வாழ்ககை என்பதே போராட்டம்
வாழத் தினமும் போராடுவோம்
நாளும் போராட்டக் களமாகும்.
வாழ்ந்திட அதுவே
சகசமாகும்.
வயிற்றின் அளவோ
ஒருச்சாணே!
உடலின் உழைப்போ
பெருஞ் சனமே!
உயிர்க்கும் புனிதப்
போராட்டம்
பிழைக்கும் உலகை
காப்பதற்கே.
தொழில் தொழுதால்
அருள்செய்யும்,
தொழில்செய்தால்
பொருள்செய்யும்.
தொழில் செய்க
துணை செய்யும்
தொழி லாளாளும்
தொழிலாளர் வாழ்கவே!
அன்புத் தலைவன் எம்ஜியார் ,
அன்றே நன்றே பாடி வைத்தார்.
அவரும் தானே தொழிலாளி
அனைவரும் இங்கே முதலாளி.
அன்புத் தலைவன் எம்ஜியார் ,
அன்றே நன்றே பாடி வைத்தார்.
அவரும் தானே தொழிலாளி
அனைவரும் இங்கே முதலாளி.
கொ.பெ.பி.அய்யா

No comments:
Post a Comment