Tuesday, 8 April 2025

இளைய புரட்சித்தலைவர்

இளைய புரட்சித்தலைவர்.

இளைய புரட்சித் தலைவராமவர்.
எடப்பாடி தந்த எழுச்சியாராமவர்.
புதிய புரட்சிப் புயலாமவர்-தமிழக
விதியைப் புரட்டும் எடப்பாடி யார்.

பழத்தின் புரட்சி பழனிச்சாமி,
களத்தின் எழுச்சி நாயக சாமி ,
புண்முறுவல் பூக்கும்  புரட்சித் தலைவன்-புதுமைக்
கண்முன் காட்சி எடப்பாடியார்.

அம்மா கண்ட உதய மணியாம்
நம்மக் கழகம் இதயக் கனியாம்.
சும்மா இல்லை மனிதர் அவர்-எதிரி
சுளுக்கை எடுக்கும் எடப்
பாடி யார்.

சிரிப்பே அவர் மெய் போராயுதம்,
குறிப்பில் எதிர்விடும் சூலாயுதம்,
எதிர் வினையாளன் தானே பணிவான்-பலம்
பாதியைப் பறிப்பார் எடப்பாடியார்.

விவசாயி சேனை தானைத் தலைவன்.
அவசியம் எதுவென அறிந்த உழவன்.
அவதார புருசன் தமிழ் மண் புதல்வன்-நிரந்தரம்
அவரே முதல்வன் எடப்
பாடியார்.

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment