Monday, 12 May 2014

அனுபவமும் அறிவும் அம்மா.

அனுபவம் அறிவு அம்மா.

அனுபவம் கூடும் அறிவின் முதிற்சி
அகவை என்றும் அளந்திடுவார்.
அறிவு தேடும் அனுபவம் பயிற்சி
அம்மா என்றும் அறிந்திடுவார்.

நைந்திடும் சமூகம் உய்ந்திடத்தானே
பைந்தமிழ் தாயே பயின்று வந்தாய்.
தொய்ந்திடும் மனிதம் எழுந்திடத்தானே
தைரிய லட்சுமி துணை தந்தாய்.

கர்ம வீரன் காமராஜன்
தர்மத் தீரன் காஞ்சியண்ணன்
இருவரும் அமைந்த புரட்சித்தலைவன்
நிறைந்தாய் எல்லாம் புரட்சித்தலைவி.

உயிர்கள் எல்லாம் தன்னுயிராக
உள்ளங் களித்தாய் உன்னுறவாக.
பயிர்கள் காக்கும் உழவனாக
பாரதம் காக்கிறாய் தலைவியாக.


பிறரின் நலமே பேரின்பம் என்பாய்
பேணும் மனிதம் தானின்பம் என்பாய்.
துறவி ஆனாலும் பிறவியில் அன்பு
பரவி வாழும் பாசமே வாழ்க!

வளமே நலமே அம்மா வாழ்க!
கழகம் தாயே காப்பே வாழ்க!
அறமே அறிவே அனுபவப் புரட்சியே
அம்மா ஜெயமே தமிழே வாழ்க!




கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment