சவாலுக்கு சவால்.
நல்லார்க்கு நல்லாராம்
வில்லற்கு வல்லாராம்
கள்ளர்க்குப் பொல்லாராம்
கல்லாற்கும் சொல்லோராம்
உள்ளாரும் ஒருவராம்
எல்லாம் அவர் அம்மாவாம்.
சேவலுக்கு சேவலாம்
கூவிடும்
துணிச்சலாம்
தூவலுக்குச் சீறலாம்
மேவிடும்
அணிகளாம்
சவாலுக்கு
சவாலாம்
காவல் அவர்
அம்மாவாம்.
தீவினை அழிக்கவே!
தீர்வினை ஏற்றவே!
நாவினை அடக்கவே!
நஞ்சுரை மடக்கவே!
நேர்வினை அம்மாவே!
நேர்ந்திட்டார்
புரட்சியார்.
பொய் மொழி
வழக்குகள்
புறமுதுகு
காட்டாமல்
மெய்வழி வழக்கிலே
மெய்ப்பித்து
நிறுத்தியே
வையத்துள் புகழ் ஓங்க
ஆண்டம்மா நிலை
செய்தார்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment