Sunday, 26 January 2025
யார் ராஜபச்சே?
தாரகமந்திரம்
வெற்றிக் கனிகள்.
Saturday, 25 January 2025
அம்மா இரங்கற்பா.
அம்மாவிற்கு இரங்கற்பா
அம்மா அம்மா வா! வா!
அகிலம் இன்று அழுகிறதே!
தாயே தாயே எழுந்து வா!
தமிழே கதறி அழுகிறதே!.
அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!
ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!
புரட்சித் தலைவர் ஆன்மா நீ!
புரட்சித் தலைவி புகழே நீ!
உழைத்துக் களைத்து அவர்நிழலே!
அழைத்து அமரம் ஆனாயோ!
நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவியும் நீயென்றோம்.நிறைந்தும் தமிழகம் நீயாக பரந்தும் துணைசெய் தாயாக.
மறைந்தாய் என்பது பொய்யாக,
எழுந்தாய் என்பதே மெய்யாக
எழுந்து வா எம்தாயே!
கொ.பெ.பி.அய்யா.
தாயே தமிழே வாழ்க!
அம்மா என்னும் சொல் உதிர்த்தால்
அன்பு என்னும் நெல் சிதறும்.
அம்மா எண்ணி உள் நினைத்தால்
எம்மா வஞ்சமும் தான்
தாயே என்னும் தமிழ் பகிர்ந்தும்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே உள்ளம் உனை நினைந்தும்
தைரியம் உள்ளே வினை முனைக்கும்.
அன்னை சொல்லோ வாய் மலரும்.
முன்னை வெல்ல தான் புலரும்.
விண்ணைத் தொடவும் எண்ணித் துணியும்
மண்ணில் பகையும் முன்னே பணியும்.
மாதா உந்தன் மகிமை முன்னால்.
சாதா எல்லாம் சகலமும் தன்னால்.
வேதா இல்லம் ஆலயம் நின்றும்
சோதனை வெல்லும் போதனை சொல்லும்.
பெற்றாள் மடியினில் பிள்ளை முகம்போல்
பெற்றார் மகிழ்வதும் உன்னடி நிழல்கீழ்.
நற்றமிழ் சிறப்பதும் கற்றது போலே
மற்றென்ன அறிவதும் உற்றதும் மேலே!
தாயே வாழும் தமிழே வாழ்க!
நீயே ஆளும் நிலையே வாழ்க!
நேரே நிசமே சீரே வாழ்க!
பாரே வசமே தீரே வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.
வெற்றிச்சங்கம்.
வீடு எங்கும் இரட்டை இலைகள்
ஈடு உண்டோ எமக்கிங் கலைகள்
ஓடும் கூட்டம் தேடுது வளைகள்
தோற்பது மற்றவர்க்கு
நாமம் போடுது புண்ணாக்குகள்
கொட்டும் முரசுகள் கொட்டிக்கிழியுது.
பற்றிச்சூரியன் எட்டி ஓடுது.
இரட்டை இலை மட்டும் எங்கும் தோணுது
விழாக்கோலம் அம்மாவுக்கு.
கெட்டித் தனித்த துணிச்சலுக்கு
முத்திய பரிசிது தமிழளிப்பு
பாரதமே சொர்கம்.
அம்மா அய்யா வரங்களில்
அனைத்திந்திய அதிகாரம்
செம்மா நிலைப் பலமுடன்
செயல் முறைத் தன்திறம்
எல்லாம் கொண்டு தான்
ஏற்றிடும் போதுதான்
வல்லரசாகிடும்
வளம் கண்டு உயர்ந்திடும்.
Friday, 24 January 2025
அம்மா வாக்கு.
அம்மாவின் வாக்கு.
நூறாண்டுக் காலம் கழகம் ஆளும்
அம்மாவின் வாக்கு வேரூன்றி வாழும்.
புரட்சியில் உதித்த பொன்மனக் கழகம்,
நிரந்தரம் அண்ணா தி.மு கழகம்.(நூறா)
சத்தியத் தாயின் உத்தமப் புதல்வன்,
சத்தியப் பாதையின் புரட்சித் தலைவன்;
இரத்தத்தின் இரத்தம் தமிழர் இயக்கம்-அம்மா
புரட்சித் தலைவி புதுயுகம் விளக்கம்.(நூறா)
தொண்டன் இங்கு தலைவ னாகிறான்.
எந்தன் என்பான் இடறி வீழ்கிறான்.
வாரிசு முறையாம் சர்வாதி காரம்--என்றும்
நேராத கழகமாம் சனநாயகம்.(நூறா)
எவரும் உழைத்தால் முதல்வர் ஆகலாம்.
எடப்பாடி உரைத்த சத்திய வாக்காம்.
வாணிவக் கழகம் போலிது அல்ல-தமிழ்
மானுடக் கழகம் நூறாண்டு வெல்லும்.(நூறா)
கொ.பெ.பி.அய்யா.
இராமஜெயராஜ்யம்.
மாதவரம் மூர்த்தி.
மா---தவ--வரம்
மா--தவ--வரம் மாதவரம்,
மூர்த்தி பேராங் கீர்த்தியாம்;
நேர்த்தியே அம்மாச் செல்லம்--வள்ளுவ
மாவட்டச் செயலர் வாழ்க!
முன்னாள் மாண்பு மூர்த்தியார்,
சென்னாப் புகழ் பூர்த்தியார்;
எடப்பாடியார் பற்றாளர்
வாழ்த்துவோம்.
திருவள்ளூர் மாவட்டம்,
திருசொல்லு பேர்வட்டம்;
அண்ணா திமுக கோட்டம்--அம்மா ஒன்றே எங்கள் உயிரோட்டம்.
நன்றி கொள்வோம் கடனாட்டம்.
கொ.பெ.பி .அய்யா.
தாய்ப் பால் கள்ளிருக்க.....!
Thursday, 23 January 2025
இரட்டை இலை
Friday, 17 January 2025
நாளைய வெற்றி.
நாளை நமதே!
நாளைய வெற்றி நம்விரல் மைய்யில்
ஏழையர் நாம்தமிழ் கைய்யில்,
விவசாய முதல்வர் அவசியம் அதற்கு,
தவசியம்மா புதல்வற்கே ஓட்டு.
ஆளுக்கு ஆளு பணவங்கிக் கணக்கு,
நாளுக்கு நாளு உயர்விங்கு இருக்கு.
எடப்பாடியாரே முதல்வராம் நமக்கு,
கடமை இருக்கு போடுவோம் ஓட்டு.
குறையென்ன சொல்ல எடப்பாடி ஆட்சி,
திரைப் பின்னே மெல்வார் புறமாகப் பேசி.
வேறோடு மீட்போம் சுபவாழ்வு ஆட்சி,
சீரோடு காப்போம் நாம் போட்டு ஓட்டு.
கொ.பெ.பி.அய்யா.
வள்ளல் எடப்பாடியார்.
வள்ளல் எடப்பாடியார்.
அள்ளிக் கொடுக்கும் வள்ளலார்,
உள்ளம் தங்கம் எம்ஜியார்.
உள்ள படியே விவசாயிதார்.
சொல்லும் புகழ் எடப்பாடியார்
ஏழைகளின் சுமை தாங்கி
வாழவைத்தார் கடன் நீங்கி.
தோழராய் வாழுங் குசேலர்
சோழராய் ஆளும் எடப்பாடியார்.
மகளிற்கு சோதரராய்
உகந்தசீர் ஆதரராய்
தேவையென்ன கேட்டறிவார்
சேவகராய் எடப்பாடியார்.
மழைக்கு அவர் சொந்தக்காரர்
செழிக்கும் வளம் சிந்தைக்காரர்.
செயயும் விவசாயம் செழிக்கச் செய்யும்.
பெய் யென்றாலே பெய்யும் மழை.
கொ.பெ.பி.அய்யா.









