Monday, 29 September 2025

கழகமுனா கழகந்தான்.

கழகமுன்னா கழகந்தான்.

கழகமுன்னா கழகந்தான்.
அண்ணா தி. மு கழகந்தான்.
அண்ணலவர் எம்ஜியார் 
அம்மா புரட்சித் தலைவியார்.
அவர்வழி புரட்சித் தமிழர்
அய்யன் எடப்பாடியார்.
தலைமைவழிப் பண்புகள்
தடம்தொடர்ந்து தொடர்கிறார்.

மாற்றுக் கட்சியானாலும்
மாற்றமிலாப் பண்புடன்
நேற்றின்று எண்ணாமல்
நெற்றிக்கண் திறக்கிறார்.
உற்றநன் குணமாளர்
பற்றிநெறி தொடர்கிறார்.
வற்றாத மரபினார்.
முற்றிலும் சத்தியனார்.

அரசியல் லாபம் பார்த்து 
விரசமான வாதம் கோர்த்து
உண்மைக்கு மாறாக
தன்மையை தானொளித்து
மாற்றிப் பேசத் தெரியாதார்.
ஆற்றுவழி மரபினார்.
அண்ணாதிமு கழகத்தார்
எந்நாளும் வழிதொடர்வார்.

கரூர் சம்பவத்தை
பொருள் மாறா நம்பகத்தை
தருமத்தின் நிலை நின்று
நிருபித்தார் சொல் இன்று.
அரசதன் பொறுப்பதனை
புருஷ இலட்சனம் கொண்டவர்
சரியாக உறுதி ஒன்றார்
தெரிவித்தார் நெறி கண்டார்.

வாரிசு வழி வந்தபாவியர்
வழிவிட மறுக்கிறார்.
நேர்வழி தெளியாமல்
ஊராள நினைக்கிறார்.
அதற்கான கோரமுகம்
அவர்கொண்டு அலைகிறார்.
வரலாறு நம்பாமல்
குறுக்கு வழி முயல்கிறார்.
அய்யோவென ஒருநாள்
மெய்யாவே போயொழிவார்.

கவிஞர். கொ. பெ. பி அய்யா.


No comments:

Post a Comment