தமிழ்மொழி வாழ்த்து
முதலொலியாம் முத்தாம்;
வளர்மொழியாம்;
வாய்த்தயிரு,கண்ணாம்,
கருவிழியாம்,காலமாம்! -கன்னல்
இனிமை, வளமை, இளமை,
பழமை
தனிச் சிறப்புத் தமிழ் வாழி!
பிறக்கும் பொழுதே பிறக்கும் ஒலியில்
பிறக்கும் உறவு அம்மா அம்மா! சிறப்பிதுபோல் உண்டோ பிறமொழி ஏதோ சொல்லு!
கொண்டதும் செம்மொழி தமிழ் வாழி!
அறம் பொரு ளின்பம் அதன்பின் பெறும்பேறும்
அன்னப் பெருமை அனைத்தும்—திறமாய்
அமைந்தும் வளமாய் நிலமதில் வாழும்
அருமைத் தமிழே வாழி!
பன்மொழி ஏற்றுப் பதித்த இலக்கியங்கள்
வண்ணப் பொலி வேற்றி வளர்ந்துமே—தன்னிலைத்
திண்ணமும் தேறியும் முன்னிலைப் போற்றியும்
தண்தமிழ் வாழிவாழி!
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment