Friday, 28 November 2025

ஆலமரம் அண்ணாதிமுக.

ஆலமரம் அண்ணாதிமுக.

குளக்கரையில் ஒரு ஆலமரம் --செழித்து 
கிளை பரப்பி வாழும் மரம்.
நிழல் அகற்றி இலை நிரப்பி--அகன்று
வளம் கொழித்து ஆளும் மரம்

தேடி வந்த பறவைகளை--ஒன்றாய்
கூடி வாழ்ந்த உறவுகளை.
ஓடி வந்த கழுகு ஓன்று --உறவை
ஓட்டி விடப் பார்க்குதம்மா.

கலைத்து விடக் கத்துதோ--பந்தம்
உலைத்துக் கெடச் சுற்றுதோ.!
பழுத்து விட்ட இலைகளே--உழுத்து
நிலை குலைந்து உதிர்ந்தனவோ!

தேடி ஓடிக் கலைத்துப் போன--திருட்டுக்
கழுகு மட்டும் பறந்தது.
பொன் மனத்துச் சொந்தங்களை--எந்த
வன்மனந்தான் குலைத்திடுமோ!

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்--நன்றி
ஆராரும் மறந்தும் போனாலும்.
அம்மாவால் காத்த மரம்--இதை
ஆரசைக்கக் கூடும் அம்மா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 25 November 2025

அவலங்களும் அவமானங்களும்

அவலமா அவமானமா?

அவலங்கள் அனுபவங்கள் தாங்கலாம்.
அதனால் மனம் பண்படும்---ஆனால் 
அவமானங்களை மனது தாங்காது.
மானங்கெடும் மனது புண்படும்.

அவலங்கள் அனுபவங்கள் 
அவமானங்கள் பாடங்கள் 
அவலங்கள் அவமானங்கள் 
அனுபவித்துப் படித்துதான்
அனுபூதி மாறல் ஆம்.

நேரடி அனுப உணர்வு சீரடி அறிவு 
போராடிக் கடரும் பிறவி வாழ்வு
மீராமல் மீண்டும் நேராமல்
தீரடித் திவ்யம் சேரவே வரமே
அருள்க ஆண்டவா சரணம்.

Monday, 24 November 2025

சாமி சாமி

பழனிச்சாமி பாட்டு.

சாமி சாமி ஆளுஞ் சாமி சாமான்யப் பழனிச்சாமி.
சகமனிதம் பழகுஞ் சகோதரர் பழனிச்சாமி.

ஏழைகளின் நம்பிக்கை இதயமுள்ள பழனிச்சாமி
உழவன் ஏழை எடப்பாடி முதல் வரான பழனிச்சாமி

விவசாயி பெற்ற மகன் விவசாயி பழனிச்சாமி.
விவசாயி செய்த தவம் அவதாரம் பழனிச்சாமி.
உழவுத் தொழில் வாழ வைக்க உவந்து வந்த பழனிச்சாமி 
உழவர்களின் வளம் செழிக்க உழைத்து வந்த பழனிச்சாமி.

அம்மா தந்த பழனிசாமி நம்மாளிந்த பழனிச்சாமி 
எம்ஜிஆர் கண்டெடுத்த அம்சமிவர் பழனிச்சாமி 
சிங்கம் போன்று சட்டசபை சீறும் நம்மாள் பழனிச்சாமி.
கொங்கு மண்ணின் தங்க மகன் சிங்கம் அவர் பழனிச்சாமி.

சிரிப்பழகு புரட்சித் தமிழ் தெறிக்கும் மொழி பழனிச்சாமி
நெறிப்பழகு புரட்சியாரின் வளர்ச்சி வழி பழனிச்சாமி 
ஆளுமையின் அகராதி அம்மா வழி பழனிச்சாமி. 
வாழும் வழி சொல்லிச் சொல்லி வழிப் படுத்தும் பழனிச்சாமி.

ஆளப் பிறந்த சாமியாம் வாழவைக்கும் சாமியாம்
நாளை இந்த சாமிதான் நம்மை ஆளும் முதல்வராம்
தும்சம் செய்ய துரோகியரை வம்சம் புரட்சித் தமிழராம்
அம்சம் தமிழ் ஆடசிக்கு அரியணைச் செல்வராம்.
இம்சை அரசியல் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி யாம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 23 November 2025

விடியல்

விடியல் எப்போ?

அடியே சின்னக்குட்டி செல்லம்மா!
விடிஞ்சிரிச்சா சொல்லம்மா
விடியலுனு சொன்னாங் களே
விடிஞ்சிரிச்சா பொன்னம்மா.?

அடைஞ்சு போன ஆதவனோ!
அடைஞ்சி எங்க தொலைஞ்சானோ!
காந்தி சொன்ன விடியலைப் போல்,
காரிகையரும் காண்பா ரோ!

நடு இரவே ஆனாலும்
நகை யோடு நங்கையர்
சுதந்திரமாய் உலாவி வர
நிரந்தரம் விடிஞ்சிரிச்சா.?

பால் குடிக்கும் பிஞ்சுகளை
பாலியல் வன் கொடுமை.
காமக் கொடூ ரர்களின்
களி யாட்டம் குறைஞ் சிரிச்சா?

கொலைக் களவு கொள்ளைகளும்,
நிலை குலைந்து முடியவில்லை.
விலை இல்லா சலுகைகளும்,
தலை குனிந்து முடங்கவில்லை.

அடங்க வில்லை விபத்துக்களும்,
அரங்கேறுது தினம் தினமும்.
அடக்கிட நாளை இல்லை.
விடியலுக்கு வேளை இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 20 November 2025

உணர்வில் கலந்த உறவு.

உணர்வில் கலந்த உறவு.

உணர்வில் கலந்த உறவே--எம்ஜிஆர்
கனவில் மலர்ந்த வரவே!
நினைவில் நித்திய நலனே--தமிழர்
பிணைப்பில் சத்தியக் குலனே.

திருவே பொருளே நீயே--தொணடர்
தியாகப் பிரியம் நீயே!
அண்ணல் எம்ஜிஆர் உயிரே--சின்னம்
இரட்டை இலையின் ஜெயமே!

அம்மா போற்றிய தீர்கமே--உண்மை
அன்பர் ஆற்றிய மார்கமே.
அண்ணா வழியின் இயக்கமே--சுயம்
எண்ணா நிலையின் தியாகமே.

இரத்தத்தின் இரத்தம் சகோதரமே--ஒரே
சித்தத்தின் சித்தம் சோதரமே!
சத்தியத் தாயின் பிள்ளைகளின்--ஒரு
இலட்சியப் பயண இலட்சணமே!

அண்ணா திமுக அறவழியே---புரட்சியார்
சொன்ன சொல்லின் நெறிமுறையே
இன்றும் என்றும் நாளையுமே--தீயரை
வென்றும் ஆண்டும் தமிழகமே--ஆணடு
 நின்றும் நூறுகள் வாழியவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

எதைப்பிடித்து வந்தாய்?

எதைப்பிடித்து வந்தாய்?

காலைப் பிடித்து வந்தாரா
கையப் பிடித்து வந்தாரா
எதைப் பிடித்து வந்தாலென்ன
ஏறி வந்தார் என்பதே உண்மை.

எதைப் பிடித்து நீ வந்தாய் 
எல்லோ ருக்கும் தெரியுமே--அந்த
அடையாளம் இல்லை யென்றால் 
ஆரறிவார் உன்னை இன்று.

தலைவனுககுத் தகுதி என்ன? 
தொண்டனாக விலாசம் என்ன--நீ
தியாகம் என்ன செய்தா யென்று
தலைவனாக சும்மா இன்று?

தந்தை தாத்தா பெயரைச் சொல்லி
வந்தா யென்றால் உண்மையே!
எந்த வேறு உழைப்பைக் கூறி
முந்தி வந்தாய் தலைவனாகி?

நோகாமல் நுங்கு தின்றாய்
வேகாத பருப்பு ஒன்றாய்.
உழைத் துயர்ந்த எடப்பாடியாரை
பிழை பேசத் தகுதி யென்ன?

Kppayya 

Monday, 10 November 2025

அம்மையப்பன்.

அம்மையப்பன்.

அம்மையப்பன் ஆளுமைநீ"!
நம்பிச் சொன்னால் தீரன்நீ!
நான்காண்டு காலம் நீ!
நல்லாட்சி நாயகன் நீ!

உருட்டுக்கு முடிவு நீ!
இருள் நீங்க ஒளி நீ!
சட்டமொழுங்கு சரித்திரன் நீ!
சுதந்திர சுவாசம் நீ!

கொடியநோய் கொரனாவில் நீ,!
கொடுத்துக் காத்தக் காவலன் நீ!
வரண்ட அந்தப் பஞ்சத்திலும் நீ!
இருண்ட நிலை நீக்கினாய் நீ!

ஏழைகளின் தாயன் நீ!
வேளாளன்மைத் தந்தை நீ!!
உழவர்களின் நம்பிக்கை நீ!
தலைவன்வழிக் கீர்த்தி நீ!

அம்மா நீ எம்ஜிஆர் நீ!
அதிமுக கட்சி நீ!
ஆளுமை நீ வாழ்வுரிமை நீ!
எடப்பாடி பழனிச்சாமி சாமி நீ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பட்டிக்காட்டுப் பழனிச்சாமி.

பட்டிக்காட்டுப் பழனிச்சாமி 

பட்டிக் காட்டுப் பழனிச்சாமி 
பழகும் நல்ல உழவர்சாமி. 
வேட்டி போல வெள்ளைச் சாமி.
கர்வம் இல்லா கடமைச் சாமி.

குழந்தை போல சிரிக்குஞ் சாமி 
பழக நல்ல ஏழைச் சாமி.
ஏர் பிடிச்சு உழவு செய்த
ஊரறிஞ்ச மனிதர் சாமி

காரில் ஏறிப் போனாலும் 
கண்டால் பேசும்  ஆசாமி.
அரசியல் வாதி போலல்லா
சராசரி பழனிச் சாமி

உறவு சொல்லி அழைக் குஞ் சாமி
சரளமாகப் பழகுஞ் சாமி.
விவசாயம் தெரிஞ்ச சாமி
அவசியம் பழனி ச்சாமி.

அதிகாரம் காட்டா சாமி
முதல்வரான மனிதர் சாமி
தவசியம்மா பெற்ற மகன்
விவசாயி பழனிச்சாமி

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 9 November 2025

கழக வாழ்த்து

கழக வாழ்த்து

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்
கொடை வள்ளல் எம்ஜிஆராம் --அவர்
கொடுத்துச் சென்ற கழகம் இதுதான் 
கொடுக்கும் அதிமு கழகம் வாழி"

கருப்பு மனிதன் சிவப்பு இரத்தம்
வெள்ளை மனசுத் தமிழன்--நமது
அண்ணாவின் புகழ்  சொல்ல வாழும்
அண்ணா திமு கழகம் வாழி

தமிழன் புகழ் தரணியெங்கும் ஓங்க
அமிழ்தம் அண்ணா வழியே--தமிழர்
ஆதாரக் கொள்கை யெனக் கொண்ட
அசலாமிது அதிமு கழகம்.வாழி

அண்ணா எம்ஜிஆர் பின் அம்மா 
இன்று எடப்பாடி யாரும்--என்றுந்
தொடரும் இன்னும் வளரும் மக்கள்
உடைமை அதிமு கழகம்.வாழி

தமிழ் வாழ தமிழருக்கே உரிமை
கமழுந் தூயக் கழகம்--ஆயிரம்
கோடிகள் ஆணடுகள் நீண்டும் நீண்டு
வாடாமல் வாழ்க! வாழ்க! 
அதிமு கழகம் வாழ்கவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Friday, 7 November 2025

நாடே கடனில்............!

நாடே கடனில்.............!

நாடே கடனில் நாடாள்பவன் அம்பானி.
பாடே வாழ்வான பாமரனோ பட்டினி.
ஓட்டை விற்றவன் ஓட்டைக் குடிசையில்
ஓட்டைப் வாங்கியவன் கோபுர மாளிகையில்.

நமக் கெதற்கு வம்பென நாலாம் தூண்
அமுக்கி வாசிப்பதும் அடங்கியதும் ஏன்?
பணநாயகம் வென்றும் சனநாயகம் தோற்றும்.
அநியாயம் ஆனதோ ஆகாத சுதந்திரம்.

பாவங்கள் மேயாட்டம் பகற்கொள்ளை பேயாட்டம். 
சாபங்கள் கோபங்கள் தியாகமெங்கே போராட்டம்.
உரிமைக்கு விலைபேசும் வறுமைக்குச் சாவிலையோ!
பெருமைக்குப் பேர்சொல்லும் மகான்கள் பிறப்பிலையோ!

அடிபட்டு மிதிபட்டு ஆயிரங்கள் பலியிட்டு,
விடியலைப் பெற்றுத் தந்தார் தியாகிகள்
விடியாமல் விடியுமுன்னே வேட்டையர்
நுழைந்திட்டார்.
அடைந்தது ஆகாசம் முடிந்தது இதிகாசம்.

சுற்றிச்சுற்றித் திரிகிறாள் சுதந்திரத் தாய் அழுகிறாள்.
நோகாமல் நுங்குதின்போர் சாகாமல் வாழுகிறார்.
மீண்டும் ஒருபாரதம் வேண்டும் வேண்டுமே
விஷ்ணு மறுஅவதாரம் கல்கியே வருகவே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


இரட்டை இலைக்கே என் ஓட்டு.

இரட்டை இலைக்கே எம் ஓட்டு

எம்ஓட்டு என்றும் இரட்டை இலைக்கே
இந்நாட்டின் நலனார் எடப்பாடி அவர்கே.
எம்ஜிஆர் காட்டிய இரட்டை விரல்களே
என்றும் எமது வெற்றிக் குரல்கள்.

தமிழ் நாடாளும் இரட்டை இலைகள்.
தரணியே மிரலும் புரட்சி அலைகள்.
அன்பின் இணைப்பு ஆத்ம அணைப்பு.
ஆளுகைப் பண்பு ஆளுமை வனப்பு.

மக்கள் தலைமை மக்கள் ஆட்சி.
மக்கள் படைத்த மாண்பின் மாட்சி
மக்கள் அலையில் தோன்றிய காட்சி..
மக்கள் நலனே மக்களே சாட்சி.

மக்கள் இயக்கும் மக்களின் இயக்கம்.
மக்கள் சக்தி மக்களின் யுத்தம். 
மக்கள் உழைப்பு மக்களின் சொத்து.
மக்கள் காப்பு மக்களின் அதிமுக.

எதையோ நினைத்து எதற்கோ வந்தார்.
அதையே மறைத்து அதனால் சென்றார்.
மக்கள் உடைமை மக்களின் உரிமை.
மக்கள் நாயகன் எடப்பாடி நின்றார்.

பொதுநலன் என்பது கொள்கை எல்லை
சுயநலம் கொள்வார்கு இடமே இல்லை.
அதிமுக என்பது அறப்போர் படை
அற்பருக்கு இங்கே எப்போதும் தடை.

தோல்வி என்றொரு சொல்லே இல்லை 
வேள்வி அதுவே வெற்றியின் சொல்லே.
புரட்சித் தலைவர் போதனை ஞானம்.
புரட்சிப் படையிது சாதனை காணும்.

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

சிவந்த கரங்கள்

கொடுக்கும் கழகம்

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்
கொடை வள்ளல் எம்ஜிஆராம் --அவர்
கொடுத்துச் சென்ற கழகம் இதுதான் 
கொடுக்கும் அதிமு கழகம்.

கருப்பு மனிதன் சிவப்பு இரத்தம்
வெள்ளை மனசுத் தமிழன்--நமது
அண்ணாவின் புகழ்  சொல்ல வாழும்
அண்ணா திமு கழகம்.

தமிழன் புகழ் தரணியெங்கும் ஓங்க
அமிழ்தம் அண்ணா வழியே--தமிழர்
ஆதாரக் கொள்கை யெனக் கொண்ட
அசலாமிது அதிமு கழகம்.

அண்ணா எம்ஜிஆர் பின்னே அம்மா இன்று எடப்பாடி யாரும்--என்றுந்
தொடரும் இன்னும் வளரும் மக்கள்
உடைமை அதிமு கழகம்.

தமிழ் வாழ தமிழருக்கே உரிமை
கமழுந் தூயக் கழகம்--ஆயிரம்
கோடிகள் ஆணடுகள் நீண்டும் நீண்டு
வாடாமல் வாழ்க! வாழ்க! 
அதிமு கழகம் வாழ்க! வாழ்கவே!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.

Saturday, 1 November 2025

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி.

இப்போதான் நிம்மதி --இனி
எப்போதுமே நிம்மதி.
அலப்பறைங்க போனாங்க --அட
ஆண்டவனே நிம்மதி.

உடனிருந்தே தொல்லையாய்--கெட்டக்
கடங்காரங்க அலப்பறைபோல்.
விட்டதடா சனியன்கள்--விட்டுத்
தொலைஞ் சாங்கடா இம்சைகள்.

ஏழரைகள் இடைஞ்சல்கள்--ஐயோ
போலரைகள் புலம்பல்கள்.
கஷ்டகாலம் ஓஞ்சது--துஷ்ட
சகவாசம் தீஞ்சது.

தள்ளி விடத் தயங்கித்தான்--கொஞ்சம்
தள்ளி நின்னே யோசனை. 
கிள்ளி விட்டு அவங்களே--கொள்ளி
வச்சுக் கொண்டாங்க.

ஆரவாரம் தீர்ந்தது--அடங்கா
அலைகடலும் ஓய்ந்தது.
அமைதி யெங்கும் நிலவியே--அசல்
அதிமுக நிலைத்தது.

கவிஞர். KPPAYYA