Thursday, 7 August 2025

வெற்றியின் தருணம்.

வெற்றியின் தருணம்


இலைகள் வெல்லும் தருணம்-இரட்டை 
இலைகள் வெல்லும் தருணம்-மக்கள்
அலைகள் துள்ளும் எழுச்சி-வென்ற
நிலைகள் சொல்லும் அதிர்ச்சி-கூடும்
தலைகள் வாக்கு வளர்ச்சி.

அம்மாவின் ஆட்சி அந்தக் காட்சி 
பழனிச்சாமி பயணம் சொல்லும் சாட்சி.
உழவர் ஊக்கம் கொள்ளும் மாட்சி
களம் ஆடும் தாக்கம் அள்ளும் தேர்ச்சி.

எதிரிகளின் கூட்டம் கதறுதே.
உதிரும் அணி ஓட்டம் பதறுதே.
பழம் நழுவிப் பாலில் வீழுதே.
களம் ஆடும் ஆட்டம் மாறுதே.

வள்ளல் அவர் எம்ஜியாராம்
வல்லார் அவர் அம்மாவாம்
பொல்லாரைப் புறந் தள்ளவே
நல்லதோர் இயக்கம் கண்டார்.

பூமியிது உள்ளவரை சாமியுண்டு.
சாமியது உள்ளவரை இயக்கம் உண்டு.
அழிவில்லா அண்ணாவின் திமுகதான்.
முடிவில்லை சொன்னவர் அம்மாதான்.

கொ. பெ. பி. அய்யா.

No comments:

Post a Comment