Wednesday, 30 April 2014

கொடியேறுது.

கொடியேறுது.

இரட்டை இரட்டை இலைகளாய்
பரந்து கொடிகள் பரவுது.
விந்திய மலைகள் தாண்டியும்
இந்தியாவில் துளிர்க்குது.

இமய மலையை மூடுது
எவரெஸ்ட் சிகரம் ஏறுது
தமிழனன்று நட்ட கொடி
தானுங்கண்டு வாழ்த்துது.

படர்ந்து படர்ந்து நிறையுது.
பார் முழுக்க படருது.
பாராளும் மன்றம் கண்டு
நாடாள விரையுது.

அய்யன் காம ராசரும்
அவர் காண நினைத்ததும்
மெய்யாகும் பசுமையும்
வைபவம் செய்யுதாம்`

அம்மா புகழ் பாடுது.
சிம்மாசனமும் நாடுது.
எம்ஜியாரின் நாடிது
என்றே கொடி ஏறுது.

கொ.பெ.பி.அய்யா.





Tuesday, 29 April 2014

வாராரு வாத்தியாரு






















வாராரு வாத்தியாரு வாராரு.!


வாராரு வாராரு 
வாத்தியாரு வாராரு 
வணங்காமுடி வீரரவர் 
வரிச காட்டி வாராரு.
சாட்டை கொண்டு சுழட்டியே
வேட்டையாட வாராரு.
புரட்சித் தலைவி ரூபத்திலே
புதுமை செய்ய வாராரு.

பட்டப் பகல் கொள்ளைகளை 
பட்டொழிக்க வாராரு.
வெட்டவெளி வீதிக் கொலை 
தட்டி ஒடுக்க வாராரு.
வன்கொடுமைக் கற்பழிப்பு 
இன்னல் நீக்க வாராரு.
பெண்ணடிமை செய்வோரை 
பிச்செறிய வாராரு.

ஊழல்செய்யும் பேயர்ககளை
ஓட்டத்தானே வாராரரு
கூலிப்படை நாய்களையும் 
காலிசெய்ய வாராரு.
பொய்யரசியல்ப் பித்தர்களைப் 
புறம்போக்க வாராரு..
கையூட்டுக் கள்வர்களைக் 
களையெடுக்க வாராரு..

சுயநலக் கூட்டத்திற்கு 
சூடு வைக்க வாராரு..
சுரண்டும் பேர்வழிகளுக்கு 
கரண்டு வைக்க வாராரு..
பதுக்கும் கொள்ளைத் திருடர்களை 
ஒதுக்கி வைக்க வாராரு..
பணம் பறிக்கும் பாவிகளை 
இனம் பிரிக்க வாராரு..

காமவேட்டைக் கயவர்களை 
காவு கொள்ள வாராரு..
பாவச்செயல் பாவிகளை
ஆவிபோக்க வாராரு.
ஊதாரிக் கூட்டங்களை 
ஒழித்துக்கட்ட வாராரு.. 
நீதிவழி நியாயங்களை 
நிலை நாட்ட வாராரு..

ஈழத் தமிழ் மக்களுக்கு 
தோள்கொடுக்க வாராரு..
வீரம் போற்றும் வீரருக்கு
வாள்கொடுக்க வாராரு..
ஈனங்கொண்ட எதிரிகளை 
வேரறுக்க வாராரு..
மானம் போற்றும் தமிழினத்தை 
மகுடமேற்ற வாராரு..

புரட்சித் தலைவி பேரிலே
புரட்சித்தலைவர் வாராரு.
கனக்கும் நம்ம  சுமை இறக்கக்
கட்டாயம் வாராரு..
கணக்குப் போட்டு வாராரு.
காலம் இது வாராரு.
கணக்குத் தீர்க்க வாராரு
காவல்காரன் வாராரு.

கொ.பெ.பி.அய்யா.




மின்னல்கள்

மின்னும் நட்சத்திரம்.

மின்னல் மின்னும்  நட்சத்திரம்
விண்ணில் மின்னும் நட்சத்திரம்.
என்ன நீங்கள்  அதிசயம்.

எமக்கும் மேலே எத்தனை தூரம்?
எம்மோட உலகில்  உம்மைப் போலே
உம்போல் மின்னும் வைரம் எவரோ!!

எம்ஜியார் ஜெயா எனும் மீன்கள்
எந்நாளும் மின்னும் தாரகைகள்.
ஏழைகளின் விடி வெள்ளிகள்.

இரட்டை இலைகள் தாம் நீங்கள்
என்றும் பசுமை தாம் நீங்கள்.
மிரட்டும் இருளின் ஒளி நீங்கள்.

கொ.பெ.பி.அய்யா.

எம்ஜிஆர் புகழ் மந்திரம்.

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தார் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.

வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.

கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—இறைவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தான்.

மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.

இருந்த போது இழித்தோரே—உயிர்
துறந்த போது விழித்தாரே.
இன்றும் உன் முகம் பாடாமல்—நாள் 
ஒன்றும் விடிவதும் இல்லையே!

மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
உறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!

கொ.பெ.பி.அய்யா.  

 .
http://aiadmkpaadalkal.blogspot.in/




Monday, 28 April 2014

சவால்.

சவாலுக்கு சவால்.

நல்லார்க்கு நல்லாராம்
வில்லற்கு வல்லாராம்
கள்ளர்க்குப் பொல்லாராம்
கல்லாற்கும் சொல்லோராம்
உள்ளாரும் ஒருவராம்
எல்லாம் அவர் அம்மாவாம்.

சேவலுக்கு சேவலாம்
கூவிடும் துணிச்சலாம்      
தூவலுக்குச் சீறலாம்
மேவிடும் அணிகளாம்
சவாலுக்கு சவாலாம்
காவல் அவர் அம்மாவாம்.

தீவினை அழிக்கவே!
தீர்வினை ஏற்றவே!
நாவினை அடக்கவே!
நஞ்சுரை மடக்கவே!  
நேர்வினை அம்மாவே!
நேர்ந்திட்டார் புரட்சியார்.

பொய் மொழி வழக்குகள்
புறமுதுகு காட்டாமல்
மெய்வழி வழக்கிலே
மெய்ப்பித்து நிறுத்தியே
வையத்துள் புகழ் ஓங்க
ஆண்டம்மா நிலை செய்தார்.

கொ.பெ.பி.அய்யா.



காந்த சக்தி.

காந்த சக்தி.

இனிக்கும் தமிழ் அறிஞரின்
இதயக் கனி எம்ஜியார்.
கழகத்தின் காந்த சக்தி
கலைச் செல்வன் புரட்சியார்.

முகம் காட்டக் குவியும் கோடி
தகும் ஒட்டு எம்ஜியார் தேடி
அரசியல் அழகு கண்டார்.
அண்ணா கண்ட தம்பியவர்.

வற்றாத ஜீவ ஆறு,
பொற்றாமரை எம்ஜியாறு,
பொன் மனச் செம்மலவர்:
மென் குணத்து வள்ளலவர்.

சிலை அழகுக் கலை என்பார்.
கலை அழகு எம்ஜியார்.
அண்ணாவின் நம்பிக்கை :
எண்ணம் போல் காமராஜர்.

தலைவர் அண்ணா புகழ் விளங்க,
கழகம் கண்டார் எம்ஜியார்.
தமிழ்த் தாயின் தங்கம் மகன்:
அமைந்த மக்கள் திலகம் யுகன்.

அலைந் தலைந்த சேவைகள்,
அலுத்து ஓயா எம்ஜியார்,
புரட்சித்தலைவி பொறுப் பேற்க :
பொன் மனத்தார் கண்ணயர்ந்தார்.

கொ.பெ.பிச்சையா.

Sunday, 27 April 2014

நானும் அவர்போலே.

நானும் அவர் போலே!

என்னுறவே என்னுயிரே
எண்ணுவதும் உன்னலமே!
தமிழினமே தாய் மனமே!—இந்த
தாயும் நான் உனக்காக.

நாதி என்று சொல்லிக்கொள்ள
சாதி இந்தத் தமிழ்தானே!
மீதி என்ன வேறெனக்கு?—தமிழே
போதும் உந்தன் அரவணைப்பு.

சந்தியா ஜெயராமன்
தந்த மகள் ஜெயலலிதா
இந்தியா என்றாலும்—எந்தன்
தமிழ்தானே எனையாளும்.

தமிழ்தானே தாயெனக்கு
தாய்தானே நானுனக்கு.
வேறென்ன உறவிருக்கு?-வேறு
யாரென்ன துணையிருக்கு?

தாய் தந்த தமிழ் பாலே
சேய் எந்தன் உயிர் நாளே!
வாழ்வதும் நான் யார்க்காக?—என்
வாரிசான உனக்காக.

தந்தை வழி தமிழ்வழியே!
எந்தன் வழி அவ்வழியே!
சிந்தை எல்லாம் நீதானே—எனது
சிறப்பு எல்லாம் நீதானே!

என்னுடைய சொத்தே நீ!
என்னுடைய சுகமே நீ!
தமிழே என் சந்ததியே!-தமிழ்
தாய் மடியே தானெனக்கே!


எனக்குத் தலைவர் எம்ஜியார்
எதை எடுத்துப் போனாரோ!
தனது சொந்தம் தமிழென்றார்.-அது
எனது சொந்தம் தானன்றோ!

கொ.பெ.பி.அய்யா.


http://aiadmkpaadalkal.blogspot.in

Saturday, 26 April 2014

நன்றி சொல்லுவோம்


















நன்றி சொல்லுவோம்.

நன்றி சொல்லுவோம் நாமே வெல்லுவோம்
நமக்குள் நாமே நன்றி கொள்ளுவோம்.
நாளையப் பாரதம் நமது கைகளில்
வேளை வந்தது விடியல் காணுவோம்.

எம்ஜியார் படைத்ததும் இயக்கம் வென்றதும்
இரட்டை இலையதும் புரட்சி என்பதும்
தமிழன் உயர்ந்ததும் தரணி ஆள்வதும்.
தர்மம் ஜெயமெனப் பரணி பாடுவோம்.

தென்திசைக் கோடியும் விண்மிசை ஏறியும்
பண்ணிசைப் பாடியும் பரவசம் கூடியும்
வெற்றியை முழக்கியும் சுற்றியே கூவியும்
பற்றினோம் நடுவணை முத்தமிழ் சூடியும்.

கட்டியம் கூவிடும் நிச்சயம் ஒலிக்குது
சத்தியம் மேவிடும் பச்சையம் ஒளிருது.
சத்தியா சந்தியா அன்னையர் குலவைகள்
சத்தமாய்ப் பாடிடும் சங்கீதம் கேட்குது.

ஜெயம்ஜெயம் என்றங்கே ஜெயம்பாடும் வாழ்த்துக்கள்
பயமறியாப் பாவையவள் பாரதத்தாய் ஏற்புகள்.
ஜெயலலிதா எங்கள்தாய் தமிழகத்தின் நம்பிக்கை
புயம்தாங்கி ஏற்கிறாள் பிரதமராய்த் தன்சுமை.

கொ.பெ.பி.அய்யா.


Friday, 25 April 2014

தங்கக் குணத்தான்.

தங்கக் குணத்தான்.

தங்கக் குணத்தான் தாராள மனத்தான்.
திங்கள் முகத்தான் தேனான அகத்தான்.
தங்கத் தாரகை நெஞ்சத் திருப்பவன்
எங்கள் எம்ஜியார் என்றும் புகழிருப்பான்.

அன்றவன் காட்டிய இரட்டை விரல்கள்.
நின்றெம் வாழ்வில் புரட்டும் இடர்கள்`
வென்றவன் ஏற்றிய புரட்சிக் கொடிகள்
என்றுமே போற்றிப் பறக்கும் புகழ்கள்.

பஞ்சம் விரட்டிய அன்னக் கனவு.
நெஞ்சம் நிரம்பிய அம்மா உணவு.
மிஞ்சும் தமிழகம் இந்திய மண்ணில்
அஞ்சா மனத்தினள் அம்மா செயல்கள்.

உன்வழி தொடர பின்வழி அம்மா.
நன்வழி படர உன்மொழி கொள்வம்.
என்றும் மறவா மந்திரம் அய்யா!
எம்ஜியார் புகழே நிரந்தரம் அய்யா.

கொ.பெ.பி.அய்யா.  



விடி வெள்ளி.

விடிவெள்ளி அம்மா.

அம்மா நலம் வாழ இறையருள வேண்டும்--நிரந்தரம்
இம்மா நிலம் ஆள தமிழருள வேண்டும்.
எம்முள் உரமாக தாயருள வேண்டும்---எமக்கு
உம்முள் வரமாக வாழ்வருள  வேண்டும்.
  
இல்லறம் துறந்த கோமள வள்ளி அம்மா--வாழ்வில்
சொல்லறம் சிறந்த நேர்மனப் புள்ளி அம்மா.
வெல்லறம் துணிந்த போர்க்குண வல்லி அம்மா--அரசியல்
நல்லறம் புரிந்திடும் சீர்விடி வெள்ளி அம்மா.

எம்ஜியார் கனவினை நிறை செய்யும் அம்மா--நெஞ்சில்
எம்முயிர் நினைவினை சுமை கொஞ்சும் அம்மா..
தன்னல உணர்வினை சிறை வைத்த அம்மா---என்றும்
எம்நலம் வினையினை அமைவித்த அம்மா.

சுய நலம் சுரண்டி சரிந்திட்ட மண்ணை--அம்மா
புய பலம் கொண்டு உயர்த்தினார் இன்னை
இட வலம் கண்டு இயக்கியும் அரசை--அம்மா
நெடு வளம் வென்று நிறுத்தினார் வரிசை.


கொ.பெ.பி.அய்யா.
  



Wednesday, 23 April 2014

ஜெயம் ஜெயமே

தனியொரு அகராதி.

ஜெயம் ஜெயம் என்றால் ஜெயலலிதா
ஜெய சக்தி என்பதும் ஜெயலலிதா.
பயம் பயம் என்று மிரள்வோற்கும்—பயம்
திருத்தும் அருள்முகம் ஜெயலலிதா.

பயம் என்ற சொல்லும் பயந்தோடும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை.-அதன்
பழக்கம் அறிவதும் வழக்கமில்லை.

அம்மா என்றோர் மொழி யுண்டு.
அம்மாவுக் கென்றோர் வழி யுண்டு.
அச்சமும் பயமும் ஜெயம் மொழியில்
அப்படி எதுவும் கிடையாது.

பிறந்தோம் என்பது உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் அவசியம்.—அந்த
அவசியம் தொலையும் பயம் இருந்தால்.
அம்மா ஜெயம்தான் வரலாறு.

குடும்பம் என்றொரு தன்னலம் துறந்து
தடையாய் நிற்கும் அச்சமும் மறந்து
கடமை உணர்ந்த அம்மாவே.பொதுவாழ்வு
உடமை யாகினள் தமிழுக்கே அகவாழ்வு.

அம்மா தானொரு அகராதி நூலே!
அம்மா என்பதன் பொருளும் போலே!
அச்சமும் பயமும் ஜெயமிடம் இல்லை.
அவசியம் என்பதும் இனியென்ன வேலை.


கொ.பெ.பி.அய்யா.

அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின் புகழ் பாடும்
இசை வட்டுகளாக்கிப் பரப்புவீர்.

Tuesday, 22 April 2014

இரட்டை இலை ஓட்டுக்காரி.

ரெட்ட இலை ஒட்டுக்காரி

ரெட்ட மாட்டு வண்டிக்காரா!
ரெட்டப் பனை புஞ்சக்காரா!
ரெட்ட மலை ஊருக்காரா!
ரெட்ட இலை ஓட்டுக்காரா!
ஓட்டுப்போட ரெட்ட இலைக்கு
ஓடுறேன் ரெட்ட மீசைக்காரா!.

ரெட்ட இலை கொண்டக்காரி!
ரெட்ட மடை பண்ணக்காரி!
ரெட்ட ஜடை பின்னல்காரி!
ரெட்ட இலை ஒட்டுக்காரி!
ஓட்டுப்போட ரெட்ட இலைக்கு
ஓடிவாறேன் சேலைக்காரி!.

நீயும் நானும் ரெட்ட இலை
நேரம் பாரு அம்மாங்காரா!
ஆணும் பெண்ணும் ரெட்ட இலை.
அர்த்தம் அது ரெட்ட இலை.
வெற்றி இலை வெற்றிலை
குத்து ஓட்டு ரெட்ட இலை!

நானும் நீயும் ரெட்ட இலை
வேணும் அம்மா வெற்றி நிலை
காணும் தூரம் ரெட்ட இலை
காட்சி தானே ரெட்ட இலை
வீசுது பார் வெற்றி அலை
வெற்றி என்பதே ரெட்ட இலை.

கொ.பெ.பி.அய்யா.

அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின் புகழ் பாடும்
இசை வட்டுகளாக்கிப் பரப்புவீர்.



இரட்டை இலைக்கோலம்

இரட்டை இலைக் கோலம்.

வாசல் எங்கும் இரட்டை இலைக்
கோலம் பாருங்கள்.—அது
பாசமுள்ள பச்சை வண்ணம்
ஜாலம் பாருங்கள்.
கோலம் போடும் கன்னியரின்
எண்ணம் கேளுங்கள்—நல்ல
காலம் கூறும் வண்ணமதன்
திண்ணம் கேளுங்கள்.

பின்னல் ஜடை பின்னலிலே
என்ன பாருங்கள்.—பச்சை
வண்ணமதில் இரட்டை இலை
சின்னம் பாருங்கள்.
இரட்டை இலை சூடிக்கொண்ட
வண்ணம் கேளுங்கள்.—பசுமை
வரட்டும் எனப் பாடுகின்ற
பண்ணும் கேளுங்கள்.

கருப்பு சிவப்பு இடையே தூய
வெள்ளை பாருங்கள்.-தமிழன்
கருத்து சிவந்த உடன்பிறப்பின்
உள்ளம் பாருங்கள்.
சட்டமான வண்ண ஓரம்
வகையைக் கேளுங்கள்.—அம்மா
திட்டம் நிறை தீர்கமெனும்
ஞானம் கேளுங்கள்.

கொ.பெ.பி.அய்யா.

அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின் புகழ் பாடும்
இசை வட்டுகளாக்கிப் பரப்புவீர்.
/



தங்கத்தாரகை.

தங்கத் தாரகை.

தங்கத் தாரகையே!
சிங்கப் போரழகே!
சங்கத் தமிழ்மணமே!
எங்கள் உயிர்வரமே!

எங்கள் குலவிளக்கே!
பெண்கள் நலஒளியே!
நம்பிக்கை நடுநிலையே!
நாட்டுக்கு விடிவழியே!

உண்மையின் உறைவிடமே!
நன்மையின் பிறப்பிடமே!
வீரத்தின் விளைவிடமே!
தீரத்தின் தலைவிடமே!

தைரியம் எனும் புகழே!
தமிழினத் தலைமகளே!
நம்பிக்கை நாயகியே!
நல்வழிப் பேரொளியே!

அம்மா எனும் பொருளே!
அன்பின் திரு வடிவே!
புரட்சியின் விளக்கமே!
புரட்சியார் ஒளிவிளக்கே!

ஜெயம் ஜெயம் எனும் மொழியே!
ஜெய லலிதா தனி நிலையே!
இலை இலை இரட்டை இலை
இலை இலை இரட்டை நிலை.

கொ.பெ.பி.அய்யா.


http://aiadmkpaadalkal.blogspot.in/



  

Monday, 21 April 2014

வீறு கொள்ளுவோம்.


வீறு கொள்ளுவோம்.

வெற்றி வெற்றி என்றே வீறு கொள்ளுவோம்.
சுற்றி சுற்றி வென்றே பாரு வெல்லுவோம்..
கொட்டிக் கொட்டி கைகள் கொட்டி குலவை செய்யுவோம்.
தட்டித் தட்டி தாளம் தட்டி தமிழை வாழ்த்துவோம்.
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

அம்மா அம்மா அம்மா என்றே ஆடிப் பாடுவோம்.
அவர் புகழை ஓட்டுக்களாய் அள்ளிப் போடுவோம்.
சும்மா சும்மா சுயநலமாய் ஆடும் கூட்டத்தை
சுழி போட்டுப் பூஜ்ஜியமாய் விரட்டக் கூடுவோம்.
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

வல்லரசு இந்தியாவை வடிவில் காணுவோம்.
நல்லரசு தமிழகத்தில் நாளும் பேணுவோம்.
ஈழரசு இலங்கை மண்ணில் ஏற்றி ஊணுவோம்.
ஈழத்தோடு தமிழ் இணைந்து நட்பில் தோணுவோம்.
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

வறுமை எனும் கோடழித்து வளமை பெருக்குவோம்.
சிறுமை எனும் கேடழித்து சீர்மை செதுக்குவோம்.
அரசு எனும் எந்திரத்தை ஆய்ந்து தேற்றுவோம்.
தரிசுபட்ட செயல் செழிக்க தரத்தை ஏற்றுவோம்.  
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

நதிகள் எல்லாம் கைகோர்த்து ஒன்று கூடுமே!
விதிகளிலே வேளாண்மை நின்று ஆளுமே!
வணிகமான கல்வியுடன் மருத்துவம் தானே
மனிதம் வாழ புனிதமாகி சேவை ஆற்றுமே!
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

கொ.பெ.பி.அய்யா.




Sunday, 20 April 2014

கும்மி

கும்மி

கும்மி அடி பெண்ணே கும்மி அடி.
குலவை பாடி கும்மி அடி.
அம்மா ஜெயிச்சு வாரான்னு
ஆடிப்பாடி கும்மி அடி.

அம்மா ஆட்சி நடக்குதுன்னு
அணிவகுத்து கும்மி அடி.
அடைச்சு வச்ச காவேரியை
அவுத்து விட்டான்னு கும்மி அடி.

ஆம்பளைங்க ஆண்டாங்க
அடங்கித்தான நின்னாங்க
பொம்பளதான் எங்கம்மா.
புலியாப் பாஞ்சானு கும்மி அடி.

பாவிப்பயல் ராஜபச்சயை
பதற வச்சதச் சொல்லியடி.
பூமியெல்லாம் நியாயம் சொல்ல
புரிய வச்சான்னு கும்மியடி.

மத்தி யென்ன பேரரசா
சுத்தி கொண்டு அடிச்சாளே!
பாவம் மக்கள் பேருயிரை
பாது காத்ததைப் பாடியடி.

ஆணு என்ன பெண்ணு என்ன
அம்மான்னு சொன்னா அதுருதுல்ல.
ஆளும் தகுதி அம்மாவுக்கே
ரெட்டலை காட்டிக் கும்மியடி.

கொ.பெ.பி.அய்யா.




Saturday, 19 April 2014

யாருக்காக அம்மா

யாருக்காக அம்மா?

அம்மா அக்கா தங்கச்சியே
ஓட்டுப் போடுங்க.
அய்யா அண்ணே தம்பிகளே
ஓட்டுப் போடுங்க.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

அஞ்சு வருடம் கழித்துத்தானே
தேர்தல் வருகுது.
கொஞ்சம் நாமும் யோசிச்சாத்தான்
தெளிவு புரியுது.
ஓட்டுப் போட போகுமுன்னே
வீட்டப் பாருங்க.
நாட்டுக்கான நல்லவங்க
நினைச்சுப் பாருங்க.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

என்ன என்ன தேவைகளோ
எல்லாம் தந்தாங்க.
இன்னும் என்ன வேணுங்களோ
எண்ணிச் செய்வாங்க.
யாருக்கென்ன தேவையின்னு
யோசிக் காங்கம்மா.
உசுருக்கென்ன வேணுமுன்னு
உணரு ராங்கம்மா.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

யாரை நம்பி அம்மா இங்கே
வாழு றாங்களோ!
யாருக்காக அம்மா இங்கே
யோசிக் காங்களோ!
வேறு யாரு அம்மாவுக்கு
உறவு சொல்லுங்கோ!.
நேரே நாதி அம்மாவுக்கு
நீங்கதானுங்கோ!
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

அம்மாவோட உசுரு எல்லாம்
அதுவும் நீங்கதான்.
அம்மாவோட உடமையெல்லாம்
அதுவும் நீங்கதான்.
யாருக்காக சேர்த்து வச்சு
கொடுக்கப் போறாங்க.
ஊருக்காக உழைக்கத்தான
ஒட்டுக் கேக்காங்க.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

கொ.பெ.பி.அய்யா.


Friday, 18 April 2014

நமது கழகம்

கழகம் கழகம்

கழகம் கழகம். பெரியார்
கழகம் கழகம்.
கழகம் கழகம்.அண்ணா
கழகம் கழகம்.
கழகம் கழகம்.எம்ஜியார்
கழகம் கழகம்.
கழகம் கழகம்.அம்மா
கழகம் கழகம்.

அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் கழகம்.
அண்ணல் பெரியார்
அண்ணா வழியில்
பின்னாள் எம்ஜியார்
இந்நாள் அம்மா.
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் கழகம்.

மக்கள் சேவை மகேசன் சேவை
மனதில் தூய்மை மொழியில் வாய்மை
நாடே வீடு நலமே பாடு
ஊரே உறவு ஒன்றே குடும்பம்.
யாரே என்ற வேற்றுமை இல்லை
அதுதான் கழகம் கழகம்
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் கழகம்.

சுயநலம் நாடும் சுதந்திரம் இல்லை
பொதுநலம் ஒன்றே பழகிடும் கொள்கை.
மக்கள் தலைமை மதிப்பவர் தொண்டர்.
அண்ணன் தம்பி பாசம் மட்டும்
அவரவர் கடமை பொதுவில் மட்டும்.
அதுதான் கழகம் கழகம்
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் கழகம்.

கொ.பெ.பி.அய்யா.





உரிமைக்குரல்.

உரிமைக்குரல்

கொண்டையிலே இரட்டை இலை
குண்டுக் குத்திப் போறப் பொண்ணே!
கண்டு வந்த மச்சானுக்கு
நிண்று சொல்லாம வேகமென்ன?

கச்சிக்கற வேட்டிகட்டி
கச்சிதமா வந்த மச்சான்
உரிமைக்குரல் எம்ஜியார
உரிச்சி வச்சி அசத்துறய.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா
அப்படித்தான் அம்மாளம்மா.
வாத்தியாரு பொருத்தமாத்தான்
வடிவழகே சொலிக்கிறியே!

ஓட்டுப்போட போறேன் மச்சான்
வீட்டக்கூட பூட்டலயே.
கள்ள ஓட்டுக் குத்துமுன்னே
நல்ல ஓட்டுப் போடப்போறேன்.

நானும் கூட அதுக்குத்தானே
மானே உன்னத் தேடி வந்தேன்.
எனக்குமுன்னே முந்துறயே
ரெட்ட இலை சுந்தரியே!

நீயும் நானும் சேர்ந்தது போல்
வானும் மண்ணும் வாழ்வதுபோல்.
ரெட்ட இலை நமது சின்னம்
கட்டி அது ஆளும் திண்ணம்.

சரியாத்தான் சொன்னயடி
சமத்துக்காரி பெண்ணே நீ!
ஏழைகளின் சின்னமடி
எம்ஜியாரின் ரெட்ட இலை.

கொ.பெ.பி.அய்யா.



 

வெற்றித் தாலாட்டு.

வெற்றித் தாலாட்டு.

கண்ணே கண்மணியே
பெண்ணே பெண்ணரசியே
பெருமை கொண்டு கண்ணுறங்கு.
அம்மா அவள் வெற்றிகொண்டாள்.
அன்பு மகள் கண்ணுறங்கு.

பெண்ணாகப் பிறந்த அம்மா
பேர்கொண்ட பெருமையடி
எண்ணி நீயும் கண்ணுறங்கு.
இன்னும் என்ன எண்ணமடி
அன்னம் நீயும் கண்ணுறங்கு.

பெண்ணவளின் தன்னுறுதி
பெண்குலத்தின் சின்னமடி
சின்ன வளே கண்ணுறங்கு.
முன்னம் அம்மா செல்லும்வழி
பின்னம் செல்ல கண்ணுறங்கு.

தைரியத்தின் லட்சணமாம்
தமிழகத்தின் தாரகையாம்.
தாயிருக்காள் கண்ணுறங்கு.
வைரம் கொண்ட உறுதியம்மா
வாழ்வளிப்பாள் கண்ணுறங்கு.

துஞ்சாத நெஞ்சமடி
அஞ்சாத ஜெயலலிதா
தஞ்சமடி கண்ணுறங்கு.
காலமது கைகொடுக்கும்
கண்ணே நீயும் கண்ணுறங்கு.


கொ.பெ.பி.அய்யா.

Thursday, 17 April 2014

அழகா அழகா!

அழகா!அழகா!

தங்கக் குணத்தழகா!
தாமரை முகத்தழகா!
திங்கள் ஒளியழகா!
சிங்க நடையழகா!!

சிங்காரச் சிரிப்பழகா!
சீர்திருத்தப் பொறுப்பழகா!
மங்காத பேரழகா
மக்களின் சீரழகா!

மெய்யுரைச் சொல்லழகா!
மெய்யொளிப் பொன்னழகா!
நெஞ்சு நிறை நேரழகா!
கொஞ்சுமொழி பேச்சழகா!

கரம்சிவந்த கொடையழகா!
உரம்கொண்ட படையழகா!
அறம் கவர்ந்த மனசழகா!
திறம் துணிந்த அரசழகா!

புரட்சிப் புயல் தலைவழகா!
அறிஞர் அவர் வழியழகா!
தமிழாட்சி முறையழகா!
தர்மத்தின் நெறியழகா!

இரட்டை இலை படைப்பழகா!
புரட்சித்தலைவி குருவழகா!
தன்னலம் தெறித்த தனியழகா!
நந்நலம் உரித்த மனிதழகா!

எம்ஜியாரெனும் புகழழகா!
அம்மா இதயக் கனியழகா!
அம்சம் கோவில் தேரழகா!
அம்சம் தமிழின் ஊரழகா!

தொடரும் ஆட்சி திருவழகா!
படரும் எம்ஜிஆர் அருளழகா!
மண்ணும் தமிழும் நினைவழகா!
மின்னும் பொன்மனம் அரசழகா!


கொ.பெ.பி.அய்யா.


Wednesday, 16 April 2014

ஆறாவது முறை.

ஆறாவதாக நூறாவது.

தமிழே தாயே நலம் வாழ்க!-புரட்சித்
தலைவி உமது புகழ் வாழ்க!
வீர நாச்சி பெண் வடிவில்--வீரம்

கூற மண்ணில் வந்தவரோ!

நாடே நலமே உயிரம்மா-நாளும்
பாடே தவமே எமக்கம்மா!
வீடே உறவே தமிழம்மா!-வாழும்
வாழ்வே வரமெம் தயவம்மா..

ஆறாவது ஆட்சி ஆளும் முறை-காணும்
நூறாவது நீட்சி நாளும் நிறை.
பேராகுங் காட்சி ஆண்டும் நூறை-ஆகும்
நேராகும் மாட்சி சூழும் பறை.
கொ.பெ.பி.அய்யா.. 

தமிழகம் தலைநிமிர்ந்தது

தமிழகம் தலை நமிர்ந்தது.

தமிழகத் தாயே நீ வாழ்க-நின்
தன்னிகரில்லா தன்மானம் வென்றது.
காவிரித்தாயே வா வா-இரு
கரை நிறப்பி வளமே தா,தா..

அரசிதழ் வெளியீடு அம்மா உன்
அபாரச் சாதனை அல்லவோ
காவிரி மேலாண்மை அம்மா-உன்
கருணைக்கு அடையாளம் சொல்லவோ!

தேவைக்குத் தீர்வது செய்யட்டும்-உன்
தீர்க்கத்தின் முயற்சிகள் உய்யட்டும்.
திருவினைகள் மழையாகிப் பெய்யட்டும்-உன்
தாயுள்ளம் தமிழ் புகழ் கொய்யட்டும்.

நஞ்சை நனையட்டும்!நாடு செழிக்கட்டும்!.
நெஞ்சின் ஈரம்போல் நித்தியம் கொழிக்கட்டும்!
தஞ்சை சேறானால் தமிழுக்குச் சோறுண்டு.
அஞ்சா நெஞ்சமே அம்மா உன் பேருண்டு.

வேளாண்மை வாழட்டும்!தாளாண்மை கூடட்டும்!
ஆளும் காலம் நீளட்டும்!அம்மா கரம் உயரட்டும்!.
அம்மா என்றால் சும்மாவா!அசத்தி விட்டாய் நீயம்மா!
செம்மாந்து தமிழ் நிமிர்ந்து சிறக்க வைத்தாய் தாயம்மா!

பிறந்த நாள் பரிசாக பெற்ற பெரும் பரிசம்மா.
சிறந்த நல் தீர்ப்பம்மா செழித்தது தரிசம்மா.
வையகம் உள்ளவரை வாழும் உன் புகழம்மா! .
வாழ்த்தும் மெய் சொல்லாண்டு வாழ்க நீ பல்லாண்டு!      

கொ.பெ.பி.அய்யா.





இரட்டை இலைகள்

இரட்டை இலை.

இரட்டை இலை அது பச்சை இலை.
வெற்றி என்பதன் இரட்ச இலை.
அம்மா உயர்த்தும் வலக்கரத்தில்
அழகாய் துளிர்த்த புரட்சி இலை.
(இரட்டை இலை)

குழந்தைகள் பசியை தீர்த்த இலை.
குடிசைக்கு ஒளியை கொடுத்த இலை.
கல்விச் சாலைகள் நிறைத்த இலை.
கல்வியில் முழுமை கண்ட இலை.
(இரட்டை இலை)

ஏழைக்குத் தாலி வழங்கும் இலை.
வேலைக்கும் தேடி முழங்கும் இலை.
தேவைகள் அறியத் தேடும் இலை.
சேவைகள் புரிய நாடும் இலை.
(இரட்டை இலை)

முதியோர் கவலை முறித்த இலை.
முதுமை மறக்கச் செய்த இலை.
பாசம் காட்டும் நேச இலை.
வாசம் கூட்டும் வள்ளல் இலை.
(இரட்டை இலை)

சுயமாய் பெண்களை நிமிர்த்த இலை.
நயமாய் வாழ்ந்திடச் செய்த இலை.
பயமின்றி தமிழகம் காத்த இலை;
தயவுடன் தாய்மனம் கொண்ட இலை.
(இரட்டை இலை)

இருளை விரட்டி ஒளிரும் இலை
திருடரை அகற்றி மிளிரும் இலை.
அருளை நிறைத்து அமைந்த இலை’
திருவை உயர்த்தி தேர்ந்த இலை.
(இரட்டை இலை)


அனாதைச் சொல் அழித்த இலை
அபலைகள் வாழ்வு காத்த இலை.
தொட்டில் திட்டம் தொடரும் இலை
பட்டி தொட்டி படரும் இலை.

(இரட்டை இலை)

கிராம ராஜ்ஜியம் அமைத்த இலை.
கிராமச் சாலைகள் இணைத்த இலை
சிரமங்கள் ஒழித்த அருமை இலை
கிராமங்கள் தழைத்த பெருமை இலை.
(இரட்டை இலை)



கொ.பெ.பி.அய்யா,