிது விவசாயம் செழிக்கும்.
கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.