Monday, 24 February 2025

மங்கையர் மகிமை.

மங்கையர் மகிமை.

மங்கையராய் பிறந்தவர் மாதவம் செய்தவர்.
கங்கை போலவர் களங்கம் அல்லாதவர்.
மூன்றாம் பருவம் ஈன்றார் கருவம்.
பூவின் வாசம் பூத்தே வீசும்.
காதல் மலரும் கட்டும் அலரும்
காவல் தாண்டவும் ஆவல் தூண்டும்.

கொ. பெ. பிச்சையா.

சேலை கட்டிய எம. ஜி. யார்.

சபதம் ஏற்போம்.

சேலை கட்டிய எம். ஜி. யா. ர்
மாலை அம்மாள் பிறந்த
நாளை இன்று கொண்டாடும்
தமிழ் நாடே நீடு வாழ்க நீ!

தமிழ் நாடு சட்ட மன்றம்---சஅந்தத்
தருணம் இன்றும் அதிர்வுறும்.
பெண்ணென்றும் பாராமல்
பிசாசுகள் திரியோதனர்கள்
கேவல அவலம் செய்தக் கரியநாள் சபதநாள் நினைக!

ஒற்றைப் பெண்ணாகக் 
கர்ஜித்தக் கண்ணகியாகிக்
குற்றமென்ன செய்தேனென
பற்றிய கொள்கைப் போற்றி
முதல்வராய் அல்லாமல்
முயலேன் சபை மீண்டும்.
என்றும் முடித்துச் சபைச்
சபதம் ஏற்றி வெளியேறினார்.

அந்த வீரித் தமிழச்சி
அம்மாவின் பிறந்த நாளில்
இந்த நாள் சபதம் வாழ்வில்
அந்த நாள் நினைவில் ஏற்றி
முதல்வராகி மீண்டும் அரியணை பற்றுவார்.
அம்மா வழி பழச்சாமி.
சபதம் நாளிதில் சபதம் ஏற்போம்.
சபை மீண்டும் ஆளுவோம்.

கொ. பெ. பி. அய்யா.

Thursday, 20 February 2025

அம்மாவுக்குப் பிறந்தநாள்.


அம்மாவுக்குப் பிறந்த நாள்--எங்கள் 
ஆன்மாவுக்கு விடிந்த நாள்.
தமிழத்தாய் அடையாளம் 
தமிழகத்தின் விடிகாலம்.
எழுபத்து ஏழாவதாய்--மானுடம் 
விழுமியத்தின் விளக்க நாள்.

புரட்சியின் திருக்காட்சி 
பூமியில் தோன்றலாட்சி.
ஆயிரத்துத் தொள்ளாயிரம் 
ஆண்டது நாற்பத் தெட்டில் 
பெப்ரவரி இருபத்து நான்கில் 
பெண்ணுரிமை உதயமாட்சி.
வீரமங்கை வீரனாச்சியாள் 
மாறி மண்ணில் அவதரித்தாள். 

ஸ்ரீ ரங்க நாயகியாம் தமிழரின் தேவகியாம் ,
எம்ஜிஆர் கண்டறிந்த எங்கள் குலத் தேவியாம்.
ஏழைகளின் விடிவெள்ளி எதிரிகளின் காளியாம்.
எதிர்காலம் எங்களின் வெளிச்சமே அம்மாவாம்.

இதுதான் அம்மா அவதாரப் பொன்னாள்.
இதுதான் அன்னாள் எழுச்சியின் நந்நாள்.
எதிரிகள் எதுவரையும் 
எமக்கிங்கு தோன்றவில்லை.
புதிதாகித் தோன்றினோம் 
புத்தாட்சி ஊன்றினோம் 

அம்மா தோன்றியத் திருநாள் 
அறம் ஊன்றியச் சுபநாள்.
சும்மா இல்லைப் பிறந்தநாள் 
சோதனைகள் மறந்த நாள்.
அம்மா நமக்குள் வாழ்கிறார்.
அவராம் பழனிச்சாமி ஆள்கிறார். 
அம்மா அமரர் ஆண்டவர் நிழலில்,
அமைதி ஓய்விலும் நமக்காகப் பிரார்த்திப்பார்.

அணைந் தொன்றாய் வாழ்கிறோம்.
இணைந்தொன்றாய் ஆள்கிறோம்.
அம்மா மேல் சத்தியம் 
அம்மா ஆட்சி நிச்சயம்.
அம்மா மாடல் ஆட்சியாம்.
எடப்பாடியார் சாட்சியாம்.

கொ. பெ. பி. அய்யா.

Monday, 17 February 2025

தாலாட்டு

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிடுச்சி
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாகப் பிறந்தோமென,
பிஞ்சுக்கொடி கலங்காதே!
கல்யாணச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் வாடாதே!
கல்விக் கற்றும் உயர்ந்து
விட்டால்
செல்வி உனையே சீரீவரிசை எனக் கொள்வார்!

பெண்ணான யோகம் உனது
கண்ணாலக் கணக்காக 
வங்கியில் உன்பேரில்
வளரும் சேமத் தொகை
அம்மாவின் கருணையாம்
ஆட்சியின் மகிமை அதுவாம்
சும்மா நீ சுபமாக

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்று
விட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடிகிறது கண்ணுறங்கு!

அம்மாவின் மாடல் இது.
எம்ஜியாரின் ஆட்சியிது.
உன்போலேபா பெண்ணாளும்
உண்மைப் பொற்காலமிது.
மண்ணாளப் பிறந்தவளே 
மாதரசி கண்ணுறங்கு.

பெண்ணாகப் பிறந்த உன்னை 
தானாக எண்ணிப் பெண்ணே!
என்ன நீ ஆக வேண்டும் 
உன்னையவள் ஆக்கிடுவாள்
எந்நாளும் இரட்டை இலை 
கண்ணே உன் காவலம்மா.

கொ.பெ.பி.அய்யா. 



Friday, 14 February 2025

எத்தனை நாள் ஆட்டம்!

இன்னும் எத்தனை நாள்?
(உள்ளத்தில் நல்ல உள்ளம்)

எண்ணத்தில் நல்ல எண்ணம்
என்றுமே தோற்காது.
முன்னவர் சொன்னதடா--பாவம்
பண்ணினர் மக்களடா!--நாசம்
ஆனதும் மக்களடா!

பஞ்சமாப் பாவம் இலஞ்ம்
பெற்றதன் அடிமையாக
கூடாத இடம் கூடி வஞ்த்தில்  வீழ்ந்தார டா!---பாவ
நெஞ்சத்தால் தாழ்ந்தாரடா--கூட்டு
அணி தொடரும் மோசமடா!

தமிழுக்குத் துரோகமாய் திராவிட வேடமாய்
பாவம் பழி ஏற்றாயடா---பாவி
உண்ட  சோறு ரெண்டகமா---உன்
அண்டப் பொய் போதுமடா!

வீட்டுக்கு வாழாமல் நாட்டுக்குச்
சேவகனாய்
ஆண்ட அண்ணா தர்மரடா---அவர்
வாழுங்கொடி ஆளுமடா-நீ
போடும் வேடம் கலையுமடா!

இன்னும் எத்தனை நாளடா!
இவராடும் வெட்கக் கேடடா!
நெருங்கி வரும் காலமடா--பொய்
நொருங்கி விழும் கோலமடா!

ஆடி ஆடும் அலங் கோலம்
ஓடிச் சேர யோகம் இல்லை.
கடை யாணிக் கழன்றதடா---ஐயோ
உடைஞ்சுப் போச்சுத் தேரடா---கதை
முடிஞ்சி போச்சு ஓடடா;

கொ.பெ.பி. அய்யா.













 


Monday, 10 February 2025

தைப்பூசம் விடுமுறை.



கந்த சஷ்டிக் கடவுளே காக்கக்
காக்க!
புரட்சித் தமிழருக்கு நன்றி!

தமிழ்க் கடவுளாம் வேல் முருகன்,
தீயசூர பத்மனை வென்று கொன்ற,
தைப்பூச நினைவு நாள் இதனை,
தமிழர் வெற்றி வீர நாளாகக் கொண்டாட,
விடுமுறை நாளாகப் புரட்சித் தமிழர்,
ஆணையிட்ட அருமைக்கு நன்றி!நன்றி! 
தமிழன் ஆண்டால்தான் தமிழுக்குப் பெருமை.
தமிழே ஆளும் தன்னுரிமைக் காலம்,
கமழும் மணந்தான் கமழ்வது நுகர்வீர்!
காலம் நெருங்கும் கோலம் தான் கண்முன்னே!
கந்தனவன் வெற்றி வேலன்
வென்ற வடிவின்,,
மாட்சி இன்று பழனிச்சாமி காட்சி அதே!
காணக் கண்ணாயிரம் வேண்டும்!வேண்டும்!
காணக் கூடாதார் கண்ணும் 
படக் கூடாது.
கந்த சஷ்டிக் கடவுளே நீதான்
காத்தருள வேண்டுமே.

கொ.பெ.பி.அய்யா.










சீர் வரிசை.

சீர் வரிசை.

சீர் கொண்டு போகும் 
சீர் வரிசை யாருக்கு!
ஏர் உழவன் மகன் எடப்பாடியார் அவருக்கு.
அவினாசி மக்கள் கூட்டம்
ஆர்ப்பரிப்பு அவணி போற்றும்,
ஏர்ப் பொறுப்பு பழனிச்சாமி
என்றும் ஆள உழவு வாழ்த்தும்.

அவினாசி திட்டம் தந்த அய்யா எடப்பாடி யார்!
புவியாசி போற்றும் புகழ் புரட்சித் தமிழர் பழனிச்சாமி!
இளைய புரட்சித் தலைவராம் எங்கள் முதல்வர் தங்கம்!
திங்கள் முகம் சிங்கம் அவர் அம்மா மாடல் அவராட்சி வாழ்க!

அவினாசி விவசாயிகள் புவி நேசர் விவசாயிக்கு,
புவி வாசம் மேவும் வாசி புரட்சித்தமிழ் எடப்பாடியார்கு,
சீர் தந்த அருமை ஏர் கொண்ட பெருமை.
பொய்மை ஆளும் அரசுள் போயொழியச் சீர்மை.

நீர்நிலைகள் நிறம்பி  எல்லாம்
சீர் கண்ட வேளாண்மை,
கூர் கொண்ட ஏர் உழவன் ஓயாத ஆளாண்மை,
பாருக் கெல்லாம் சோறிடும் நேர் கொண்ட விவசாயம்,
வேர் ஊன்றச் செய்தாற்கு
சீர் தந்த புகழ் வாழ்க!

கொ.பெ.பிச்சையா.

Saturday, 8 February 2025

கனவு கண்டேன்.

கனவு கண்டேன்.

கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்-தமிழர்
கனவு நிறைவேறிடக்
கனவு கண்டேன்.

தொழில் மையம் மாக
தமிழகம் ஓங்கிடக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

இளைய புரட்சித் தலைவர்
ஆட்சி,
உலகின் முதன்மை மாடல்
மாட்சி,
அஞ்சிக் கெஞ்சி ஒஞ்சாத்
தேர்ச்சி
கனவு கண்டேன் நான் 
கனவு கண்டேன்.

தமிழன் தன்தலை நிமிர்ந்திடக்
கர்வம்,
தலையாய் தமிழன் அமருந்
தேர்வும்,
உலக மோர் ஒன்றியமாகக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.
               
ஏழ்மை என்னும் தாழ்மை
இல்லா,
யாவரும் சமமெனும் மேன்மை
எல்லாம்,
தமிழன் தலைமை ஆளுமை
வெல்லக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டன்.

நதிகள் அனைத்தும் இணைந்து ஓடி,
விதிகள் எல்லாம் பொருந்தத் தேடி,
பசுமை போர்த்திய பாரதம்
காணக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.
                  
ஆணும் பெண்ணும் பேதமில்லா
பேணும் உரிமை வாதமில்லா
தோணும் எண்ணம் சகோதரமாகக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

இளையப் புரட்சித் தலைவர் எடப்பாடியார் 
தலைமை ஏற்கும் எம்ஜியாரரசு
அரியணை ஏறும் காலம் மிளிர
கனவு கண்டேன் நான் 
கனவு கண்டேன்.         

 சட்டம் ஒழுங்கு சாத்தியமாக
எந்த இரவும் பெண்கள்
 உலாவ
காந்தி இராஜ்யம் கண்டிடக்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

மனிதம் என்ற சொல்லுக்குப்
புனிதம்,
தமிழன் கொண்ட வாழ்வின் இனிதம்,
எடப் பாடி பழனிச்சாமி அவரின்
எம்ஜியார் அம்மா ஆட்சி மாடல்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்.

கொ.பெ.பி.அய்யா.