Monday, 8 September 2025

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.

புரட்சித் தமிழன் எழுச்சிப் பயணம்.
மருட்சி அரரசியல் விழிக்குந் தருணம்.
திரளும் மக்கள் அலைகடல் கூட்டம்.
மிரளும் எதிரிகள் நிலைகுலை ஓட்டம்.

பொய்யும் புரட்டும் பொய்த்தது காட்டும்.
பொய்மை அரசியல் ஓழித்தது சாற்றும்.
ஏய்த்த கூட்டம் எதிர்கொள்ளப்பதறும்.
சீறும் சீற்றத்தின் எழுச்சி முன் சிதறும்.

கூட்டமாய் கூடிக் காட்டும் உன்வீரம்.
வாட்டமாய் வாடி ஆகும்பின் சோரம்.
நேருக்கு நேர்நிற்க அச்சமேன் உமக்கு?
போருக்கு நேர்நிற்கும் படைஉண்டு எமக்கு.

வாயாலே வடை சுடும் மாயாஜால வேடம்.
பாயாது பலிக்காது கற்றோமடா பாடம்.
பேயாளும் காடாச்சோ ஓயாத கேடாச்சோ!
வாயாலே சொல்லியழ வார்த்தயினித் தேடலாச்சோ!

கவிஞர். கொ. பெ. பி. அய்யா.





No comments:

Post a Comment