காந்த சக்தி.
இனிக்கும் தமிழ் அறிஞரின்
இதயக் கனி எம்ஜியார்.
கழகத்தின் காந்த சக்தி
கலைச் செல்வன் புரட்சியார்.
முகம் காட்டக் குவியும் கோடி
தகும் ஒட்டு எம்ஜியார் தேடி
அரசியல் அழகு கண்டார்.
அண்ணா கண்ட தம்பியவர்.
வற்றாத ஜீவ ஆறு,
பொற்றாமரை எம்ஜியாறு,
பொன் மனச் செம்மலவர்:
மென் குணத்து வள்ளலவர்.
மென் குணத்து வள்ளலவர்.
சிலை அழகுக் கலை
என்பார்.
கலை அழகு
எம்ஜியார்.
அண்ணாவின் நம்பிக்கை :
எண்ணம் போல் காமராஜர்.
தலைவர் அண்ணா
புகழ் விளங்க,
கழகம் கண்டார் எம்ஜியார்.
தமிழ்த் தாயின் தங்கம் மகன்:
அமைந்த மக்கள் திலகம் யுகன்.
அலைந் தலைந்த சேவைகள்,
அலுத்து ஓயா எம்ஜியார்,
புரட்சித்தலைவி பொறுப் பேற்க :
பொன் மனத்தார் கண்ணயர்ந்தார்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment