Tuesday, 23 September 2025

கடல் போல் கூட்டங்கள்.

கடல் போல் கூட்டங்கள்.

கடல் போல் கூட்டங்கள் காணும் இடமெலாம்.
எடப்பாடி பயணங்கள் எதிரிகள் பயமெலாம்.
அவர் நாளை முதல்வ ரென்ற
அச்சாரம் காட்சி சொலும்.

வரலாறு மாறாது மறுமுறை தேறாது
திருப்பங்கள் மறுபக்கம் விருப்பங்கள்
நீராது.
விபத்தாக நேர்ந்ததை அபத்தமான ஆட்சியிதை,
சபதமிட்டு ஓட்டவே சாட்சி இந்தக் கூட்டமே.

அம்மாவின் பிள்ளைகள் சும்மாயில்லை காட்சிகள்.
நம்மாளு பழனிச்சாமி நம்பிவந்த தம்பி கள்.
தமிழகத்தின் விடிவெள்ளி தன்னுயிர் சொந்தங்கள்
தமிழரான விவசாயி தானாள வேண்டியவர்.

அரசாளத் தகுதியும் அரியணை அம்சமும்,
பொருந்திய ஒருவராம் வரம்பெற்ற முதல்வராம்,
அம்மாவின் ஆசிபெற்ற சிம்மாசனம் அமர்வராம்,
செம்மாந்த தமிழாட்சி சீர்மையச் செய்வராம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




No comments:

Post a Comment