பிழைப்புக்காக அல்ல!
பிழைப்பதற் கல்லடாஅதிமுக,
பிறப்பி லிருந்து நான் அதிமுக;
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவியர்,
திருவென அதிமுக என் உயிரடா!
வாழும் பூமி எனக்கிதுதான்.
அலையும் தேவை எதற்கடா?
பழகிய சொந்தம் துறப்பாரோ!
விலகியும் நெஞ்சம் பறப்பாரோ!
உண்ட வீட்டிற்கு இரண்டகமா!
கண்ட வாழ்விற்கு வஞ்சகமா!
நன்றி மறந்தார் நஞ்சகமா!
கொண்டு அலைவார் பாவமடா!
குறைந்தாலும் நிறைந்தாலும்
நிறைந்த குளமென் மனமடா!
பிறப்பு என்பது ஒருமுறைதான்:
சிறப்பு எனக்கது அதிமுகதான்.
கடைநிலைத் தொண்டு ஊழியனும்,
முதல்வர் ஆகும் சனநாயகம்.
அலையும் எண்ணம் விலைபோகும்:
நிலையெங்கு செல்லும் அய்யோடா!
வாழும் வரையும் தொண்டன்டா!
சாகும் நிறைவும் நிற்பேன்டா!
ஆளும் அதிமுக ஆட்சிதான்:
காலம் வெல்லும் நீட்சி தான்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment